ஜெனன ஜாதகத்தில் 7ம் பாவம் களத்திரஸ்தானம். 7ம் பாவத்தின் தன்மை, 7-ல் இருக்கும் கிரகங்கள் மற்றும் 7-ம் அதிபதியையும் பார்க்கும் கிரகம் இவற்றைக் கொண்டு ஜாதகரின் களத்திரம் பற்றி அறியலாம்.
ஆணிற்கு 7-ம் வீடு = பெண். பெண்ணிற்கு 7ம் வீடு = ஆண்.
பெண்ணிற்கு செவ்வாய், ஆணிற்கு சுக்ரன் களத்திர காரக கிரகம்.
7ம் வீட்டு அதிபதியை பார்க்கும் கிரகத்தின் பண்பும், 7ம் அதிபதியின் பண்பும் களத்திரத்திற்கு இருக்கும்.
சூரியன் – ஆளுமை, அதிகாரமுள்ள களத்திரம். 7ம் அதிபதி சிம்மத்தில் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும். சொத்து உண்டு. சூரியன் – வளர்ச்சிக்குண்டான கிரகம். 7-ல் சூரியன் இருப்பதால் திருமணத்திற்குப் பின் வளர்ச்சி. சூரியன் = ஆலயம். ஆலயத்தில் திருமணம் செய்வது சிறப்பு. சுருள் முடி, ஏறு நெற்றி.
சூரியன் = ராஜா. அவரை புகழ்ந்து பேசினால் மனம் குளிர்வார். களத்திரத்தை புகழ்ந்து பேசினால் காரியம் சாதிக்கலாம். 7-ம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கமாக இருந்தால் கணவன் மனைவி ஈகோவால் சண்டையிடுவார்கள். ஆனால் பிரிய மாட்டார்கள்.
குரு, சூரியன், செவ்வாய் நன்றாக இருந்தால் தான் புத்திர பாக்கியம் கிட்டும். காலப்புருஷனுக்கு 5ம் அதிபதி [ திரிகோணாதிபதி ] சூரியன் . 5ம் இடம் = பலவிதமான , பெருக்கம். திருமணத்திற்காக நிறைய பெண்களைப் பார்ப்பார்கள். 5ம் அதிபதி கெட்டால் எந்த பெண்ணை பார்த்தாலும் பிடிக்காது. 5= காதல். அளவுக்கு மீறிய ஆசைகள் ஏற்படும். பாவிகள் தொடர்பு ஏற்பட்டால் மனைவியை புறக்கணிப்பார்கள். ஒரு சிலருக்கு இதனாலே விவாகரத்து கூட நிகழும். பாவ கிரக தொடர்பு 7-ல் சூரியன் இருந்தால் சமுதாயம் ஏற்காத திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
7ம் இடத்தில் ஒளி கிரகங்கள் இருந்தால், இவர்கள் செய்யும் நிவர்த்தி பரிகாரங்கள் பலன் அளிக்கும். தெய்வ அனுகூலம் உண்டு.
நிவர்த்தி வீடு – 7ம் பாவம்.
7-ல் சந்திரன் – அழகிய மனைவி. திருமணத்திற்குப் பின் இடம் மாற்றம் . ஒரு ஏமாற்றம் இருக்கும். காதல் திருமணம் அல்லது தாய்வழியில் ஒரு காதல் திருமணம். சந்திரன் தொடர்பானால் இரு தார மணம் ஏற்பட வாய்ப்புண்டு. கலைத்துறையில் சிறப்பாக இருப்பார்கள். சந்திரன் 7-ல் நின்று லக்னத்தை பார்ப்பார். சந்திரன்= தாய். லக்னம் = ஜாதகர். தாயார் ஜாதகரை தன்னருகிலே இருக்க வேண்டும் என விரும்புவர். பெண் ஜாதகரானால், பெண் வீட்டிலே மாப்பிள்ளை இருக்கவேண்டும் என [ மாமியார் ] விரும்புவார். இதனாலே மாமியார் மருமகள் சண்டை வரும்.
7-ல் செவ்வாய் – திருமணத்திற்குப் பின் சொத்து உண்டு. களத்திரத்திற்கும் சொத்து உண்டு. களத்திரம் வாகனம் ஓட்டுவார். கட்டுமஸ்தான உடம்பு. ஒரு விபத்து / அறுவை சிகிச்சை உண்டு. வம்பு வழக்கு விரயம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டு. உடல் ஹீட்டாக இருக்கும். களத்திரத்தை வதைப்பார். முன் கோபம் அதிகம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கண்ணில் பூச்சி விழுந்து அல்லது சிறு கவனக்குறைவால் விபத்தாக வாய்ப்புண்டு. 7-ல் செவ்வாய் லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் + களத்திரம் இருவருக்கும் கோபம் அதிக. ரகசிய குடும்பம் உண்டு. வம்பு வழக்கு உண்டு.
