Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

5-ல் சூரியன்: சூதாட்டத்தில் நாட்டம். அதீத இல்லற சுகத்தில் நாட்டம். வீண் செலவு, வயிற்றுக் கோளாறுகள். வீட்டருகே அல்லது பூர்வீகத்தில் பாரம்பரியமான பழைய மரம் ஒன்று உண்டு. அபரிமிதமான கற்பனை எண்ணங்கள். மருத்துவ குணம் அதிகம். தனது யோசனையை பிறர் மீது திணிப்பர். பூர்வீக சொத்தை அனுபவிக்க இயலாது. சிறு நீரக பிரச்சினை உண்டு.

 

5-ல் சந்திரன்: நல்ல கல்வி, சூதாட்டத்தில் வெற்றி. ஒரு டைம் அதிகம் கொடுத்து அதன் பின் நஷ்டமாகும். சிற்றின்ப நாட்டம் அதிகம். குழந்தைகளால் கடன் அல்லது ஏமாற்றம். அல்லது குழந்தைகள் ஏமாறும். சந்திரன் நிற்கும் பாவம் சார்ந்த அது குறித்த ஒரு ஏமாற்றம். 9 -ல் எனில் தந்தையால் ஏமாற்றம். 11-ல் லாபத்தில் ஏமாற்றம். 4-ல் சொத்து, வாகனம், இவற்றில் ஏமாற்றம். 5- ல் காதல் செய்து ஏமாற்றம் அடைவார். 3-ல் இளைய சகோதரத்திற்கு ஏமாற்றம். தைரியமாக செய்து அதனால் ஏமாற்றம். போலி தைரியம், வீரியம். 8-ல் மறைபொருளில் நாட்டம் கொடுக்கும். அதில் ஒரு ஏமாற்றம் கொடுத்து விடும். மறைமுகமாக செய்யும் / மறைத்து செய்யும் ஒரு விஷயத்தில் ஏமாற்றம். மனைவியின் வருவாயில் ஒரு ஏமாற்றம். மனைவியின் சொத்தை எதிர்பார்த்து ஒரு ஏமாற்றம். இவர்கள் உண்மையான வருமானத்தை சொல்ல மாட்டார்கள். லக்னத்தில் சந்திரன் – மானம், அவமானத்திற்கு பயந்து அடிக்கடி ஏமாற்றத்தை சந்திப்பார். களத்திரத்தால் ஏமாற்றமடைவார். மறதி இருக்கும். 5-ல் சந்திரன் இருந்தாலும் மறதி இருக்கும். சொல் புத்தியும் செயல்புத்தியும் இருக்காது. அடிக்கடி வாந்தி / அஜீரணக் கோளாறால் பாதிக்கப் படுவார். பாசமாக பேசினால், ஏமாந்து விடுவார். ரகசியம் தங்காது. 8-ல் சந்திரன் – ரகசியம் தங்காது. 6-ல் சந்திரன் கடனை அதிகரித்து விடுவார். கடனுக்காக கடன் வாங்கி அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஏமாறுதல். உணவை கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல உணவு என்று சாப்பிடுவார். அதுவே பாதிப்பைத் தந்து விடும். 5-ல் சந்திரன் – கலை ஆர்வம் அதிகம். வழக்கு ஒன்று உண்டு. திட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும். 

 

5-ல் செவ்வாய்: விளையாட்டில் நாட்டம் அதிகம். தாய்மாமனுக்கு விபத்து நிகழும். தாத்தா அல்லது தாய்மாமனுக்கு கோபம் அதிகம். விபத்து வெட்டுக்காயம் தழும்பு வழக்கு உண்டு. ஆன்மீக சிந்தனை அதிகம். உறவில் சாமியாடி குறிசொன்னவர் உண்டு. முன்னோர்கள் வேட்டையாடியவர்கள் உண்டு. அரசாங்க எதிர்ப்புக்கு ஆளாவார்கள். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு உண்டு. பெண்களால் அவமதிப்பு உண்டு.

 

5-ல் புதன் – புத்திர தோஷம். சூதாட்டத்தில் ஆர்வம் அதிகம். தாய் மாமனுக்கு பாதிப்பு. கமிஷன் தொழில் அமையும். குழப்பமான கவலை, மனக்கவலை உண்டு. தொழிலில் ஒரு பாதிப்பு உண்டு. பூர்வீகம் மாறி வந்திருப்பார்கள். 

 

5-ல் குரு: புராணத்தில் நாட்டம் அதிகம். குரு பக்தி மிக்கவர். கால் நடைகளை வளர்த்தவர் உண்டு. மனித நேயம். ஆன்மீக நாட்டம் உண்டு. மந்திர ஆலோசனை உடையவர். பெரியவர்களின் நட்பு கிட்டும். குழந்தைகள் பற்ரிய கவலை. குழந்தைகளை பிரிந்திருப்பது. வெளி நாட்டு வருமானம். உயர்கல்வி உண்டு.

