Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/38
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

பாவம் 12

11ம் பாவம் – அதற்கு லாபஸ்தானம் 12ம் பாவம்.

லக்னம் ஜனன காலத்தை குறிக்கும். 7 மத்திம (இளமைக் காலம்), 12 – முதிய பருவத்தை / இறுதிக் காலத்தை குறிக்கும். 

இந்த உடலை விட்டு சுத்த வெளியில் ஆன்மா ஐக்கியமாக வேண்டும். 

மோட்சம் என்பது 12 ஆம் அதிபதியைக் கொண்டு அறியலாம். 

12ம் அதிபதியின் சேர்க்கை எந்த அதிபதியுடன் சேர்ந்திருப்பதைக் கொண்டு மோட்சம் அறியலாம்.

5 – குலதெய்வம். 9 – இஷ்ட தெய்வம். 

12ம் அதிபதிக்கு 5 / 9 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் போது மோட்சம் அடையும். பாவர் தொடர்பு வக்ர கிரகங்கள் தொடர்பானால் மோட்சம் அடைவதில் தடை தாமதம் உண்டு. அந்த தடை தாமதம் தாண்டினால் மோட்சம் கிட்டும்.

12ம் அதிபதி கெட்டால் மோட்சம் அடைவதில் கடினமான சூழல் அமையும். 

12ம் அதிபதி 9-ல் எனில் 9ம் இடம் தந்தையை குறிக்கும். தந்தைக்கு மோட்சம் உண்டு. ஜாதகருக்கும் மோட்சம் உண்டு. 

12-ல் கேது நின்றாலும் 5, 9 ஆக வேண்டும். அல்லது 12ம் அதிபதி 5, 9 க்கு தொடர்பாகி 12-ல் கேது நின்றால் மோட்சம் உண்டு. கடைசி பிறவி என பொருள். இந்த பிறவி கர்மாவை முழுமையாக பூர்த்தி செய்ததை மோட்சம் சொல்லும். 12ம் வீட்டில் 5, 9 அதிபதிகள் நின்று கேது சாரம் பெற்றாலும் மோட்சம் உண்டு. 5ம் அதிபதி இருந்தால் நினைவுச் சின்னங்கள் இருக்கும். 

12-ல் 5ம் அதிபதி நின்றால் ஜாதகர் இறந்த பின் பெயர் புகழ் உண்டு. 

இவர்கள் லாபத்தை எதிர் பார்க்க கூடாது. 

காலப் புருஷனுக்கு 9ம் அதிபதி குரு. 10 ம் அதிபதி சனி. 11ம் அதிபதி சனி. அவர் அடுத்து தொடுவது 12ம் அதிபதி குரு. எனவே, இவர்கள் பேராசை, அதிக லாபம் தாண்டி தான தர்மம் செய்ய வேண்டும். 

 

மாந்தி நின்ற சாரத்திற்குரிய பொருட்களை நாம் எடுத்துக் கொள்ள கூடாது. உண்ணக் கூடாது. அவற்றால் பாதிப்பு இருக்கும். எந்த பாவமோ அதற்குரிய உறுப்பில் பிரச்சினை தொந்தரவு இருக்கும். 

 

கர்மம் செய்ய ஆளில்லை எனில் சன்னியாசி, ஆதரவற்றோருக்கு மோட்சம் உண்டு. ஜீவ முக்தி என்பது வேறு. மோட்சம் என்பது வேறு. மோட்சம் என்பது இந்த பிறவி கர்மாவை முழுமையாக பூர்த்தி செய்ததை குறிக்கும். ஜீவ முக்தி என்பதி இனி பிறவி இல்லை என்பதனை குறிக்கும். 

 

சனி பகவான் நிற்கும் இடம் , அவரின் 10ம் பார்வை படும் பாவம் இரண்டும் கர்மாவை சுட்டி காட்டும். 

 

12ம் பாவம் = அயன சயன போக ஸ்தானம். உடலின் ஐம்புலன் களைப்பற்றி சொல்பவர் 12ம் அதிபதி. 

12ம் அதிபதி காலபுருஷனுக்கு முதல் ஆறு வீட்டிற்க்குள் – குரு இருந்தால் பகல் தூக்கம் இருக்கும். 6 – 12 வீட்டிற்குள் இருந்தால் – இரவு தூக்கம் இருக்கும். 

