Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/38
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

ஷட் பலம்:

  1. நைசர்க்கியபலம்: இயற்க்கையான பலம் என்ன என்பதனை பார்ப்பது. ஒரு கிரகம் சூரியனிடம் இருந்து பெற்ற ஒளி, தன் ஒளி இரண்டையும் சேர்த்து எவ்வளவு தருகின்றது (அ) பிரதிபலிக்கின்றது, எவ்வளவு தன்னுள் வைத்திருக்கின்றது என்பது. [ இயற்கையான பலம், இயல்பான பலம்]
  2. சூரியன் 1.000 [ முழு பலம் – ஒளியைத் தருபவர்.
  3. சந்திரன் 0.857
  4. சுக்கிரன் 0.714
  5. குரு: 0.571
  6. புதன் 0.429
  7. செவ்வாய்: 0.286
  8. சனி 0.143
  • சூரியனின் தூரம், பூமியின் தூரம், கிரகத்தின் விட்டம் – இவற்றைக் கொண்டு ஏழு விதமான கணிதம் கொண்டு கணித்துப் பெறப்பட்ட ஒளி அளவாகும் மேலே குறிப்பிட்டவை.
  • சனியை விட செவ்வாய் வலிமை வாய்ந்தவர். செவ்வாயை விட புதன் வலிமை. புதனை விட குரு வலிமை. குருவை விட சுக்கிரன் வலிமை. சுக்கிரனை விட சந்திரன் வலிமை. சந்திரனை விட சூரியனே வலிமை மிக்கவர் என அறிய வேண்டும்.
  • சூரியனை விட ராகு பகவான் வலிமை பெற்றவர். ராகு பகவானை விட கேது பகவான் வலிமை பெற்றவர்.

 

 

 

 

 

 

குரு

 

 

சனி கேது

 லக்

 நைசர்க்கிய பலம் அறிய உதாரண ஜாதகம்.

 

புதன் செவ்

 

சூரி 8 சுக் 6 ராகு 11

 

சந்திரன்

 

     

குரு தனித்து இருந்தால் இயற்கையான பலம். மிதுனத்தில் சனி பகவானும் கேது பகவானும் . கேது வலிமை அதிகம் என்பதால் சனியை மட்டுப் படுத்தி விடுவார். [ லக்னாதிபதி 5-ல் இருந்தால் காதல் வயப்படுவார். ஆனால் கேது மட்டுப்படுத்தி விடுவார். லக்னாதிபதி பலம் கேதுவால் இழந்து விடுகிறார் ] மிதுனத்தில் உள்ள கிரகங்களை தனுசுவில் உள்ள கிரகங்கள் பார்க்கின்றன. சனியை விட பார்க்கும் கிரகங்கள் பலமானது.

சூரியனுடன் ராகு இருப்பதால் கிரகண தோஷமாகும். மேலும், ராகு முதலில் சூரியனைத் தொடுவார். பின்பே சுக்ரனைத் தொடுவார். சூரியன் முன்னோக்கி செல்லும் கிரகம். ராகு பின்னோக்கி செல்லும் கிரகம். இந்த ஜாதகர் கிரகணத்தை நோக்கி செல்கிறார். தனுசு – மார்கழி மாதம். மார்கழி 8ம் நாள். (சூரியன்) 11ந்தேதி கிரகணம் நடக்க உள்ளது. பொதுவாகவே சூரிய கிரகண தோஷம் – முன், நடப்பு, பின் ஆகிய 3 மாதங்கள் கிரகண தோஷ காலமாகும்.

சனி – பொது மக்கள். ராகு இரண்டும் சந்திக்கும் காலம் பொது ஜனங்களுக்கு நிறைய சேதாரம் / இறப்பு ஏற்படும்.

சூரியன் எதிரிடை நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால், அது சூரியன் தரும் பலனுக்கு மாறுபடும். சூரியன் நிற்கும் டிகிரி 12 பாவத்தில் அதே டிகிரியில் கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களும் சூரியனால் அஸ்தமானதாக [ முன் பின் 4 டிகிரி வரை உள்ள கிரகங்கள் ] ஆகிவிடும். அக்கிரகங்களின் பலனை சூரியன் அபகரித்துவிடுவார். [4,9 க்குரிய சுக்ரன் 7க்குரிய சூரியனுடன் ] என்பதால் திருமணம் ஆன பின்பு குடும்பத்துடன் வெளியூர் செல்வார். பிரச்சினை அதிகரிக்கும்.