 

5-ல் சுக்ரன்- அறிவாளி. ஆடம்பர வாழ்வு மிக்கவர். சுகவாசி. சிரித்த முகம் உண்டு. வங்கிப்பணி. அல்லது அரசுப்பணி. அல்லது கலைகளில் நாட்டம். கால் நடை வளர்த்த குடும்பம். அத்தைக்கு ஆன்மீக நாட்டம் அதிகம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஜாதகர் / ஜாதகரின் அத்தை ஆபரண நாட்டம் அல்லது வாசனை திரவியங்களில் நாட்டம், நல்வழி உண்டு. இவர்கள் யோசனையால் பிறருக்கு லாபம் அதிகம். 

 

5-ல் சனி: ஜாதகர் நீதிமான். ஆனால், நிலையான புத்தி இருக்காது. பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். பிறரை குறைசொல்வதில் வல்லவர். தாமத குழந்தை. இவர்கள் தரையில் படுத்து தாம்பத்யம் கொள்ள புத்திர பாக்கியம் கிட்டும். இவர்கள் பெட்டில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும். உடல் நிலை நன்றாக இருக்கும். ஜீவன மார்க்கத்தில் சிரமம் உண்டு. பூர்வீக வீடு பாழடையும். அனுபவிக்க விடாது. தாத்தா வழியில் குழந்தை இல்லாதவர்கள் / திருமணம் ஆகாதவர்கள் / இருப்பார்கள். தாய் மாமனுக்கு முதிர்ந்த தோற்றம் இருக்கும். தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரது சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்கும். காதல் திருமணம், சமுதாயம் மாறிய திருமணம். பிடிக்காத பெண்/ஆணை திருமணம் செய்யும் நிலை ஏற்படும். திட்டமிடுதல் தாமதமாகும். 

5- பெயர், புகழ். புகழடைவதில் தாமதம். தெய்வம் – சாமி என்ற பெயர் கொண்டவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். தாத்தாவிற்கு சாமி என்ற பெயரில் முடியும். தாத்தாவின் பாரம்பரிய நினைவுப் பொருள் ஒன்றிருக்கும்.

 

5-ல் ராகு – புத்திர தோஷம் உண்டு. வயிற்றில் கோளாறு உண்டு. ஒரு கருச்சிதைவு இருக்கும். ஷார்ட் பிலிம் (அ) குறும்படம் (ஆ) சீரியல் எடுப்பவர். தாத்தா வழியில் விஷக்கடி உண்டு. தற்கொலை மரணம் உண்டு. குழந்தைகள் பிரிந்து வாழ்வர். கொடி சுற்றி பிறந்த குழந்தை ஒன்று உண்டு. தாத்தா நாடக கலைஞர்.

 

5-ல் கேது: 

ஒரு கண்டம், வறுமை, கஷ்டம் உண்டு. குழந்தை தாமதம். குடும்பத்தில் ஒரு காதல் திருமணம் ஒன்று உண்டு. மேல் கல்வி தடை. சட்டம், ஜோதிடம், அக்குபங்க்சர், இயற்கை வைத்தியம் (ஆ) மாற்றுமருத்துவத்தில் நாட்டம். பிறரை நம்ப மாட்டார். திடமான புத்தி இல்லை. யாத்திரை செல்லும் நாட்டம் அதிகம். தகப்பனார் வழி சொத்துக்கள் சிறப்பில்லை. 

 

கோட்சாரப்பலன்:

5-ம்பாவத்தின் மீது கோட்சார சூரியன் செல்லும் போது – ஆரோக்கியக் குறைபாடு. சத்துருவால் தொல்லை. 

 

5-ல் சந்திரன் – நோயும் கவலையும் உண்டு. பயணத்தில் கவனம் தேவை. 

 

5-ல் செவ்வாய் – குழந்தைகளால் கவலை. பிள்ளைகளால் தொல்லை. விரோதிகளால் இடையூறு ஏற்படும். 

 

5-ல் புதன் – பந்தம் உறவினர்களிடம் பகைமை, அனைத்து காரியங்களும் எட்டாக் கனி. கைகூடி வருவது போல இருக்கும் ஆனால் நடக்காது. எந்தவொரு சுகமும் கிடைக்காது. 

5-ல் குரு – புதிய வீடு வாகன சொத்து சேர்க்கை உண்டு. செல்வச் சேர்க்கை உண்டு. கல்வியில் தேர்ச்சி.

 

5-ல் சுக்கிரன் – அதிக மகிழ்ச்சி. பெரியோர்களது ஆசி. மகப்பேறு, பொருட்பேறு உண்டு. நண்பர்கள் உறவினர்களால் நன்மை. 

 

5-ல் சனி – குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், சத்துருக்களால் தொல்லை. பொருள் சேதம் உண்டாகும்.

0% Complete