Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

பாவம் 11:

லாபஸ்தானம் – உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம். 3- 6- 10 – 11.

3-6 ஒரு அதிபதி. 10-11 ஒரு அதிபதியாக வருவர்.

ஜெயம் செய்பவருக்கு உதவி செய்தல். சுபருக்கு மட்டுமல்ல பாதக அதிபதியோ திதி சூன்ய அதிபதியோ தொடர்பு வந்து விட்டாலும் உபஜெயஸ்தான அதிபதி அவர்களை கவலை இல்லாமல் வைத்திருப்பார். சுபருக்கு வலு கொடுத்து அதிகப்படுத்தி விடுவார். 

6 – 8 ம் அதிபதி சுபராக இருந்தால் உபஜெயஸ்தான அதிபதி வலுத்திருந்தால் அதிக சுப நன்மைகள் கிடைக்கச் செய்வார்.

ஒரு உபஜெய ஸ்தான அதிபதி மற்றொரு உபஜெய ஸ்தான அதிபதி வீட்டில் இருந்தாலும் அவ்வீட்டு நன்மைகளை அதிகப்படுத்தி கொடுக்கச் செய்வார். அல்லது கிடைக்கவேண்டியதை கிடைக்கச் செய்வார்.

 

உப ஜெயஸ்தான அதிபதி மன வலிமை கொடுப்பவர். கால புருஷ தத்துவப்படி உபஜெய ஸ்தான அதிபதிகளான புதன், சனி நன்றாக இருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

11-ம் அதிபதி காலபுருஷனுக்கு பாதகாதிபதி ஆவதால் அதனுடைய பலனை கொடுத்து, அதனால் ஒரு பாதிப்பையும் கொடுத்து மீண்டும் நல்ல பலனை கொடுப்பார்.

11-ம் அதிபதி மீது சூரியன், குரு, சுக்கிரன் செல்லும் போது வளர்ச்சி கிட்ட்டும்.

11-ம் இடம்: எண்ணம், பேராசை. உழைப்பிற்கேற்ற ஊதியம், விரைவான வளர்ச்சி தருபவர் 11ம் அதிபதி. 

10ம் வீட்டுக்கு தனஸ்தானம், குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம்.

தொழிலில் வரக்கூடிய லாபத்தை சுட்டிக்காட்டுபவரும் 11ம் அதிபதியே.

11- மூத்த சகோதரம். லாபம். வெற்றி. உயர் நிலை நீண்ட நாள் நண்பர்கள்.

 

11ம் அதிபதி கெட்டால் லாபம் அடைய இயலாது. சுபருடன் கூடினால் நற்பலனை அதிகப்படுத்தி தருவார்.

 

11ம் பாவகத்தில் சூரியன்: விடாமுயற்சி உடையவர். இசை, விளையாட்டில் ஆர்வம் உண்டு. நிர்வாகத் திறன் அதிகம். இருதய பாதிப்பு உண்டு. ஆபரண சேர்க்கை உண்டு. அரசாங்கம், அரசியல் , சமுதாயத்தினர் போன்றவற்றில் பாதிப்புகள் பிரச்சினை உண்டு. தலை சார்ந்த பாதிப்பு, தாய் தந்தையரை பிரிந்த வாழ்க்கை. இவர்கள் செய்யக்கூடிய விஷயங்களில் தடை, தாமதங்களை தருவார். தாமத திருமணம் / மனம் விரும்பிய திருமணம் / சமுதாயம் ஏற்காத திருமணம். 11-ல் நிறைய கிரகங்கள் இருந்தால் எதையும் அனுபவிக்க விடாது. 

5ம் வீட்டிற்கு 7ம் வீடு என்பதால் குழந்தையின் வாழ்க்கை சிறப்பு. 

11-ல் சந்திரன் – வண்டி வாகனம் சொத்து சுகம் இதில் ஒரு ஏமாற்றம் உண்டு. ஆனால், அதையே தொழிலாக வண்டி வாங்கி விற்றல், ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் கிட்டும். உள்ளூர் சிறப்பில்லை. லாபத்திற்காக அதிக இடமாற்றங்களை சந்திப்பார். நிலையான தூக்கம் இருக்காது. தூக்கம் கெடும். கல்வி உண்டு. சொத்து உண்டு. சூதாட்டப் பிரியர். குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார். சகல கலைகளிலும் நாட்டமிருக்கும். விவசாயத்தின் மீது நாட்டம். தாய்வழியில் இருதாரம் உண்டு. அல்லது தாயே இரண்டாந்தாரமாக இருக்க வாய்ப்புண்டு. கால்வலி, பித்த வெடிப்பு உண்டு. 

 

11-ல் செவ்வாய் – தைரிய சாலி. வாகனம், சொத்தால் வருமானம் உண்டு. நெருங்கிய நண்பரால் ஏமாற்றம், வஞ்ச்சிக்கப்படுதல். சகலகலைகளிலும் நாட்டம் உண்டு. விடா முயற்சிகள் வெற்றி தரும். சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. எல்.ஐ. சி. இன்சூரன்ஸ் ஆதாயம் தரும். விபத்துண்டு. வழக்குண்டு. அதனில் வெற்றியும் உண்டு. உயில் சொத்து அல்லது பினாமி சொத்து கிட்டும்.

