Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

பூர்வீக தோஷம் (அ) புத்திர தோஷம்

1- 5- 9 ஆகிய வீடுகளில் ராகு இருப்பது பூர்வீக தோஷம் உள்ளது என்பதனை சொல்லும். இந்த அமைப்பு கொண்டவர்கள் பூர்வீகத்தில் இருக்க கூடாது. இருந்தால் ஆண் குழந்தை இருக்காது. பூர்வீகத்திலே இருந்தால் பெரிய சரிவைக் கொடுத்து விடும். ஆண் குழந்தை பிறந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்து விடும். பெண்களுக்கு பூர்வீக தோஷம் என்பது புத்திர தோஷமாக செயல்படும். குழந்தைகளால் மிக்க அவதிப்படுவார்கள். பூர்வீகத்தை விட்டு வெளியில் வந்து விடுவார்கள். வந்தாலும் புத்திரர்களால் மெத்த அவதியுண்டு. ஆண்களுக்கு இந்த அமைப்பு இருந்தால், திருமணமான பின் பூர்வீகத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டும். பின் வாழ்க்கையில் அதாவது கடைசி காலத்தில் பூர்வீகத்தில் இருக்கலாம். [ ராகு திசா 18 + கேது 7 = 25 ஆண்டுகள் ] இவர்கள் திருமணமே வெளியூரில் திருமணம் வைத்துக் கொள்வது நல்லது.அல்லது பூர்வீக சொத்தில் கொஞ்ச்சம் தான செட்டில்மெண்ட் செய்து விட பாதிப்பு குறையும்.

மாத்ரு தோஷம்

ஜென்ம லக்னத்தினருக்கு 4-ம் இடத்தில் ராகு அல்லது கேது அமையப் பெற்றால் ஜாதகருக்கு தாயின் அன்பு குறைவு. அல்லது அனுபவிக்க இயலாது. தாயாருக்கு உடல் ஆரோக்கியம் கெடும். ஜாதகருக்கு மார்பு சார்ந்த பிரச்சினை ஏற்படும். கடகத்தில் கோச்சார கேது வரும் போது ஹார்ட் அட்டாக் வரும். சொத்து, சுகங்களில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.4-ல் ராகு= இவர்கள் ரியல் எஸ்டேட் செய்வது நல்லது.

புதன் + ராகு = ரியல் எஸ்டேட் [ புதன் – பதிவு. ராகு – மாற்றம் ] தொழில் – இடம் வாங்கி விற்பது.

=====================================================================

 

6ம் இடத்தில் ராகு நிற்கக் கூடாது. நின்றால், சகோதர வழியில் ஒரு பாதிப்பு கொடுத்து விடும். உணவு சாப்பிடும் போது கவனம் தேவை. ஃபுட்பாய்சன், மருந்து காலாவதியானதா என்று பார்த்து அதன் பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்கினால், வம்பு வழக்கு வந்தே தீரும். சுபர் பார்வை இருந்தாலும், ராகு சுபரின் சாரம் பெற்றாலும், ராகுவிற்கு திரிகோணத்தில் இருந்தால் நன்மை. நோய் தீரும். கடன் தீரும். 

லக்னத்திற்கு ராகு 6-ல் நின்று, லக்னத்திற்கு  எட்டாம் வீட்டில் லக்னாதிபதி இருக்க கூடாது. அப்படி அமைந்தால் நோயால் – ஷய ரோகத்தால் – படுத்த படுக்கையாக ஆக்கிவிடும். ராகு எட்டாம் வீட்டில் நிற்கும் லக்னாதிபதியை பார்க்க விபத்தால் படுத்த படுக்கையாக / அல்லது ஷயரோகத்தால் படுத்த படுக்கையாக்கிவிடும்.

 

சர்ப்ப சாப யோகம்:

லக்னத்திற்கு 5-ல் ராகு நின்று, செவ்வாயின் எட்டாம் பார்வை ராகு நிற்கும் வீட்டிற்கு விழக்கூடாது. அப்படி இருந்தால், அது சர்ப்ப சாப தோஷமாகும். கடகம், தனுசு லக்னத்தினருக்கு 5- ல் ராகு நிற்கக் கூடாது. செவ்வாய் பார்க்கவில்லை என்றாலும் தோஷமாகி விடும். [ கடக லக்னத்திற்கு ராகு விருச்சிகத்திலும் (ஸெவ்வாய் வீட்டில்), தனுசு லக்னத்தினருக்கு மேஷத்தில் ராகு இருக்க கூடாது. புத்திரர்களுக்கு தோஷமாக்கி விடும். மிகப்பெரிய ஆபத்தை தரும். வாகன விபத்தால் அகால மரணம் ஏற்படும். செவ்வாய் எங்கிருந்தாலும் இந்த இரு லக்னத்தினருக்கு புத்திர தோஷமாக்கி விடும் இந்த சர்ப்ப சாப யோகம். 

