9-ம் பாவம். ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய பாக்கியங்களைக் கூறும் இடம். ஒவ்வொரு பாவத்திற்கும் அதனின் 9ம் பாவம் அந்த பாவத்திற்கு பாக்கியஸ்தானம் ஆகும். ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு 9ம் இடமே பாதக ஸ்தானம் ஆகும்.
ஆண்களுக்கு தந்தை வழியில் ஆதரவு இருக்காது. பாக்கியங்களுக்காக போராடுவார். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரஸ்னை இருக்கும். ஆண் வாரிசு பிரச்சினை. வயாதான ஏழ்மையான பிராமணருக்கு உதவுதல் .
குருவிற்கு மூலத் திரிகோணம் வீடு தனுசு. அவருக்கு 2-3ம் வீடே சனி பகவான் வீடு.
தானம் தர்மம் தெரிந்தவருக்கு செய்வது அல்ல. அது கடமையிலும் சேராது. முகமறியா ஒருவருக்கு செய்வது தான் தானமும் தர்மமும் பலன் தரும்.
வயதானவர்கல், ஏழை எளியோர், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டோர், கண் பார்வை பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கு உதவுவது சிறப்பு.
சூரியன் – சந்திரன் – சுக்கிரன் – இம்மூன்றும் ஒளி கிரகங்கள். பலமிழந்தால் பார்வை குறைபாடு இருக்கும்.
சனியின் பார்வை பட்டால் பார்வையில் மந்தத் தன்மை ஏற்பட்டு விடும். கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் செய்வது சூரியன், சந்திரன், சுக்கிரன் பலப்படும்.
உடல் பலவீனம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல். வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.
தானத்தினாலும், குலதெய்வ , இஷ்ட தெய்வ வழிபாடே இவர்களுக்கான பாக்கியங்கள் செயல்படத் துவங்கும்.
சூரிய உதய வழிபாடும் தினமும் செய்ய வேண்டியது. அதன் பின் உதய நேரத்தில் தெய்வ விஸ்வரூப தரிசனம் செய்வதே பரிகாரம். குலதெய்வ அருள் கிட்டும்.
காலப்புருஷனுக்கு 9-ம் வீடு இஷ்ட தெய்வத்தைக் குறிக்கும். அதற்கு 9-ம் வீடு – குலதெய்வமாகும். இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்ய செய்ய – சூரிய வழிபாடே – குலதெய்வத்தை காண்பித்துக் கொடுக்கும். ( குலதெய்வம் தெரியவில்லை எனில்). 12ம் இடம் குருவீடு –
5-ம் இடம் = குலதெய்வம். 9ம் இடம் இஷ்ட தெய்வம். 12ம் இடம் பூர்வ ஜென்மம். அந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம். உபாசனை தெய்வம்.
12ம் அதிபதியும் செய்ய இயலாத கடமை (போன ஜென்மத்து )யை சுட்டிக் காட்டுபவர்.
பெண்களுக்கு ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்ன காரர்களுக்கு தந்தையுடன் வாழும் பாக்கியம் இருக்காது.
9-ம் இடம் : மேல்படிப்பு, தந்தையை பிரித்துவிடும். உயரதிகாரிகள் , பெரும்பணம் அடைவதில் தடை தாமதம். திருப்தியற்ற சூழ் நிலை அமையும்.
ஸந்திரன் ஏமாற்றுகிரகம். டீக்கடை, மளிகைக்கடை – சந்திரன் இடங்கள்.
சந்திரன் பாதிக்கப்பட்டால் மனசை பாதிக்கும். ஏமாந்து விட்டால் அது நிவர்த்தி.
9-ல் சூரியன்:
தர்ம சிந்தனை உடையவர். பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். ஆன்மீக நாட்டம் உண்டு. தந்தையை பிரிந்த வாழ்க்கை. கோபம் அதிகம்.
தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டு. நல்ல ஞானம் உள்ளவர். சுயமாக சிந்தித்து சொத்து சுகங்களை அடைவார்.
