Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/29
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
4ம் பாவம்
4ம் பாவத்தில் கிரகங்கள் தரும் பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
Protected: Astrology – Interrmediate

4ம் பாவம்

4ம் பாவத்தில் சூரியன் – வியாபாரத்தில் நல்ல புகழ். முன் கோபம் அதிகம். தாயாருக்கு கண் நோய் உண்டு. குடும்பத்தில் அரசியல் அரசாங்க சார்ந்த ஈடுபாடு உண்டு. தாயாருக்கு மருத்துவ குணமுண்டு. சிறந்த கல்வியறிவு உண்டு. சூரியன் நிற்கும் பாவம் அது சார்ந்த உறுப்பில் கூச்சம் இருக்கும். 

சூரியன் இருக்கும் பாவக காரக உறவிற்கு மருத்துவம் சார்ந்த ஞானம் / குணம் இருக்கும். 

கோயிலருகே வீடு. 4-ல் சூரியன் இருப்பவர் வீடு எப்போதும் இருட்டாக இருக்க கூடாது. வளர்ச்சி குறைவாகிவிடும்.

 

4-ல் சந்திரன்

4- மனசு, உயர் நிலைக் கல்வி முதல் டிகிரி வரை. மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கும். வேகமாக எதையும் செய்து முடிக்க எண்ணுவார். சுகபோகி. வீடு, வாகனம் உண்டு. 4- வயதில் இடமாற்றம். ஜாதகருக்கு 4-ல் சந்திரன் திக்பலம். ஒரு வீட்டில் நிலையாக இருக்க மாட்டார். முதல் சொத்து, முதல் வாகனம் விரயம் ஆகும். வியாபார லாபம் உண்டு. சந்திரன் = சாமிப் படங்கள். வீட்டிற்குள் நிறைய சாமிப்படங்கள் இருக்கும். வீட்டிற்கு அருகில் பால் வியாபாரம் செய்பவர்கள், அழகு நிலையம் வைத்திருப்பவர்கள், நீர் / திரவ சம்பந்தமான தொழில் செய்பவர்கள் / கடை இருக்கும். பூக்கள் – காலையில் மலர்ந்து மாலையில் வாடுபவை. சுக்கிரன் = பூக்கள் = அழகுபடுத்தும்  பூக்கள். இயற்கையான அழகு = சந்திரன். சுக்கிரனும் அழகு – அலங்கார அழகு. 

 

4-ல் செவ்வாய் – அதிக சொத்து சுகம் உண்டு. வழக்கு உண்டு. ஜாதகருக்கு தண்ணீரில் கண்டம். ஜாதகருக்கு தாயின் அன்பு கிட்டாது அல்லது தாயாருக்கு ஆரோக்கியம் குறைவு. திருமணத்திற்குப் பின் சொத்து அமையும். வீட்டில் எப்பவுமே செங்கல் , சிமெண்ட், நாய் இருக்கும். சராசரியான படிப்பு. விளையாட்டில் ஆர்வம் அதிகம். 

 

4-ல் புதன்: அடக்கம் உடையவர். சமாதானத்தை விரும்புபவர். அதீத ஞானம். ஆனால் உற்றார் உறவினரை நெருங்க விடமாட்டார். வீட்டில் நிறைய புத்தகங்கள் உண்டு. வாடகை வருமானம் உண்டு. 40 வயதிற்கு மேல் படிக்க ஆசை இருக்கும். 

 

4-ல் குரு:தாயார், தாய் வழியில் நல்ல பதவியில் உள்ளவர்கள் உண்டு. குடும்பத்தில் ஆசிரியர்கள் , ஜோதிடர் அல்லது பணம் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் இவர்கள் குடும்பத்திலோ அல்லது அருகிலஓ இருப்பர். உயர் கல்வி பயிற்சி பெறுபவர் உண்டு. ஆன்மீக நூல்கள் இருக்கும். செல்வங்களைத் தேடி அலைவார். வீட்டில் மந்திர ஜெபம் பூஜை அடிக்கடி நடக்கும். தாய் வழியில் புத்திர தோஷம் .கர்பப்பை பிரஸ்னை இருக்கும். மார்பு வலி இருக்கும். பலர் இவரது ஆலோசனைகள் பெறுவர். கால் நடை வளர்ப்பதில் நாட்டம் அதிகம். 

 

4-ல் சுக்கிரன்: மனைவிக்கு சொத்து உண்டு. கல்வியில் சிறப்பு. உயர்வு தாழ்வின்றி அனைவரிடமும் சகஜமாக பழகுவார். கவர்ச்சியான தோற்றம். கள்ளங்கபடம் அற்றவர். கலைத்துறையில் நாட்டம். சுய முயற்சியில் சொத்து வாங்குவார். ஆடம்பர வாழ்வில் பிரியமுண்டு. பெயர் புகழ் கிட்டும். 

 

4-ல் சனி பகவான். பழைய வண்டி அல்லது பழைய வீட்டை வாங்குவார். வீடு கட்ட தடை தாமதம். தாயார் கடின உழைப்பாளி. இரும்பு சம்பந்தமான பணி உண்டு. 40 வயதிற்கு மேல் சொத்து உண்டு. அப்படி சொத்து அமையும் போது நிலைக்கும். அவசரப்பட்டு வீடு கட்டினால், அந்த சொத்து நிலைக்காது. 