சர்ப்ப கண்ட தோஷம்

எந்த லக்னமாக இருந்தாலும் 2-ம் இடத்தில் ராகு, மாந்தி சேர்ந்தால் குடும்பத்தில் யாராவது ஒருவர் விஷ ஜந்து தீண்டி அகால மரணம் ஏற்படும். ஜாதகருக்கு சாப்பிடும் உணவுப் பொருள் விஷமாகவும் மாறிவிடக் கூடிய அபாயம் உண்டு. 

மாந்தியுடன் சனி தொடர்பு ஏற்பட்டால் பிரேத தோஷம் உள்ளது என அறியலாம். 

செவ்வாயின் எட்டாம் பார்வை கண்டத்தை சொல்லும். ராகு பொதுவாகவே கண்டத்தை தரும். செவ்வாயின் எட்டாம் பார்வையில் ராகு இருந்தால் அந்த காரக உறவிற்கு பெரிய கண்டம் இருக்கிறது . செவ்வாய் = கண்டங்கத்திரிக்காய். 

ராகுவும் சந்திரனும் லக்னத்திற்கு 6 / 8 /12 -ல் அமர்வது ஆயுள் குறைபாடு / ஆரோக்கியக் குறைபாடு கொடுத்து விடும். இவ்வாறு அமையப் பெற்ற வீட்டிற்கு லக்னாதிபதி சேர்க்கை ஜாதகருக்கு ஆயுள் குறைபாட்டை / உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும். 

அமாவாசையில் பிறந்தவருக்கு – தாயாரோ தந்தையாரோ பிரிந்து விடும். அவர்கள் வாழ்க்கை சிறப்பில்லை. பௌர்ணமி யில் பிறந்தவருக்கு – தாயன்பு கிடையாது.

ராகு + சந்திரன் = சந்திர கிரகணம் = கும்ப வீட்டில் நடந்தால் லக்னப்படி 6, 8 ஆக [ கடகம், மீனம், துலாம் ] கவனமாக இருக்க வேண்டும். கன்னி  (6), கடகம் (8), மீனம் (12), இடுப்பு வலி, மஞ்ஜை சார்ந்த முட்டி, நரம்புவலி இருக்கும். ஏற்படும். 

குரு விற்கு 09-ல் உள்ள சந்திரனைப் பார்ப்பது குரு சந்திர யோகம் கொடுத்தாலும், ராகுவுடன் காலப்புருஷனுக்கு பாதக வீட்டில் இருப்பதால், எல்லாம் இருந்தாலும், கொடுத்தாலும், கிடைத்தாலும் அதனை அனுபவிக்க முடியாது. 

 

லக்னம்

                                    

குரு              

ராகு   சந்திரன்

 

லக்னம்

     
   

லக்னம்

 

2-ல் ராகு, 2-ம் இடத்து அதிபதிக்கு ராகு தொடர்பு உள்ளவர்கள் திரும்பத் திரும்ப பேசத் தகாத வார்த்தைகளால் பேசுவார்கள். 

கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கும்பாபிஷேகம் நடக்கும் இடத்தில் நடைபெறும் யாகபூஜையில் கலந்து கொள்வதும், கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதும், கும்பாபிஷேக நீரை வீட்டில் தெளிப்பதும் நன்மை தரும். 

பூரட்டாதி நட்சத்திரம் தன் தோஷத்தை தானே நிவர்த்திக்காக முடியாது. இந்த நட்சத்திரக் காரர்கள் அடுத்தவரின் உதவி எதிர்பார்ப்பார்கள். 

தர்ப்பைப்புல்லை நீரிலிட்டு சூரிய ஒளியில் வைத்து அந்த நீரால் குளிப்பது கிரகண தோஷம் நீங்கும். 6 மாதகாலம் செய்வது நன்மை. பித்ருக்க்ளுக்கு வைக்கும் இள நீரை பூச்செடி, மரங்களுக்கு அடுத்த நாள் ஊற்றுவது நன்மை. அலுமினியப் பாத்திரத்தில் பால் சேர்த்து சர்ப்பத்திற்கு அபிஷேகம் செய்து , தட்டில் சாதத்துடன் அந்த அலுமினியப் பாத்திரத்தையும் சேர்த்து யாருக்காவது தானம் அளிப்பதுவும் நன்று. 

இரவுக்கு காரகன் சனி – சந்திரன் – ராகு – கேது. [ சனி – இருட்டு, கேது – அடர் இருட்டு, சந்திரன் – இருளும் ஒளியும் ]

யார் இறந்தாலும் அபரன்னக் காலத்தில் அமாவாசைக்கு படையலின் போது இள நீர் வைப்பது முக்கியம். அஸ்தமன நேரத்திலும் இள நீர் வைக்கலாம். 