 

11-ல் புதன் பகவான் – கணிதம், ஜோதிடம் இவற்றில் சிறப்பு. இடம்மாறி முன்னேறுவர். தடைபட்ட கல்வி ஒன்று உண்டு. உயர் பதவி அடைவதில் சிறு தடை இருக்கும். தாயன்பு குறைவு. தாயன்பை அனுபவிக்க முடியாது. செல்வங்கள் தேடி வரும். நீண்ட ஆயுள் உண்டு. அதீத ஞானம், செல்வ வளமிக்க நண்பர்கள் உண்டு. வியாபாரத்தில் நாட்டம் அதிகம். 

 

11-ல் குரு –  ஆன்மீகவாதி. தான தர்ம சிந்தனை உடையவர். நல்ல பதவி அரசு பதவி உண்டு. குறுக்கு வழியை விரும்பாதவர். நல்ல பொறுப்பில் இருப்பார். பதவி உயர்வு, தடை தாமதம் தெய்வ அனுகிரகம் உண்டு. பொது சேவை ஈடுபாடு உண்டு. பிறர் சொத்து வந்து சேரும். ஆபரணங்களை இழந்து மீண்டும் பெறுவர். 

 

11-ல் சுக்ரன் – விவேகம் உண்டு. அறுசுவைப் பிரியர். பார்வை பிரச்சினை உண்டு. எப்பொழுதும் தாராளமான பணப்புழக்கம் உண்டு. முதல் கூட்டுத் தொழில் சரிவை சந்தித்து பின் 2ம் தொழில்  மேலோங்கும். சிற்றின்ப நாட்டம். வசீகரமான தோற்றம். வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகள் கிட்டும். சுமாரான படிப்பு. பின் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும். இரு தார யோகமுண்டு. குடும்பத்தில் பிரிந்து வாழ்ந்தவர்கள் உண்டு. அதிக உறவுகள் இல்லை. இருந்தால் பிடிப்புடன் (பிரியமாக) இருப்பார். சுற்றுலாத் துறை மற்றும் ஜவுளித் துறை சிறப்பாக இருக்கும். 

 

11-ல் சனி பகவான் – செல்வ செழிப்பான வாழ்க்கை. தலை சார்ந்த பிரச்சினை உண்டு. போஜன பிரியர். கண்ணாடி அணிவார்கள். குடும்பத்தில் காணாமல் போனவர்கள் உண்டு. புத்திர தோஷம் / தாமத குழந்தை / ஆண் குழந்தை பற்றிய கவலைகள் இருக்கும். நடைபாதை சார்ந்த பிரச்சினைகள் உண்டு. ஆயுள் பலம் உண்டு. மறதி அதிகம் உள்ள ஜாதகர். பின் வாழ்க்கை சிறப்பு. கால்வலி, முட்டுவலி பிர்ச்சினை உண்டு. அரசியல், காண்ட்ராக்ட். மோட்டார் வாகனம் சார்ந்த தொழிலில் ஆதாயம் உண்டு. படிப்பில் நாட்டமிருக்காது.

 

11-ல் ராகு – நலிந்த தேகம், குடும்ப வழக்கு அல்லது பொருளாதார வழக்கு உண்டு. மாங்கல்யப் பிரச்சினை உண்டு. குழந்தைக்கு நீரில் கண்டம் அதிகம். கலைத்துறையில் நாட்டம் அதிகம். கால்வலி உண்டு. மருத்துவ செலவு உண்டு. முதல் தொழில் மாறும். மருத்துவத் துறை வெற்றிபெறும். தந்தையிடம் விரோதம் உண்டு. பெண்களால் ஆதாயம். 

 

11-ல் கேது – ஆன்மீக நாட்டம் உடையவர். அதீத ஞானமுடையவர். ஞான உபதேசம் செய்வார். தனவந்தர். எல்லோரும் இவர்களிடம் மரியாதை செலுத்துவார்கள். மூத்த சகோதரம் மற்றும் நண்பர்கள் சரியில்லை. குடும்ப பொருளாதாரம் சரியாயிருக்காது. வாழாத பெண், கைம்பெண்ணுடன் தொடர்பு தரும். வேற்றுமத நண்பர்கள் தொடர்பு உண்டு. பிறருக்கு நல்வழி காட்டுவார்கள். ஆபரண நாட்டமில்லை. நீண்ட ஆயுள் உண்டு. சட்டம், ஜோதிடம், மருத்துவம் சிறப்பு. 

 

கோட்சாரப் பலன் 

11-மிடத்திற்கு கோட்சார சூரியன் செல்லும் காலம் – ஆரோக்கியம் சீராகும். கௌரவம் கிட்டும். தன சேர்க்கை உண்டு. 

 

11-ல் சந்திரன் – மன மகிழ்ச்சி. தன வரவு நண்பர்கள் சந்திப்பு உண்டு. 

 

11-ல் செவ்வாய் – காரிய வெற்றி. அளவற்ற பொருள் வரவு. சமூகத்தில் நல்ல நிலை.

 

11-ல் புதன் – புத்திரர்களால் லாபம். சுக வாழ்வு. நண்பர்களின் சேர்க்கை. தனவரவு உண்டு. மன மகிழ்ச்சி உண்டாகும்.

 

11-ல் குரு – பறி போன பதவி, இழந்து போன பொருள் மீண்டும் சேரும். உடல் முன்னேற்றம் கிட்டும்.

 

11-ல் சுக்கிரன் – நண்பர்கள் சேருவார்கள். விசேஷம், விருந்திற்கு செல்லும் நிலை இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சிற்றின்பம் சிறக்கும்.

 

11-ல் சனி பகவான் – தீராக் கோபம் உண்டு. பிறர் அஞ்சுவார்கள். பெயர் புகழ் உண்டு. காரியங்கள் வெற்றியாகும்.

0% Complete