5-8 க்குரிய புதனும் பலமிழந்ததால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறாகாது. லக்னத்திற்கு 12-ல் இருப்பதால் வெளியூர் சென்று விடுவார். விரக்தி அதிகரித்து சென்று விடுவார்.

சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகம் இல்லை என்பதால் மன சஞ்சலம் அதிகம் இருக்கும்.

சுக்ரன் தான் சூரியனைத் தொடும். [ சுக்ரன் பலம் குறைவு ]

சூரியன் ராகுவைத் தொடுவதால் சூரியனும் பலம் குறைவு.

செவ்வாயை விட புதன் பலமானவர் என்பதால் செவ்வாய் பலமிழந்து விட்டார். செவ்வாய் உச்சமாக இருந்தால் பலமிழந்த நிலையில் தான் உள்ளார்.

பாவகர்த்தாரி தோஷம் கொண்ட ஜாதகம்.

திக்பலம்: திக்பலம் என்றால் திசை.

திக்பலம் என்பது லக்னத்தை அடிப்படையாக வைத்து தான் எடுக்க வேண்டும்.

காலபுருஷ லக்னம்: மேஷம் – கிழக்கு. திக்பலம் கேந்திர வீடுகளைத் தான் சுட்டிக் காட்டும். 1- 4- 7 – 10. எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்தை கிழக்கு திசையாக கருத வேண்டும்.

திக்பலம் பெற்ற கிரகம் உச்ச ஸ்தானத்தில் நிற்பதற்கு ஒப்பான பலத்தைக் கொடுக்கும்.

ஒரு கிரகம் ஸ்தான பலத்தில் பலம் இழந்தாலும் கூட [ கேந்திர , திரிகோணம், 3,6,8,12ல் இருந்தாலும், நீச்சம், அஸ்தங்கம் ] திக்பலம் பெற்ற கிரகமானது வலிமை பெற்ற கிரகமாக கருத வேண்டும். ராகு, கேதுக்களை தவிர்த்து, மற்ற அனைத்து கிரகங்களும் ஓர் குறிப்பிட்ட திசையில் வலிமை அடைகிறது. திசைக்குரிய பலன் களை லக்னத்தினை அடிப்படையாக கொண்டே பலனறிய வேண்டும்.

உ-ம். தனுசு எனில் தனுசுவின் திசை: கிழக்கு.

உ-ம்: கடகம் லக்னம் எனில் 1- கடகம் [ கிழக்கு ], 4- துலாம் – தெற்கு, 7 – மேற்கு 10 – வடக்கு.

லக்னத்தை முதன்மையான வீடாக் கொண்டு 1- 4- 7 – 10 வீடுகளில், குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பதை திக்பலம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு கிரகத்தின் நிலையான வலுவைக் கணக்கிட, ஸ்தான பலத்திற்கு அடுத்த நிலையில் திக்பலம் குறிப்பிடப்படுகிறது.

நாம் பிறக்கும் லக்னமே கிழக்கு திசையை குறிக்கும். லக்னத்திற்கு 4மிடம் தெற்கு, 7 – மேற்கு, 10மிடம் வடக்கு திசையை குறிக்கும். ஒரு கிரகம் ஸ்தான பலம் இழந்தாலும், திக்பலம் பெறும் போது அக்கிரகம் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது.

ஸ்தான பலம் என்பது நேர்முக வலிமையைக் காட்டும். திக்பலம் என்பது மறைமுக வலிமையைக் காட்டும்.

லக்னத்தில் குருவும், புதனும் திக்பலம் அடைகிறார்கள். 4-ம் வீட்டில் சுக்கிரனும், சந்திரனும் , 7-ம் வீட்டில் சனி பகவானும், 10ம் வீட்டில் செவ்வாயும், சூரியனும் திக்பலம் அடைகின்றன.

உ-ம்: மகர லக்னத்தில் குரு [ நீச்சம் என்றாலும் திக்பலம் ] வரும் பணம் அபரிமிதமாக வேறுவகையில் வரும். உறவுக்கார ர்களை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் நல்ல அந்தஸ்து, உயர்ந்த மனிதர்கள் தேடி வருவார்கள்.

