10ம் பாவம்
நம்மை அறிமுகப் படுத்தும் பாவம். – ஜீவனம், தொழில், வியாபாரவிருத்தி, அந்தஸ்து, திறமை, குறிப்பது.
10ம் பாவம் கெட்டாலோ, 10ம் அதிபதி கெட்டாலோ தலைமறைவு வாழ்க்கை வாழ்க்கையில் ஒருமுறையாவது நடந்து விடும்.
போலி பத்திரம், போலி பத்திர பதிவு இவற்றையும் குறிக்கும்.
ஸ்டாக் வைக்கும் ( தானியங்களை சேமிக்கும் இடம் ) குடோன், முதலாளியின் அந்தஸ்து.
தொழில் எப்படி அமையும் ? எப்படி இருக்கும் ?
சரம், ஸ்திரம், உபயம் – அடிப்படையில்
சரம் என்றால் நகர்ந்து கொண்டிருப்பது. முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும்.
ஸ்திரம் – நிலையானது. ஒரு இடத்தில் நிலையாக இருந்து தொழில் செய்வார். மெதுவாக வருவாய் ஆரம்பித்து நிலையான வருவாயாக இருக்கும்.
உபயம் – செல்லும் திரும்ப வரும்.
10ம் இடம் சர ராசி எனில் தொழிலுக்காக பயணம் செல்வார்கள். நடமாடும் தொழில்களான கொரியர், தள்ளுவண்டி விற்பனை, ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ், திடீர் உயர்வு இருக்கும்.
ஸ்திரம் – கடை வைத்து வியாபாரம் செய்வது – மளிகைக் கடை. டெவலப்மெண்ட் மெதுவாக இருக்கும்.
உபயம் – ஒரு தொழிலை விட்டு மறுபடியும் அதே தொழிலை செய்வது. அவசரம் அதிகம் இருக்கும்.
7-ம் வீட்டுக்கு 10ம் வீட்டை பார்க்க [ மஉ-ம் மேஷ லக்னம். 7ம் வீடு. துலாம். துலாமிற்கு 10ம் வீடு கடகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் இடத்தை பார்த்தால் கணவனின் சுகம், அந்தஸ்தை அறியலாம்.
ஜெனன ஜாதகத்தில் 10-ல் சூரியன்:
அரசாங்கத் தொடர்பு, அரசாங்க டெண்டர் மூலம், அரசாங்க கமிஷன் பெற்று தொழில் செய்வது. ரிஸ்க் எடுக்காமலே உயர்வடைதல். 10-ல் சூரியன் இருந்து பாவிகள் தொடர்பு ஏற்பட்டால் மக்கள் தொடர்பு, பொதுவாழ்வில் ஒரு களங்கம் ஏற்படும். பொது ஜனத் தொடர்பு.
மகரம் – வாடிக்கையாளர். 7-ம் இடமும் வாடிக்கையாளர் என்பர். மகரத்திற்கு 7ம் இடம் கடகம்.மகரத்தில் சூரியன் இருந்தால், தன் வீட்டுக்கு 12ம் இடமான கடகத்தை பார்ப்பதால் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.
சிறு சிறு விஷயங்களையும் நுணுக்கமாக செய்வார். தன் பெயரிலே தொழில் செய்வார். உயர்வான வேலை. மதிப்பு மரியாதை தரக்கூடிய வேலை. அல்லது தந்தையின் தொழில்.
10-ம் இடம் மாமியார். [ 7க்கு 4 மனைவியின் தாயார் ] 10-ல் சூரியன் இருந்தால் மாமியாரிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.
10-ல் சந்திரன்
மிக தைரியசாலி, திறமைசாலி. நீர் சார்ந்த தொழில். திரவம் சார்ந்த தொழில். அடிக்கடி பயணம் அதிகம் இருக்கும். நடிப்புத் திறன் உண்டு. பெண்களால் ஆதாயம். அல்லது பெண்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வேலை செய்வார். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வார். ஆனால் அதில் சிறப்பில்லை. தானியங்கள், உப்பு, கடல் சார்ந்த தொழில்கள், உணவுகள்.
10-ம் இடத்தில் செவ்வாய்
யூனிபார்ம் அணிந்த தொழில். நெருப்பு சார்ந்த தொழில். துணிச்சலாக செயல்படுவார். விடாமுயற்சியால் காரியத்தை ஜெயம் செய்வார். மருத்துவ குணம் இருக்கும். கடன் உண்டு. குடும்பத்தை பிரிந்து ஜீவனம் செய்வார். தொழில் செய்யும் இடத்தில் அடிக்கடி முன் கோபம், டென்ஷன் இருக்கும்.
10-ல் புதன்
சொந்தத் தொழில் நாட்டம் உண்டு. எழுத்துப்பணி, பத்திரிக்கை, கதை, கட்டுரை, இலக்கியம், ஆசிரியர், எத்துறையிலும் வெற்றி வாகை உண்டு. வழக்கறிஞர், ஜோதிடர், தபால்காரர், இரட்டைத் தொழில் உண்டு. வான சாஸ்திர ஈடுபாடு உண்டு. தாய் மாமனிடம் (அ) மாமா என்ற உறவிடம் தொழில் சார்ந்த ஆலோசனை.
10-ல் குரு:
பெரிய நிறுவனத்தில் வேலை. கௌரவமான பதவி . பணம் புழங்குமிடத்தில் வேலை. அறக்கட்டளை மூலம் நன்மதிப்பு உண்டு. ஆண் குழந்தை பற்றிய கவலை என்றுமிருக்கும். அன்னதானம் செய்வார். தர்ம சிந்தனை உண்டு. பொறுமை அதிகம். தெய்வ நம்பிக்கை உண்டு.