7-ல் புதன் – சுபம். நகைச்சுவை, சமாதானம், இளமையானத் தோற்றம் அழகான களத்திரம். சிரித்து கொண்டே இருப்பார்கள்.
சந்திரன் புதன் சாரம் பெற்றால் அம்மாவிற்கு இளமைத் தோற்றம் இருக்கும். புதன் = இளமைத் தோற்றம்.
அதிபுத்திசாலி. பேசியே காரியம் சாதிப்பார். திருமணத்திற்குப் பின் களத்திரம் படிப்பார்.
தர்மசிந்தனை, கடவுள் பக்தி உடையவர். சமூகத்தில் சாதுர்யமாக நடந்து கொள்வார்கள். அதிக வேதாந்தம் பேசுவார்கள்.
7-ல் புதன் இருந்தாலும், புதன் திதி சூன்யாதிபதியாகியாகவோ பாதகாதிபதியாகவோ 7-ல் இருந்தாலும், புதன் பாதிக்கப் பட்டு இருக்கின்றார்.
புதன் = படிப்பு. இளைய. இலவசமாக படிப்பு சொல்லிக் கொடுத்தால் புதனின் கெட்டிருப்பவர்களுக்கான நிவர்த்தியாகும். திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தன்னுடைய ஞானத்தை பிறருக்கு போதிக்க வேண்டும். 7-ல் இருக்கும் கிரகம் லக்னத்தை பார்ப்பதால் இருவருக்குமே இத்தகைய குணம், தன்மை இருக்கும். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7-ல் சுக்ரன் இருப்பவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஊர்சுற்றுவார்கள். அதிக இல்லற சுகம் கொடுக்கும். இதனால், பணம் , உடல் நலம் பாதிக்கும்.
7-ல் குரு – திருமணத்திற்குப் பின் செல்வ வளம் பெருகும். செல்வ வளமுள்ள களத்திரம். புத்திக் கூர்மை அதிகம். சமூக அந்தஸ்துள்ள களத்திரம். அதிக உபதேசம் செய்வார். இருவரும் ஒருவரது தப்பை கண்டுபிடிப்பார்கள். அதனை சுட்டிக் காட்டுவார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள்/
7 = வாடிக்கையாளர்.
ஆன்மீக நாட்டம் உண்டு. கோயிலில் திருமணம் செய்ய வேண்டும். மண வாழ்க்கை மகிழ்ச்சிக் குறைவு. இல்லற சுகம் குறைவு. குரு நின்ற இடம் பாழ். 7ம் இடம் கூடுமிடம். என்பதால் இல்லற சுகம் குறைவு.
குரு வீட்டில் புதன் நீச்சமும், சுக்கிரன் உச்சமும் பெறுகின்றனர். புதன் வீட்டில் சுக்கிரன் நீச்சம். புதன் உச்சம்.
சயனம் = தூங்கும் இடம்.
12ம் இடம்: போகம். 12ம் அதிபதி பாதிக்கப் பட்டால் இல்லற சுகம் குறைவு.
பேசும் இடத்தில் சுக்கிரன் நீச்சம். பேசக் கூடாத இடத்தில் புதன் நீச்சம்.
குரு ஆண் ஜாதகத்தில் வலுத்து பெண் ஜாதகத்தில் வலு இழந்திருந்தால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வர். இருவருக்கும் வலுத்திருந்தால் இருவரும் பேசிக் கொண்டே, ஒருவருக்கொருவர் அறிவுரை கூறிக் கொண்டே இருப்பர். அதனால், பொருத்தம் பார்க்கும் போது நன்றாக பார்க்க வேண்டும். ஏக ராசியாக இருக்க கூடாது. ஏக நட்சத்திரமும் கூடாது.
7-ல் ஒரு சுப கிரகம் இருப்பது ஜாதகருக்கு நன்மை தந்தாலும், களத்திரத்திற்கு சிறிது பாதிப்பை கொடுக்கும். இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்கும். 7-ல் குரு இருக்கும் போது தெய்வத்தின் நேரடி பார்வையில் இருப்பதால், கவனமுடன் தெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். இல்லை எனில் தோஷமும் குற்றமும் ஏற்பட்டு விடும். மேலும், ஆசான் ஆசிர்வாதம் பெற வேண்டும். தெய்வத்திற்குரிய பணிவிடை சரியாக செய்ய வேண்டும்.