மீனலக்னம் – லக்னத்தில் புதன். புதன் நீச்சம் ஆனால் திக்பலம் பெற்றால் படிப்பறிவு இல்லை என்றாலும் அனுபவ அறிவு அதிகமிருக்கும். இவர்கள் பேச்சை அடுத்தவர்கள் கேட்பார்கள். வீட்டில் செடி இருக்கும்

அஸ்தங்கம் ஆனாலும் திக்பலம் பெற்றால் நேரிடையாக தராமல் மறைமுகமாக நல்ல பலன் தந்துவிடும்.

திக்பலம் பெற்ற கிரகம் அதிக நற்பலனைத் தரும்.

திக்பலமும் பெற்று ஆட்சியும் பெறும் போது அதிக வலு கொண்டதாக அக்கிரகம் கருதப்படும்.

உ-ம்: தனுசு லக்னம் – மீனத்தில் சந்திரனும் சுக்ரனும் எனில், இரண்டு கிரகங்களும் திக்பலம் பெறுகின்றன.

திக்பலம் அடையும் இடத்திற்கு சம சப்தம ஸ்தானத்தில் அக்கிரகங்கள் திக்பலத்தை இழந்து நிஷ்பலத்தை அடைகின்றன.

துலா லக்னம். செவ்வாய் மகரத்தில் . செவ்வாய் உச்சமாக இருந்தாலும் ஆனால் நிஷ்பலம் அடைந்த காரணத்தினால் வேலை கிடைப்பது சிரமம் கணவனால் நிம்மதி இருக்காது. உடல் சோர்வு அதிகமிருக்கும். போராட்டம் எதிலும் இருக்கும். ஆனால், செவ்வாய் கடகத்தில் இருந்தால் நல்லது செய்வார். நீச்சம் ஆனாலும் திக்பலம் பெறுவதால் துலா லக்னத்தினருக்கு கடக செவ்வாய் நல்லது செய்வார்.

பெண்கள் ஜாதகத்தில் 4-மிடத்தில் சுக்ரனும் சந்திரனும் திக்பலம் பெறக் கூடாது. 4-மிடம் மார்ப்கம். சுக்ரன் கவர்ச்சி. அழகு. சந்திரன் – அழகு. ஏமாற்றத்தை தருபவன். 4-ம் இடம் மனம், மானம், கற்பு. இழுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன் எனில் அவச்சொல், தேவையில்லாத பழக்கத்தை கொடுத்து விடும். மனசு ஒரு இடத்தில் நிற்காது. அலைபாய்ந்து கொண்டே இருக்கும். வீசிங்க் ட்ரபிள், சளித் தொந்தரவு ஏற்படும். ஒரு களங்கம் ஏற்பட்டே தீரும். இவர்கள் மெடிடேஷன், தேவையில்லாமல் பேசக் கூடாது. சந்திரன் மதுப்பழக்கத்தை ஏற்படுத்தி விடும். கூல்ட்ரிங்க்ஸ் அதிகம் குடிப்பார்கள்.

சந்திரன் + ராகு [திருவாதிரை, சதயம், சுவாதி ] அதிகம் கூள்ட்ரிங்க்ஸ், ஐஸ்க்ரீம், காபி,, டீ அதிகம் குடிப்பார்.

துலாம் வீட்டில் ராகு நட்சத்திரம் இருப்பதால் அதிகம் கூல்ட்ரிங்க்ஸ், காபி, டீ அதிகம் குடிப்பார்கள்.

7-ல் சனி எனில் திக்பலம் பெற்றதனால், திருமணம் ஆனபின் தொழில் சிறக்க ஆரம்பிக்கும். அதிகம் வீட்டில் இருக்க மாட்டார். காலபுருஷனுக்கு 7-ல் உச்சம் பெறுவதால், இவர்கள் அணியும் உடை மிக நேர்த்தியாக தனித்துவமாக இருக்கும். லக்னத்தில் சனி – சோம்பேறி. 7-ல் சுறுசுறுப்பாக செயல்படுவார். அவர்களுக்கு பிடித்த விஷயத்தை மட்டும் மேஷம், கும்பம் லக்னத்தினர் செய்வார். கும்பம் – வாதம் செய்வார். ஒரு விஷயம் சொன்னால் அதை நான் கு பேரிடம் கேட்டு தன் விருப்பத்தின் படி தான் செய்வார்.