10-ல் சுக்ரன்
களத்திரம் மூலம் வருமானம். களத்திரம் மூலம் அந்தஸ்து, கௌரவம் , தொழில் விருத்தி உண்டு. அலங்காரம் சார்ந்த தொழில்கள் . பெண்கள் சார்ந்த தொழில்கள் அல்லது வேலை இருக்கும். கலைத் துறை, அல்லது இனிப்பு சார்ந்த தொழில்கள் இருக்கும். கீழ் பதவியிலிருந்து மேல் பதவிக்கு பதவி உயர்வு கிட்டும். சங்கீதம் பாடுவார். இசைக்கருவிகளை இயற்றுவார். சுற்றுலாத் துறை, தங்கும் விடுதி, அலங்காரப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் – இவற்றில் நாட்டம் உண்டு.
10-ல் சனி பகவான்:
கடின உழைப்பாளி. பொறுப்பான பணிகளில் ஈடுபடுவார். எடுபிடி வேலை, வீட்டு வேலை, மண் பாண்டங்கள் / மண் சார்ந்த தொழில்கள், பொது சேவையில் ஈடுபாடு, தொழிலில் தடை, தாமதம், திருப்தி இல்லாத நிலை.
மகரத்தில் செவ்வாய் – மண் ஆராய்ச்சியாளர். மகர ராசி / மகர லக்னம் – இவர்கள் வீடு கட்ட நிறைய மண் எடுத்து வந்து பக்குவப்படுத்தி கொட்டுவார். இவர்கள் இடம் வாங்கும் போது சாலை தாழ்ந்திருக்கும். வீடு உயரத்திலிருக்கும். வீடு கட்டியபின் சாலை உயர்ந்து விடும். மறுபடியும் மண் கொட்டி உயரப்படுத்தும் நிலை உருவாகும். இவர்கள் வீட்டில் எலியும் பெருச்சாளியும் இருக்கும். வீட்டைச் சுற்றி ஓட்டை இருக்கும்.
கடக வீட்டில் கரையான் இருக்கும்.
நிலக் கனிமங்கள் சார்ந்த தொழில். இவருக்கு கீழ் பணியாற்ற பலர் இருப்பார். வேலையாட்களிடம் பொறுப்பாக ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். பிறரை நம்ப மாட்டார். ஆரோக்கியக் குறைபாடு உண்டு.
10-ல் சனி முதல் தொழில் சரிவை கொடுத்து விடும். இரண்டாம் தொழில் மெதுவாக மெதுவாக விருத்தியாகும். விருத்தியாகும் போது உடல் நலக் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
10-ல் ராகு – பயணம் சார்ந்த தொழில். வெளியூர் / வெளி நாடு சார்ந்த தொழில். வாஸ்து நிபுணர். அரசாங்கத்திற்கு புறம்பான தொழில். ஓரிடத்தில் இருந்து தொழில் செய்ய மாட்டார், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். பிறரால் வஞ்ச்சிக்கப்படுவார். வேலை தேடி அலையும் நிலை ஏற்படும். வேஷம் போட்டு நடிக்கும் எண்ணம் இருக்கும். பெண்களால் வஞ்ச்சிக்கப்படுவார்.
10-ல் கேது.
அதீத ஞானம் உடையவர். நேர்மை தவறாதவர். எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் அடைவார். போலி ஆவணங்கள், போதை வஸ்துக்கள், மெழுகுவர்த்தி, நூல்கண்டு, நூல் சார்ந்த தொழில்கள், தையல் மிஷின், பின்னல் தொழில் சார்ந்த தொழில்கள் உண்டு. பாய், கூடை, கம்பி பின்னுதல் ( கை வினைஞர் ). மாந்தரீகம், இரவு நேர பூஜை செய்தல், தலைமுடி விக், கவசம், விற்பனை. அமானுஷ்யம் சார்ந்த தொழில். குற்றம் செய்பவரை நேரடியாக தண்டிப்பார். மனமும் செயலும் ஒன்றாக இருக்கும். பட்டம் பதவிகளை வெறுப்பார். இவர்களுக்கு கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தவரை வதம் செய்து விடுவார்.
கோச்சார பலன்
10-ல் சூரியன் வரும் போது காரிய வேற்றி, வீர தீர செயல்கள் புரிவார். எதிரிகள் அஞ்சுவார்கள்.
10-ல் சந்திரன் செல்லும் காலம் – பணியாட்களால் மகிழ்ச்சி, முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
10-ல் செவ்வாய் செல்லும் காலம் – நன்மை தீமை சரிசமமாக இருக்கும். செய்யும் தொழில் சிறக்கும். அவசரம் கூடாது. கடுமையான உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.
10-ல் புதன் செல்லும் காலம் – எதிரிகள் தொல்லை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். கேளிக்கை, விளையாட்டில் நாட்டம் அதிகரிக்கும். இன்பம் அதிகரிக்கும்.
10-ல் குரு செல்லும் காலம் – பதவியை பறிப்பார். கைப்பொருள் விரயம், உடல் நலம் கெடும்.
10-ல் சுக்ரன் செல்லும் காலம் – அவச்சொல், அவமானம், பெண்களால் பாதிப்பு, மனக்கவலைகள் அதிகரிக்கும். துன்பங்கள் நேரும்.
10-ல் சனிபகவான் செல்லும் காலம் – புதிய தொழில் அல்லது உத்தியோகம் கிட்டும். பொருள் விரயம், அவச்சொல் ஏற்படும்.
10ம் பாவம் நிறைவு.