7-ல் சுக்கிரன் – சுகபோகமான வாழ்க்கை. நிறம் குறைந்திருந்தாலும் லட்சணமாக இருப்பார். தாராளமாக செல்வு செய்வார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை உடையவர்கள். அனுபவித்து வாழ விரும்புவார்கள். சமுதாயத்தில் பொது காரியங்களில் நாட்டம் அதிகம். தாராளமான சிந்தனை, தர்ம சிந்தனை, பெயர் புகழ் உண்டு. பெண்களிடம் சகஜமாக பழகுவார். பகைவனையும் நட்பாக கருதுவார். திருமணத்திற்குப் பின் வளர்ச்சி. தி. பின் ஒரு காதலும் உண்டு. களத்திரத்துடன் இன்பச் சுற்றுலா அதிகம் செல்வார்.
7-ல் சனி பகவான் – 7-ல் சனி திக்பலம். தாமத திருமணம். தாமதமானாலும் திருமணம் உண்டு. வயது வித்தியாசம் அல்லது பொருந்தாத ஜோடி. சமுதாயம் மாறிய அல்லது காதல் திருமணம். கூட்டாளிகள் ஏமாற்றுவார்கள். வியாபாரத்தில் தோல்வி. கோர்ட், வழக்கு உண்டு. திருமணத்திற்குப் பின் விரயம் / வறுமை உண்டு. களத்திர வழியில் ஒரு ஊனமுற்றவர் உண்டு. பெண்களால் தொல்லை உண்டு. ஏமாற்றம் அதிகம். வாழ்வில் வளர்ச்சியடைய மிகவும் போராடுவார். தெய்வ பக்தி குறைவு. நாத்திகமும் விரக்தியாகவும் பேசக் கூடியவர்.
முதிர்ந்த தோற்றம். களத்திரம் முதிர்ந்த / லட்சணம் குறைந்த தோற்றம். தலையில் வெள்ளை முடி இருக்கும். களத்திரத்திற்கு மூட்டுப் பிரச்சினை, எலும்பு உடைய வாய்ப்பு உண்டு. இருவரும் பிரிய நேரிடும்.
7-ல் ராகு – திருமணத்திற்குப் பின் ஒரு அறுவை சிகிச்சை உண்டு. தி.பின் வேறு மொழி கற்றுக்கொள்வார். ஒரு விபத்து உண்டு. இவர்களுடன் பயணம் செய்யும் போது கீழே விழுந்து விபத்தை கொடுக்கும் என்பதால் பயணத்தில் வாகனத்தில் தனியாகத் தான் செல்ல வேண்டும். இவருடைய விருப்பமே களத்திரத்தின் விருப்பமாக இருக்கும். களத்திரத்துடன் வாகனத்தில் செல்லும் போது கவனம். ஆண் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் களத்திரத்திற்கு மாதவிடாய் அதிகமாக போகும். வயிற்றுக் கோளாறுகள் உண்டு. கோபம், பொறாமை உண்டு. இதுவே இவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகும். வேறு மா நிலம், வெளியூர், வெளி நாடு சார்ந்த மொழி கலச்சாரப் பற்று இருக்கும். உடல் நலம் கருதி அதிக பணம் செலவு செய்வார்கள். வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
7-ல் கேது – மண வாழ்க்கை கால தாமதம். அல்லது விரக்தி உண்டாக்கும். சிலருக்கு திருமண வாய்ப்பு கிட்டாது. அல்லது மனைவியை அடக்கி ஆள்வார். மதம் மாறிய களத்திரம் அல்லது மதம் மாறும் எண்ணம் இருக்கும். ஆன்மீக நாட்டமுடைய களத்திரம். தாம்பத்ய சுகம் குறைவு. மறு மணம் அல்லது விதவைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் உண்டாகும். திருமணம் சார்ந்த வழக்கிடும் எண்ணம் உண்டாக்கும். ஆன்மீக நாட்டம் அதிகம். எதிலும் விரக்தி ஏற்படும்.
7-ல் செவ்வாய், 7-ல் கேது, 7-ல் சனி ஆகியவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பின் களத்திரத்துடனான ஈடுபாடு குறையும்.
இவர்களின் வீட்டருகே ஒரு ஆலயம் இருக்கும்.