10-ல் சூரியனும் செவ்வாயும் திக்பலம். செவ்வாய்- இரத்தம். சூரியன் – ஆத்ம காரகன். சிம்மத்திற்கு சஷ்டாக வீடாக சூரியனுக்கு (௳கரத்தில் சூரியன் )இருந்தாலும் நன்மை செய்வார். 10ம் வீடு – பித்ருக்களால் உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்யும்.

உ-ம். மிதுன லக்னம். குரு தனுசுவில். குரு நிஷ்பலம். லக்னத்திற்கு 10-ல் மீனத்தில் சுக்ரனும் நிஷ்பலம். கணவனைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருப்பார். 7-ம் இடம் : களத்திரம் என்பதால். குரு நிஷ்பலம் என்பதால் தனித்து இருப்பார். யாருடனும் ஒட்டாமல் இருப்பதால், களத்திரம் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். சுக்ரன் 5,12க்குரியவர். சுக்ரன் உச்சமானாலும் நிஷ்பலம் என்பதால், தனது ஆழ்மன ஆசைகள் பூர்த்தி ஆகாது. படுத்தால் தூக்கம் வராது. 12- வெளியூர் பயணம். நிஷ்பலம் ஆனதால் எங்கும் செல்ல வாய்ப்பே அமையாது. 4-ம் இடம் உள்ளூர். குரு நிஷ்பலம் என்பதால் பணவரவு அதிகமிருக்காது.

சுக்ரன்

 

 

லக்னம்

 

 

 

 

 

குரு

 

 

 

 

பெண்கள் ஜாதகத்தில் அஸ்வினி, பூரட்டாதி நட்சத்திரம் இருப்பவர்களுக்கு தக்க வழிகாட்ட வேண்டும். இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லறத்தில் முழுமையான நிறைவைத் தராது. தன் பர்சனல், குடும்பத்து விஷயங்களை மற்றவர்களிடம் பேசக் கூடாது. துணிமணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது. வினாயகர் வழிபாடு செய்ய வேண்டும். அடுத்தவரிடம் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு 7மிடத்துக்கு செவ்வாயின் 8-ம் பார்வை வரக் கூடாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி – எதிலும் திருப்தி இராது. எவ்வளவு கொடுத்தாலும், திருமண உறவிலும் திருப்தி இருக்காது. கேட்டை – கிணற்றடி ரகசியம். ரகசியம் தங்காது. ஆயில்யம் – சலிப்பாக பேசும். ரேவதி – கவர்ச்சியாக பேசும். உடல் சோர்வு, வீர்யப் பிரச்சினைகள் இருக்கும். போதைப் பழக்கமாக்கி விடும்.

Lesson 101 05.08.2025

சேஷ்டா பலம்: ஜேஷ்டா பலம், சேட்டை பலம் , கதி பலம் [ நேர் கதி, வக்ர கதி ] என்றும் அழைக்கப்படும்.

பொருளாதாரம், பெயர், புகழ், செல்வாக்கு அறியலாம்.

முக்கியமான விதி:- கிரகத்தினுடைய கதி [நேர்கதியில் செல்கிறதா, வக்ர கதியில் செல்கிறது ] ஒரு கிரகம் என்ன வேகத்தில் செல்கின்றது என்பதை சேஷ்டா பலம் கொண்டு அறியலாம்.

குஜாதி ஐவர் [ செவ்வாய், புதன், சுக், குரு, சனி ] மட்டுமே  நேர்கதி, வக்ரகதி பெறுவர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதியில் புதனும் சுக்ரனும் ( உள்வட்டம் ) இருக்கின்றனர். புதன் வக்ரமாகும் பாகை: 14 பாகை முதல் 23 பாகை வரை தான் வக்ரமடைவார். புதன் எப்போதுமே சூரியனை விட்டு முன்பின் 28 டிகிரி வரை செல்லும். சுக்ரன் 47 டிகிரி வரை முன்பின் செல்லும். அதற்கு மேல் செல்லாது.