சொத்து = 4ம் வீடு. முதல் ஆறு வயது = 30 வயது. அடுத்த ஆறு வீடு = அடுத்த 30 வயது. சொத்து வாங்கியது முன்னரா பின்னரா என அறியலாம்.

4ம் இடத்து அதிபதி லக்னத்திற்கு முதல் ஆறு வீட்டிற்குள் இருந்தால் இளமையிலே சொத்து அமையும். வருமானமும் பகலில் மட்டும் வரும். 

 

போகம் = இல்லற சுகம். உச்ச நிலையை அடையும் போது ஐம்புலங்களும் வலுப்பெறும். 

12ம் அதிபதி 2ம் வீட்டிற்கு லாபஸ்தானமாகும். 12ம் அதிபதி பாதிப்படைந்தாலோ, அல்லது 2 – 12 சஷ்டாஷ்டமாக அமர்ந்தால் யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணத்தால் லாபம் கிடையாது. [ வட்டிக்கு விடக் கூடாது.] பாதிப்பு தான் வரும். 

எட்டாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக 12ம் பாவமாக வருவதால், [ 5ம் பாவத்திற்கு எட்டாம் பாவம் 12ம் பாவமாக வரும். ] – செவ்வாய், குரு, சூரியன் தான் தொடர்பு வரும். இம்மூவரும் ராஜ கிரகங்கள். செல்வத்திற்குரிய கிரகமாகும். 12ம் அதிபதி கெட்டால் / பாதிக்கப்பட்டால் அவர்கள் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு வலுத்திருந்தாலும் அர்சாங்க சம்பந்தப்பட்ட விஷயத்தில் பணத்தால் ஏமாற்றம் அடைவார்கள். வேலைக்காக பணம் கொடுத்தாலும் வேலை கிடைக்காது. கொடுத்த பணமும் திரும்பவும் வராது. [ மறைமுகமான தடை , அரசாங்கத்திற்கு 

பணம் கட்டி ஏமாறுவார்கள் ]  அரசாங்கத்தால் ஆதாயம் அடைய முடியாது. 

 

ரிஷப லக்னம். சூரியன் மேஷத்தில் . குரு கடகத்தில். செவ்வாய் மகரத்தில். பிரதமை திதியில் பிறந்திருக்கின்றார். 3 கிரகங்களும் உச்சமாக உள்ளனர். அரசாங்க வேலை கிடைக்கும் என்பார்கள். பிரதமை திதிக்கு துலாமும் மகரமும் திதி சூன்ய வீடுகள். 12ம் அதிபதி திதி சூன்யத்தில் என்பதால் அரசாங்க வேலை / அரசாங்க டெண்டர் / – லாபம் பெற இயலாது. அனுகூலம் கிட்டாது. பின் விளைவுகளை ஏற்படுத்தும். 12ம் அதிபதி வாங்கிய சாரம் சுபராக இருந்தாலும் குழப்பத்தை தான் கொடுப்பார். எண்ணங்களும் செயல்களும் குழப்பத்தை கொடுக்கும்.

12ம் அதிபதி = மறைத்து வைத்தல். 12ம் அதிபதி இருக்கும் இடத்தில் தான் மறைத்து வைத்திருப்பார்கள். 

உ-ம் 12ம் அதிபதி 4-ல். எட்டாம் அதிபதி, சனி – 4ம் வீட்டை பார்க்கின்றார். 

எனில் சனி = மண். கனிம வளம். 8 – புதையல், புதைகுழி. திடீர் அதிர்ஷ்டம். அவர் பழங்கால பொருள் / எதாவது ஒன்றை வீட்டிற்குள் 

மண்ணில் புதைத்து வைத்திருப்பார். 

 

12ம் பாவத்தில் சூரியன் – அதீத பயணம் செய்பவர். அரசாங்கம் அரசியலால் விரயம் உண்டு. ஜாதகருக்கும் தந்தைக்கும் பார்வை குறைபாடு உண்டு. ஜாதகர் & தந்தை இருவரும் விரயம் செய்தவர்கள். தைரியம் மிக்கவர். இவரின் சேமிப்பை வேறொருவர் அனுபவிப்பார். தூக்கம் குறைவு. மருத்துவ செலவு உண்டு. பின் வாழ்வு சிறப்பு. குழந்தைகளுக்கு வெளியூர் வெளி மானிலம், வெளி நாடு போன்றவற்றால் ஆதாயம் உண்டு. உயரமான இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை.