9-ல் சந்திரன்
கற்பனை வளமிக்கவர். பெண் தெய்வ வழிபாடு உண்டு. பயணத்தால் லாபம் உண்டு. தர்ம சிந்தனை உண்டு. ஜாதகர் பிறந்த உடன் தந்தைக்கு கடன், அல்லது ஊர் மாற்றம் அல்லது ஆரோக்கியம் கெடும். தாயாருக்கு கோபம் அதிகம். தந்தைக்கோ அல்லது ஜாதகருக்கோ கண் பிரஸ்னை, அல்லது ஏமாற்றம் ஒன்று உண்டு. ஜாதகருக்கும் தந்தைக்கும் கோபம் வராது. அதிகமாக கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ் க்ரீம் சாப்பிடுவார்கள்.
9-ல் செவ்வாய்
தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு உண்டு. சொத்து வழக்கு விபத்து உண்டு. இந்த அமைப்பு பெண் ஜாதகத்தில் இருந்தால் திருமணத்திற்குப் பின் கணவர், வெளியூர் / வெளி நாடு செல்வார். தந்தை அல்லது ஜாதகர் நீரினால் கண்டம். ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்கும். முன் கோபம் அதிகம். தீயவர்களின் சேர்க்கை அதிகம். தற்பெருமை கொண்டவர். உடம்பில் தழும்பு உண்டு. மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு உண்டு. குரு ஆசிரியர்களை விமர்சிப்பார். விவசாயத்தில் விரயம் அடைவார். அதீத தைரியம் இவருக்கு பாதிப்பை அளிக்கும்.
9-ல் புதன்
பேரும் புகழும் உண்டு. நல்ல அறிவாளி. நல்லொழுக்கம், நன்னடத்தை உண்டு. தந்தை வழியில் இரண்டு திருமணம் உண்டு. சங்கீதத்தில் நாட்டம். எதையும் கற்க வேண்டுமென்ற நாட்டம். செல்வ செழிப்பு உண்டு. நல் வழியில் வருமானம் ஈட்டுவார். சட்டம் பேசுபவர்கள். வியாபாரத்தில் ஆர்வம். எழுத்தாற்றல் உண்டு. அனைவரது நட்பையும் பெறுவார். திருமணத்திற்குப் பிறகு காதல் வரும். ஆன்மீக புத்தகம் வீட்டில் உண்டு. தந்தை (அ) ஜாதகர் எந்த பொருள் வாங்கினாலும் இரண்டு பொருளாக வாங்குவார்.
9-ல் குரு
தர்ம சிந்தனை உண்டு. பிறருக்கு உதவும் மனப்பான்மை உண்டு. தாயன்பு அதிகம். இறை உணர்வு உண்டு. பணிந்து நடப்பவர். தீயோருக்கும் நன்மை செய்ப்வர். வெளியூரில் வருமானம் அதிகம். உயர்கல்வி உண்டு. பொருளாதாரம் சிறக்கும். கல்வியறிவு சாஸ்திர ஈடுபாடு உண்டு. ட்ரஸ்ட் நாட்டம் அதிகம். கோயில் குளம் பராமரிப்பு, அனாதை விடுதி பராமரிக்கும் எண்ணம் இருக்கும்.
9-ல் சுக்கிரன்
பின்னாடி இருந்து அதாவது பிறரிடைய வழிகாட்டுதலால் முன்னேறுவார். கல்வி உண்டு பெண்களால் ஆதாயம் உண்டு. அலங்காரம் உள்ள தெய்வங்களின் சிறப்பு. பூரண சுகமுண்டு. களத்திரத்தின் மூலம் வருமானம் உண்டு. உல்லாச பயணங்களால் ஆதாயம். கலை ஆர்வம் மிக்கவர். ஆடை அலங்கார பொருட்களின் மீது நாட்டம். கண் நோய் உண்டு. தந்தை / ஜாதகர் கண்ணாடி அணிவார். நவீன வீடு ஆடம்பரமான வாழ்க்கை அமையும். தந்தை / ஜாதகருக்கு நருமணப் பொருட்கள் மீது நாட்டம்.