முக்கூட்டு கிரகங்கள் : சூரியன் – புதன் – சுக்ரன். இந்த மூன்று கிரகங்களும், சூரியன் இருக்குமிடத்தில், முன் பின் வீடுகளில் மட்டுமே இருப்பர். சூரியன் விருச்சிகத்தில் எனில் தனுசுவிலோ அல்லது துலாமிலோ மட்டுமே இருப்பர். சூரியனிலிருந்து 23 – 29 டிகிரி வரை சுக்ரன் வக்ரம் அடையும் பாகையாகும்.

வெளி வட்ட கிரகங்கள்: சூரியனுக்கும் பூமிக்கும் அப்பால் உள்ள வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் [ வக்ரபாகை சூரியனிலிருந்து 132 – 228 டிகிரி வரை ], குரு [ வக்ர கதி சூரிய பாகையிலிருந்து 115 டிகிரி முதல் 245 டிகிரி வரை ] , சனி வக்ர டிகிரி சூரியனிலிருந்து 109 டிகிரி – 251 டிகிரி வரை சனி வக்ர பாகையாகும்.

எளிமையாக சொல்ல வேண்டுமெனில் சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 4 வீட்டில் சனி வக்ரம் பெற ஆரம்பித்து, 9 வீடு வரை வக்ர கதி என்று சொல்வார்கள்.

கதி கணக்கு: [ கதி – வேகம் ] கிரகங்கள் என்ன வேகத்தில் செல்கின்றது எந்த வேகத்தில் பலனளிக்கும் என்பதை தீர்மானிக்க உதவுகின்றது. வக்ர

ஒரு கிரகம், தனது உச்ச வீட்டில் இருந்தால் இரண்டு மடங்கு பலம் வாய்ந்ததாக கருதவேண்டும். [200%]

ஒரு கிரகம் தனது மூலத்திரிகோண வீட்டிலிருந்தால் 1.75 % பலம் கொண்டது.

ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டிலிருந்தால் 1.50% பலம் கொண்டதாக கருத வேண்டும்ட.

ஒரு கிரகம் தனது நட்பு வீட்டிலிருந்தால் ஒரு மடங்கு 100% பலம் வாய்ந்தது. ஒரு கிரகம் தனது சம வீட்டிலிருந்தால் 0.75% பலம் வாய்ந்தது. ஒரு கிரகம் தனது பகை வீட்டிலிருந்தால், 0.50% பலம் கொண்து என கருத வேண்டும். நீச்ச வீட்டில் இருந்தால், 0.25% பலம் உள்ளதாகவே கருத வேண்டும்.

கிரகங்கள் ஒரு கு/ரிப்பிட்ட திசையில் அல்லது அயனத்தில் நிலையில் (கதியில்) இருக்கும் போது அவை பெறும் சிறப்பு வலிமையே சேஷ்டா பலம் எனப்படுகிறது. குறிப்பாக, சூரியனும் சந்திரனும் உத்திராயணத்தில் சேஷ்டா பலம் பெறுகிறார்கள்.

சூரியன் உச்சம் மேஷம், சந்திரன் – உச்சம் -ரிஷபம்.

உத்திராயண காலத்தில் [ வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ] உச்சத்தை நோக்கி [ சந்திரன் விருச்சிகத்திலும், சூரியன் துலாமிலும் நீச்சம் ] செல்லும் காலம். ஆரோகண கதி. [ தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் காலம் உத்திராயண காலம் ].ஆடி மாத்தில் இருந்து தட்சிணாய காலம் மார்கழி வரை. சூரியனும் சந்திரனும் உத்திராயணத்தில் பலம் பெறுகிறார்கள்.

வெளிவட்ட கிரகங்கள் – வக்ர கதியில் இருக்கும் போது சேஷ்டா பலம் பெறுகின்றன. மேலும், சனி, சுக்ரன், குரு, செவ். புதன். ஆகிய கிரகங்கள் புதனின் வீடுகளில் [ மிதுனம், கன்னியில் ] சேஷ்டா பலம் பெறுகின்றன.

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலப்பகுதி ( தை முதல் ஆனி மாதம் வரை ) – உத்திராயண காலம் ஆக கருதப்படுகின்றது. சுப காரியங்களுக்கும், விளை நிலங்கள் அனைத்திற்கும் சிறந்த காலமாக கருதப்படுகிறது. தேவர்களின் பகல் பொழுது.