 

12-ல் சந்திரன் – மன அமைதி குறைந்தவர். மறதி அதிகம். இரவு வேலை. அலைச்சல் பயணம் அதிகம் உள்ள தொழில். கற்பனை வளம் அதிகம். பெண்களால் அவச்சொல், ஏமாற்றம் உண்டு. தாயாரால் விரயம் (ஆ) தாயாருக்கு விரயம். தாயாரை பிரிந்திருப்பது / தாயாரின் அன்பை பெற இயலாது.

 

12-ல் ஒளி கிரகங்கள் இருந்தால் இடது கண் பார்வை குறைபாடு இருக்கும். 

 

வக்ர கிரக தொடர்பு – மாறுகண்.

 

12ல் செவ்வாய் – சிலருக்கு கொடியவராக காணப்பட்டாலும் சிறந்த கடின உழைப்பாளி. தயாள குணம் உள்ளவர். தீயவருக்கு சத்துருவாகவும் இருப்பார். மறைமுக விரோதி உண்டு. தனக்குத் தானே தாராளமாக செலவு செய்து கொள்வார்கள். சொத்துக்களால் விரயம். ஆயுதம் மறைத்து வைத்திருப்பார். சிறு விபத்து. பற்கள் தொந்தரவு. மின்சாரம் / மின் ஊழியர்களால் பாதிப்படைவார். இரத்த தானம் செய்வது சிறப்பு. அறுவை சிகிச்சை, தீக்காயம், வாகன விரயம் போன்றவைகள் உண்டு. வம்பு வழக்கில் ஈடுபட்டு சில நேரங்களில் / சில காலம் அரசு விருந்தினராக [ சிறைவாசம் ] இருக்கக் கூட வாய்ப்புண்டு. 

 

12-ல் புதன் – மறதி அதிகம். நிதானமாக பேச வேண்டும். தேவையில்லாமல் தேவையில்லாததை பேசக் கூடாது. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. தாய் மாமனுக்கு பாதிப்பு அதிகம். கடன் சீட்டால் பாதிப்பு அதிகம். இரட்டை அர்த்தத்தில் உள்ளொன்று வைத்து வெளியில் வேறொன்று பேசுவார். கல்விமான். இருந்தாலும், ஆலோசனை சொல்லாமல் தனியாக மௌனமாக இருப்பார். ஆனால் கல்வியாளர் ஆராய்ச்சியாளர் கூட்டத்தில் இருப்பார். இவரை சீக்கிரம் வசியப்படுத்தவோ வழிப்படுத்தவோ முடியாது. சோம்பல் தன்மை உடையவர். அதிர்ஷ்டசாலி. தாய்மாமன் உறவு விரிசல். தூக்கத்தில் உளருவது. சில சமயத்தில் சமூகத்தில் மறைந்து வாழ்வார்.

 

ஒரு கிரகம் சுயசாரம் பெற்றால் பேசியே காரியத்தை சாதிப்பார். புதன் நீச்சம் எனில் கணிதம் நன்றாக வரும். அதிகம் படிப்பார். படிப்பு பற்றியே தேடிக் கொண்டே இருப்பார். 

சந்திரன் நீச்சம் எனில் அவரை எந்த விஷயத்திலும் திருப்தி படுத்த முடியாது.

குரு நீச்சம் எனில் பேச்சு கொடுத்து விட்டால் அதிகம் பேசியே அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்.

செவ்வாய் நீச்சம் வேகமாக ஓட்டுவார். வாகனங்களை அதிகம் மாற்றிக் கொண்டே இருப்பார். கட்டுமான உபகரணங்கள் அதிகம் சேர்த்து வைத்திருப்பார்.

சனி நீச்சம் பழைய துணிகள் சேர்ந்திருக்கும். 

 

12-ல் குரு – சிறு வயது முதலே, சகல கலைகளையும் அல்லது சுக போகங்களையும் அனுபவித்து துறவியானவர். பக்தி ஞானம், கல்வி ஞானம், தர்ம சிந்தனை உண்டு. சமுதாயத்திற்கு புறம்பாக நடப்பார். சமுதாயம் மாறிய திருமணம் / மனம் விரும்பிய திருமணம். சிற்றின்ப நாட்டம் அதிகமிருக்கும். ஆபரணங்கள், சேமிப்பு பெரும்பணம் ஆகியவற்றில் விரயம் அல்லது ஏமாற்றம் ஏற்படும். இடம் மாறி முன்னேறுவார். தான தர்ம சிந்தனை அதிகம். 