9-ல் சனி
இளைய வயதிலே குடும்பத்தில் இருந்து பிரிந்தவர். மனக் கசப்பான அனுபவங்களை உடையவர். தந்தை கடின உழைப்பாளி. குடும்பத்தில் கவலைகள் அதிகம். தாமத திருமணம் அல்லது தாமத முன்னேற்றம். தந்தை / ஜாதகருக்கு ஏமாற்றம் உண்டு. உறவினர்களை வெறுத்து ஒதுக்குவார். ஏமாற்றத்தை சந்திப்பார்கள். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தந்தை நேர்மையாக இருப்பார். அதனால் குடும்பத்தில் வறுமை, ஏழ்மை நிலவும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கும். எளிய *அ) முதிர்ந்த தோற்றம். திருப்பணிகள் செய்யும் யோகம் இருக்கும். முதலில் நாத்திகம் பேசி பின்னர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார்.
9ம் இடம் கெட்டாலோ / 9ம் அதிபதி கெட்டாலோ / தனுசு கெட்டாலோ மாற்று மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லுதல் – மத மாற்ற எண்ணங்கள் அதிகம் இருக்கும்.
9-ல் ராகு
பூர்வீக சொத்தில் வழக்கு ஏமாற்றம் உண்டு. அடிமைத் தொழில் செய்து ஜீவனம் செய்வார். தீய பழக்கம் கடன் உண்டு. தந்தை வழியில் விஷ ஜந்துவால் பாதிக்கப்பட்டவர் உண்டு. அதிகம் இன்ப சுற்றுலா செல்லும் எண்ணம் உண்டு. சுகாதாரப் பணிகளில் ஈடுபடுவார். கடவுள் / மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர். வருமானத்திற்கேற்ற செலவு உண்டு. பெண்களால் பாதிப்பு உண்டு. எதிர்காலம் பற்றிய கவலை உண்டு. தர்ம சிந்தனை அற்றவர். கடின சொல் பேசுபவர்.
9-ல் கேது.
தந்தைக்கு சிறப்பில்லை. துறவறம் ஞான சிந்தனை உண்டு. மனதில் உள்ளதை வெளியே சொல்ல மாட்டார். வறுமையான வாழ்க்கை. பாக்கியங்களை அனுபவிப்பதில் தடை. எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பார். ஆன்மீக குருமார்களின் ஆசி உண்டு. பெரும் பதவி கிடைக்காது. மன தைரியம் மிக்கவர். எளிய வாழ்வு பிடிக்கும். ஆண் வாரிசு தடை / தாமதம். நரம்பு சார்ந்த பிரச்சினை உண்டு. இதய பாதிப்பு, வெளியே தெரியாத கட்டிகள் மூலம் சார்ந்த பிரச்சினை உண்டு.
ராகு கொடுத்து பின்னர் கெடுத்து விடுவார். 9-ல் கேது பாக்கியங்களை அனுபவிப்பதில் தடை.
சூரியன் கோச்சாரத்தில் 9-ல் சஞ்ச்சரிக்கும் போது நிம்மதியின்மை, பணத்தால் பகை, நோய் உண்டு. கௌரவக் குறைவு உண்டு.
9-ல் சந்திரன் சஞ்சரிக்கும் போது தனக்குத் தானே எல்லை வகுத்துக் கொள்வார். மனதிற்குள் அச்சம். வயிற்?று வலி உண்டு.
9-ல் செவ்வாய் – ஆரோக்கிய குறைபாடு, தன விரயம். அலைச்சல்.
9-ல் புதன் – காரியத் தடை, வீண் பழி, அலைச்சல் உண்டு.
9-ல் குரு – புத்திர பாக்கியம் உண்டு. காரியங்களில் வெற்றி.
சொத்து சேர்க்கை. உறவுகளின் சேர்க்கை.
9-ல் சுக்கிரன் – பொருள் வரவு உண்டு தான தர்மங்கள் செய்வார். இன்ப வாழ்வு வாழ்வார்கள்.
9-ல் சனி – பொருள் இழப்பு, வறுமை, மனப்போராட்டம், ஆரோக்கியத்தில் குறைபாடு.
9- ல் ராகுவிற்கு செவ்வாயின் பலனும், 9-ல் கேதுவிற்கு சனியின் பலனும் சொல்க.
- 9ம் பாவம் நிறைவு –