தட்சணாயக் காலம் [ ஆடி முதல் மார்கழி வரை ] சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் காலமாகும். தேவர்களின் இரவுப்பொழுது.

ஒரு முகூர்த்தம் எடுக்க கசரமும், விவாகச் சக்கரமும் மிகவும் முக்கியமானவை.

ஆபரேஷன் செய்ய – அன்றைய நாளிற்கு சந்திராஷ்டமம் கூடாது. ஜீவன் முழுமையாக இருக்க வேண்டும்.

பெண், மாப்பிள்ளை பார்க்க நேத்திரம் உள்ள நாளில் செல்ல வேண்டும்.

கதிவகைகள்: [ கதி = சேஷ்டா பலம் = 60 முழுமையானது ]

  1. சூரியனுக்கு 3ம் இத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் போது சமகதியில் செல்லும். இதற்கு பலம் 30.
  2. சூரியனுக்கு 4-ல் செல்லும் கிரகங்கள் மந்த கதி(வேகத்தில்) – பலம் 15.
  3. சூரியனுக்கு 5 / 6-ல் கிரகங்கள் வக்ர கதி பெறுகின்றன. வக்ர கதிக்கு 60 பலம்.
  4. சூரியனுக்கு 7, 8-ல் அதி வக்ர கதி. அனுவக்ரம் என்றும் சொல்வர். பலம் 30.
  5. சூரியனுக்கு 9, 10 -ல் வக்ர நிவர்த்தி கதி பெறுகிறது. பலம் 15 ஆகும்.
  6. சூரியனுக்கு 11-ல் சீக்கிர கதி (அதிசாரம், சர கதி ) – பலம் 45.
  7. சூரியனுக்கு 12-ல் அதி சீக்கிர கதி . இதற்கு பலம் 30.

வக்ர கிரகங்களான ராகு/கேதுவின் நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களும் வக்ர கிரகங்களாகவே கருதி வக்ரகதி பலன் எடுக்க சரியாக வரும்.

சனி பகவான் சுவாதியில் உச்சமாகின்றார். கேந்திரத்தில் இருந்தால் பலம் பெற்றவராகின்றார். 3ம் பார்வை – தனுசு 10 பார்வை கடகம் என நாம் பலனெடுப்போம். ஆனால், சனி சுவாதியில் இருப்பதால் 3-ம் பார்வையாக சிம்மத்தை பார்ப்பார். சுவாதியில் ஒரு கிரகம் இருந்தாலே தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டு. 10ம் பார்வையாக தன் வீடான மகரத்தை பார்ப்பதால் சொந்த தொழில் செய்ய அதிக ஆசை.

புதன் வக்ரம் எனில் புதனின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகங்களும் வக்ரம் பெற்றதாகத் தான் கருத வேண்டும். தனது பலன்களை வேறு வழியில் தருவார்.

சனி பகவான் வலுத்தவர்கள் சொந்த ஊரில் இருக்க கூடாது. டெவலப்பாக விடாது. பாரம்பரியத்தை கைவிடக் கூடாது.

குரு கேது சாரம் பெற்றால் நல்ல ஞானமும், ராகு சாரம் பெற்றால் எதிர்மறையான எண்ணம் கொடுக்கும்.

ஒரு கிரகம் வக்ர கிரக சாரம் பெறும் போது நல்ல பலனைக் கொடுத்தாலும் அதன் பின் மந்தமாகிவிடும். சுபர் பார்வை பட்டால் மந்த தன்மை நீங்கிவிடும். ஆனால் அந்த சுபரும் வக்ரமானால் பலம் குறைந்து அந்த கிரகத்தின் காரகத்துவங்களின் கொடுக்கும் பலனை அனுபவிக்கவிடாது.

இவர்கள் கோளறு பதிகத்தின் முதல் பாடலை தினமும் 27 முறை சொல்லி வருதல் வேண்டும்.