 

12-ல் சுக்ரன் – கண் பிரச்சினை உண்டு.இறுதி வரை சுகபோகமான வாழ்வு.

வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். களத்திரத்தால் பணம் விரயம். ஆடம்பர வாழ்வு உண்டு. வாகன விரயம் உண்டு.

 

12-ல் சனி பகவான் – பணம் தேவைப்படும் போது பணத் தட்டுப்பாடு வரும். தூக்கம் குறைவு. கோபம் அதிகம். கோபம் தீர்ந்தபின் வருந்துவார். கண் பாதிப்பு உண்டு. மனோ தைரியம் உடையவர்.. அடிக்கடி கோழைத்தனமாகவும் இருப்பார். மோட்ச சிந்தனையும் இருக்கும். நரம்பு சம்பந்தமான பாதிப்பும் உண்டு. சிலருக்கு சிறைவாசம் உண்டு. காலில் காயம்படுதல் மூட்டுக்கு சிகிச்சை எடுத்தல் போன்றவை உண்டு. இறுதி காலத்தில் முதியோர் இல்லம் செல்லும் நாட்டமிருக்கும். 

 

12-ல் இராகு பகவான்- வெளியூர், வெளி நாடு செல்லும் நாட்டம். வெளி நாட்டு வருமானம். கண் பாதிப்பு, நரம்பு சம்பந்தமான வியாதி. அடிக்கடி கீழெ விழுவார்கள். தூக்கம் குறைவு. பயணத்தில் நாட்டம் அதிகம். 

 

12-ல் கேது – செலவாளி, தனவந்தர், இடம் மாறி முன்னேறுவார். 12-ல் கேது இருந்து 12ம் அதிபதிக்கோ கேதுவுக்கோ எவ்விதத்திலும் திரிகோண அதிபதிகளின் தொடர்பு ஏற்படின் ஞானி ஆவார். மோட்சம் கிட்டும். ஜீவ முக்தி அடைந்து மறுபிறவி இல்லை. இடம் மாறிய பின் வருமானம். அதிக பணங்களை விரயம் செய்வார். செல்வத்தில் நாட்டம் இருக்காது. பிறர் உதவியை நாடமாட்டார்கள். நரம்பு சார்ந்த பிரச்சினைகள் உண்டு. திருமணத்தில் நாட்டமில்லை. ஆன்மீக நாட்டம். ஆன்மீக சம்பந்தமான விரயங்கள். பூர்வீக சொத்தில் வழக்கு. பாதத்தில் ஆணி பிரச்சினை. தூக்கம் குறைவு.

ஆண் பெண் இருவருக்கும் 12-ல் கேது இருக்க கூடாது. குடும்ப வாழ்க்கையை சீர்படுத்தாது. 5 – 9 – 12 தொடர்பு இருந்தால் பின் வாழ்வு சிறக்கும். 

கோட்சார பலன்கள்:

12-ல் சூரியபகவான் : சுக முயற்சிகள் அனைத்தும் கிட்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. 

 

12-ல் சந்திர பகவான்: பண விரயம், கர்வம் உண்டாகும். அதனால் பாதிப்பு அதிகம். 

 

12-ல் செவ்வாய் பகவான் : வீண் வலி, வீண் செலவுகள், கண் பாதிப்பு. பெண்களால் தொல்லை. 

 

12-ல் புதன்: சத்துருக்கள் தொல்லை அதிகரிக்கும். கடன் பாதிப்பு அதிகரிக்கும். மனதிற்கு ஒவ்வாத செயல்கள் நடைபெறும்.

 

12-ல் குரு பகவான்: தகாத வழிகளில் சென்று, பாதிப்புகளை உருவாக்குவார்கள். 

 

12-ல் சுக்கிர பகவான்: இன்பகரமான வாழ்வு. உடைமைகளை விரயமாக்கும்.

 

12-ல் சனி பகவான் – கவலைகள் அதிகரிக்கும். தேவையில்லாத பயங்களை உருவாக்கும். ஆரோக்கியத்தில் குறைபாடு. குடும்பத்திலும் வருமானத்திலும் கசப்பு. கண் பார்வை குறைபாடு. வாக்கில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு அளிக்க கூடாது. கர்ம நிவர்த்திகளை செய்யக்கூடிய காலம். பெரியோர்களின் ஆசி, இக்காலத்தில் பெறுவது சிறப்பாகும். 

0% Complete