பணிவு, எளிமை [ 4ல் சனி இருந்தாலும், 12ல் சனி இருந்தாலும் தரையில் படுக்க வேண்டும். கட்டில், மெத்தை கூடாது. ] [ 5-ல் சனி இருந்தால் குல தெய்வ வழிபாடு தடை, தாமதம் ஆகும். ] [ சனி பகவான் உபஜெயஸ்தானத்து வீடுகளில் இருந்தாலும், 10ம் வீட்டில் இருந்தாலும் அதிக பாதிப்பு தரமாட்டார். மற்ற ஸ்தானங்களில் தடை, தாமதம், பொருளாதாரத் தடை கொடுப்பார். தாமதமாக பொருளாதாரம் தருவார். ] 4-ல் சனி இருப்பவர் நல்லா இருந்தாலும் அடிக்கடி குழம்பிக் கொள்வார். அடிமனதில் பயம் கோபம் இருக்கும். 

4-ல் சனி – உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும். ஹார்ட் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தண்ணீர் பார்த்து பயம். நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பமாட்டார். வீட்டிற்கு உச்சியில் / உயரத்தில் செல்லும் போதும் பயம் ஏற்படும். திருட்ட்டு பயம் இருக்கும். அதற்காக பாதுகாப்பு மேற்கொள்வார்.

பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். 

5-ல் சனி ஆழ்மனதில் பயம் இருக்கும். என்றோ கேள்விப்பட்ட விஷயத்தை நினைத்து பயப்படுவார். 4-ல் சனி எடுத்ததெற்கெல்லாம் கவலைப்படுவார்.  ரெஸ்ட்லெஸாக இருப்பார். 5-ல் சனி இருப்பவர்கள் க்ரேப் ஆப்பிள் மலர்மருந்து தொடர்ந்து சாப்பிட்டு வர மன நிலை பயம் மாறும். ஆழ்மன பயம் கோபமாக மாறும். இதனால் சிறிது சாப்பிட்டாலும் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பிர்ச்சினை வரும். க்ரேப் ஆப்பிள் மலர்மருந்து சாப்பிட அந்த நிலை மாறும். 4-ல் சனி இருப்பவர்களுக்கு அக்ரிமோனி மலர்மருந்து கொடுக்க வேண்டும். விருச்சிகராசி, விருச்சிக லக்னத்தினருக்கு அக்ரிமோனி சாப்பிடுதல் நலம் தரும். விருச்சிகத்தில் மாந்தி இருப்பவர்களுக்கு மறைமுக இண்டியூஷன் பவர் இருக்கும். இவர் சொல்லும் ஆலோசனை மேற்கொள்ள சரியாய் பிரச்சினை தீரும் அந்தளவிற்கு உரிய ஆலோசனை விருச்சிகராசி / விருச்சிகலக்னத்தினர் செய்வார். லக்னத்திற்கு எந்த பாவமாக விருச்சிக ராசி வருகின்றது என்பதனை கவனித்து நல்ல பாவமாக வந்தால் மட்டுமே ஆலோசனை சொல்ல வேண்டும். லக்னத்திற்கு விருச்சிகம் 6 / 8 / 12, திதி சூன்யம் / பாதக ஸ்தானமாக வந்தால் அவர்கள் ஆலோசனை சொல்லக் கூடாது. 

 

குரு பாதிக்கப்பட்டிருந்தாலும், 5ம் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலும், புதன் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த ஜாதகருக்கு எந்த ஆலோசனை சொன்னாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விதண்டாவாதம் பேசுவார்கள். அதனால் அவருக்கு ஜோதிடமோ, ஆலோசனையோ சொல்லக் கூடாது என்பதனை உணர்க.

4-ல் சனி இருப்பவர்களுக்கு ஜாய்ண்ட் , மூட்டு வலி இருக்கும். சுவாசப் பிரச்சினை, மார்பு சார்ந்த பிரச்சினை இருக்கும்.

 

4-ல் ராகு – அயல் நாடு, வேற்று மொழி, வெளி மா நிலம், வெளியூர் – சிறப்பு. வீட்டருகே புற்றுக் கோயில் இருக்கும். மனதில் சர்ப்ப வழிபாடு எண்ணங்கள் அதிகரிக்கும். கவலை சார்ந்த எண்ணங்கள் இருக்கும். கமிஷன் வியாபாரம் வேற்று மொழி கற்பார்கள். தாய்வழியில் சாமியாடுபவர்கள் உண்டு. 

 

4-ல் கேது – ஞானம் பெருகும். தாய்வழியில் வாழாத ஆண் / பெண் உண்டு. மாடி வீடு சிறப்பில்லை. பலவீனமான சரீரம். அடிமை சார்ந்த தொழில். கடன் உண்டு. பயணம் சார்ந்த தொழில் உண்டு. 

 

கோட்சாரப் பலன்கள் 

சூரியன் 4-ல் செல்லும் போது – ஆரோக்கிய குறைபாடு, சுகபோகத்தில் நாட்டம்.

 

4-ல் சந்திரன் – நம்பிக்கையற்று இருப்பார்கள். தைரியம் குறைவு.

 

4ல் செவ்வாய் – தீயவர் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் கெடும். 

 

4-ல் புதன் – குடும்ப மேன்மை , பண வரவு உண்டு. 

 

4-ல் குரு – மனதில் குழப்பம். சுகம் குறையும். உற்றார் நண்பர்கள் பகைவராக மாறுவார்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

 

4-ல் சுக்கிரன் – பிரிந்த நண்பர்கள் , பிரிந்த உறவுகள் சேர்வார்கள். அதீத ஆற்றல் சுகம் கூடும். 

 

4-ல் சனி பகவான் – நண்பர்கள் பிரிவு. குடும்பத்தை விட்டு விலகி இருத்தல். பொருள் விரயம். தீய வழியில் மனம் செல்லும். 

 

ராகு விற்கு செவ்வாயின் பலனையும், கேதுவிற்கு சனியின் பலனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

0% Complete