ராகு – வாய் அகன்றது. குருவும் ராகுவும் சேர்ந்திருப்பவர்கள் அளவுடன் சாப்பிட வேண்டும். ஆனால், ராகு அதிகமாக சாப்பித் தூண்டும். இதனால் உடல் நலன் பாதிக்கும். குருவும் கேதுவும் கோடீஸ்வர யோகம். ஆனால், இவர்கள் அதிகம் பேசக் கூடாது.

4-ம் இத்திற்கோ, கடகத்திற்கோ கேதுவின் நேரடி தொடர்பு வரக் கூடாது. வந்தால் அவர்களுக்கு ஹார்ட்ப்ளாக் வரும். ஆஞ்ச்சியோ செய்யும் சூழ் நிலை வந்துவிடும்.

சனி வலுத்தவர்கள் (அ) சனி வக்ரமாக இருந்தாலோ (அ) 4-ம் அதிபதி வக்ரம் பெற்றாலோ இவர்கள் வாங்கும் பொருள் புதியதாக இருக்க கூடாது. சனி – பழையது. பழைய பொருள் தான் வாங்க வேண்டும்.

வக்ர கிரகங்கள் சம சப்த பார்வையால் சகட யோகம் போல மேலும் கீழுமாக பலன் – ஒரு கிரகம் நல்லது செய்யும் போது ஒரு கிரகம் தீமை தந்து விடும்.

சூரியனும் சந்திரனும் மகரம் முதல் மிதுனத்திற்குள் சஞ்சரிக்கும் போது, சேஷ்டா பலம் பெறுகிறார்கள். மற்ற கிரகங்கள் வக்ரமடையும் போதோ அல்லது சந்திரனோடு சம பாகமாக ஒரே ராசி (ஆ) ஒரே பாகை ( சந்திரனுக்கு முன்பின் 1.60 டிகிரி மொத்தம் 3.20 டிகிரி) அல்லது கிரக யுத்தத்தில் விழும் போது, அல்லது வடக்கு வீடு (10வது வீடு) [ ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை நெருங்கி வருவது – கிரக யுத்தம் ] இதில் சூரியன் சனி பகவானையும்,, சனியை செவ்வாய் பகவானும், செவ்வாய் பகவானை குரு பகவானும், குருவை சந்திர பகவானும், சந்திரனை சுக்கிர பகவானும், சுக்கிரனை புதன் பகவானும், புதனை சந்திர பகவானும் வெல்வார்கள் என்பது விதி. சூரியனை சனி நெருங்கிய பாகையில் இருந்தாலும் சூரியனே வென்றதாக பொருள்.

பொதுவாக கிரகயுத்தம்: செவ்வாயும் மற்றொரு கிரகம் ஒரே ராசியில் நின்று, செவ்வாய் நின்ற பாகைக்கு அடுத்து வரும் பாகையில் நின்றால் அக்கிரகமே கிரக யுத்த்தில் வென்றதாகும்.

செவ்வாய் கன்னியில் 18 டிகிரி. புதன் 21 டிகிரி எனில், புதனே ஜெயித்து. சூரியன் 27, சுக்கிரன் 28 டிகிரி. கிரகயுத்த த்தில் செவ்வாய் தோற்றது. கன்னியில் செவ்வாய் தோற்றதால் அவர்கள் நிலத்தில் நீர் வற்றி இருக்கும். கிணற்றில் நீர் இருக்காது. செவ்வாய் வலிமை இழந்தால் ஜாதகர் பலமற்றவர். மன வலிமை குறைவு. பெண்கள் ஜாதகத்தில் கணவர் / சகோதர ருடன் இணக்கமற்ற சூழல் தான் இருக்கும்.

கிரகயுத்தத்தில் மற்றொரு வகை [ நாடி ஜோதிடம் ] : ஒரு கிரகம் நின்ற பாகைக்கு முன் பாகையில் ஒரு கிரகம் நின்றாலே அக்கிரகமே வென்றதாக கருதப்படும்.

அதி சீக்கிர கதியில் உள்ள கிரகம் கொடுத்த பலனை அனுபவிக்க விடாது.

வக்ர கிரகங்கள் (1) ஒரு விஷயத்தை மறுமுறை செய்ய வைக்கும். (2)

வக்ர கிரகம் முதலில் மறுக்க வைத்து விடும். வக்ர நிவர்த்தி ஆனபின் அதே செயலை செய்ய நினைக்கும்.

0% Complete