கோட்சார பலன்:
7ம் பாவத்தின் மீது சூரியன் செல்லும் காலம்: மன உளைச்சல், வயிற்றுவலி, வருமானம் குறைவு, வாடிக்கையாளர்களிடம் அதிருப்தி, களத்திரம், கூட்டாளிகளுடன் அதிருப்தி.
7-ல் சந்திரன் சஞ்சரிக்கும் போது – பண வரவு, நல்ல உணவு, கௌரவ ஏற்றம் உண்டு. பயணம்.
7-ல் செவ்வாய் சஞ்சரிக்கும் போது – களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, கண் சம்பந்தமான நோய், வயிற்றுவலி, அஜீரணக் கோளாறு ஏற்படும்.
7-ல் புதன் சஞ்சரிக்கும் போது: உடல் பலவீனம், பேராசையால் பெருத்த பாதிப்பு. சுற்றத்தாருடன் சண்டை சச்சரவு ஏற்படும்.
7-ல் குரு சஞ்சரிக்கும் போது: தெளிந்த அறிவு. வெளி நாடு, வெளியூர் சார்ந்த பண வரவு உண்டு. பேரின்ப காலம்.
7-ல் சுக்ரன் சஞ்சரிக்கும் போது: அவமானம், அவச்சொல் ஏற்படக் கூடிய காலம். பெண்களால் அவதி.
7-ல் சனி பகவான் சஞ்சரிக்கும் போது: கடுமையாக உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிட்டாமல் மன உளைச்சல், அதிக அலைச்சல் இருக்கும். சுற்றத்தாரை விட்டு பிரிவார். வெறுக்கப்படுவார்.
சதுர்தசி திதி – மிதுனம், கன்னி, தனுசு, மீனம் – திதிசூன்யம் | 7. | ||
லக்னம் | |||
செவ் | குரு | சனி | சந்திரன் |
7-ல் கிரகங்கள் இல்லை. சுத்தம் என்று சொல்வார்கள். அது தவறு. காலப் புருஷ 12 ராசிகளில் 9 கிரகங்கள் ஒவ்வொரு ராசியில் நிறுத்தினாலும் 3 ராசிகள் காலியாக இருக்கும். காலியாக உள்ள ராசி பலமிழந்த இடமாகும். குடியில்லாத வீடு பாழடைந்த வீட்டிற்கு ஒப்பாகும். 7-ல் கிரகம் இல்லை. பார்க்க வில்லை எனில் ஜாதகருக்கு திருமணத்தில் நாட்டம் இருக்காது.
இந்த ஜாதகத்தில் இரண்டு பகை கிரகங்கள் ஒரு சுப கிரகமும் பார்க்கின்றன. 7-ம் அதிபதி திதி சூன்ய வீட்டில் இருக்கின்றார். எனவே, திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. குரு 7-ம் வீட்டை பார்க்கின்றார். 7-ம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில் இருப்பதால் வரும் களத்திரம் ட்யூஷன் / பிள்ளைகளுக்கு இலவச கல்வி போதிக்க நிவர்த்தனை கிட்டும். குடும்ப வாழ்வு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். சனியும் 7-ம் வீட்டை பார்ப்பதால் நெஞ்சக நோய் [ ஆஸ்துமா, டிபி, மூட்டுவலி, கால்வலி கொண்டோருக்கு மருத்துவ உதவி செய்தல், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தல், செய்ய வேண்டும். செவ்வாய் 8ம் பார்வையால் பார்ப்பதால் விபத்தால் பாதிக்கப் பட்டோருக்கு இரத்த தானம், மற்றும் காவலர், செக்யூரிட்டிகள், செவிலியர்களுக்கு உணவு வழங்குதல் நன்மை தரும். நிவர்த்தனை தரும் என பரிகாரம் எடுக்க வேண்டும்.
ஒரு கிரகமும் இல்லாத ராசி எதுவோ, லக்ன பாவத்திற்கு எந்த பாவமோ அந்த பாவத்தினை எந்த ஒரு கிரகமும் பார்வை செய்யவில்லை எனில் அந்த பாவம் அந்த பாவ அதிபதி சார்ந்த காரகம் மற்றும் உறவுகளாலும் நன்மை கிட்டாது. அது உங்கள் ஜாதகத்தில் மறுக்கப் பட்டது என அறிக.
70ம் பாவத்தில் கிரகம் இல்லை எனில் அவருக்கு திருமண வாழ்வு சிறப்பில்லை என அறிக.
7-ல் புதன் – சுபம். நகைச்சுவை, சமாதானம், இளமையானத் தோற்றம் அழகான களத்திரம். சிரித்து கொண்டே இருப்பார்கள்.