 

பந்தன யோகம் (அ) ஸ்தம்பன யோகம்:

லக்னாதிபதியுடன் 6 அல்லது 8ம் அதிபதியுடன் ராகு (அ) கேதுவுடன் சேர்ந்து கேந்திர திரிகோணத்தில் அமர்ந்தால் அந்த ஜாதகர் தன்னகத்தே [ தனக்குத் தானே ] செய்து கொள்ள மாட்டார். தனக்குத் தானே கட்டுப்பாடு வைத்துக் கொள்வார். ஒரு நாளாவது சிறைவாசம் (அ) வீட்டிலே தனிமையில் அடைந்து கிடப்பார். ஜாதகர் எதோ ஒர் வகையில் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்படும். போட்ட துணியே அணிந்து கொள்வார். ராகு (அ) கேது கேந்திர திரிகோணத்தில் இருந்தால் அணியும் துணிகள் இரண்டு மூன்று நாள் ஒரே துணி அணிந்து கொள்வார். Pant துணியை மடித்து அணிந்து கொள்வார்கள். செருப்பு (அ) துணியில் மண் அதிகம் சேரும். ராகு புத்தி காலத்தில் இவ்வாறு நடக்கும்.

சனி + ராகு = மண்ணுளிப்பாம்பு

சந்திரன் + ராகு = சாரைப் பாம்பு. வேகமாக நடப்பவர்கள்.

சூரியன் + ராகு = கண்ணாடி விரியன், கோதுமை நாகம்

சுக்கிரன் + ராகு = அழகாக மினுமினுப்புடன் இருக்கும். தோலுரித்த பாம்பு.

செவ்வாய் + ராகு =  கோதுமை நாகம், நாகம். வேலியில் இருக்கும் பாம்புகள்.

குரு + ராகு = மலைப்பாம்பு , மஞ்சள் விரியன். இவர்கள் மெதுவாக நடப்பார்கள். 

புதன் + ராகு = பச்சைப் பாம்பு. 

6ம் அதிபதி தொடர்பு வந்தால் அந்த பாம்பு உணவருந்தி இருக்கும். தீண்டுவதற்கும் வாய்ப்பும் உள்ளது. 

கும்பம் = கடற்கரை. சனி – கடற்கரை சார்ந்த / ஓரத்தில் நடக்கும். 

ராகு , கேதுவின் சாரம் பெற்று செவ்வாய் தொடர்பு பெற்றால்  – விரியன் பாம்பு. 

தெய்வ அம்சம் பெற்ற பாம்பு = சுக்கிரன் + ராகு 

ராகு = அலங்கார தெய்வங்கள். நாகம்மா, சர்ப்பம் தாங்கிய அலங்கார அம்மன். 

சுக்கிரன் = ஞாபக சக்தி அதிகம். நீர் பாம்பு. 

ராகுவிற்கு பார்வை சக்தி அதிகம். நட்பு கிரகங்களின் வீட்டில் தான் ராகுவின் நட்சத்திரங்கள் இருக்கும். பெரிய பாதிப்பு தராது. உயிர் பாதிப்பு வராது. 

 

ராகுவுடன் இருக்கும் கிரகங்களை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். 

சர்ப்பம் தீண்டுமா ? எனில் 2-ம் அதிபதி + செவ்வாய் + ராகு = சேர்ந்திருந்தால் பாம்பு தீண்டும். சனி + மாந்தி யும் தொடர்பு பெற்றால் உயிர்பிழைப்பது அரிது. 

இருட்டு கிரகம் [ சனி, சந்திரன், கேது ] பார்வை பட்டால் இரவில். 

குரு, சனி – இரவில் பாம்பை மிதித்து கடிபடுவது. 

 நவாம்சத்தில் விருச்சிகத்தில் குரு -அடிக்கடி வழுக்கி விழுவார்கள். குரு – காலில் மிதிக்க வைக்கும். காலில் மிதித்தால் நெகட்டிவ். இவர்கள் வர்மசிகிச்சை எடுத்தால் தான் சரியாகும். ஒரு வலி சரியானால் மறுபடியும் வேறொரு வலி வரும். 

 

ராகு சம்பந்தப்பட்டால் 11 நபர்களுக்கு தான தர்மம் – தோல் நோய் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவுதல் நன்மை தரும். 

ராகு கேதுவிற்குள் கிரகங்கள் அகப்படும் போது, நின்று நிதானமாக பெரிய பாதிப்பை தந்தே தீர்வார். ஒன்றரை வருடம் மட்டுமல்லாது மூன்று வருடம் தண்டனை தந்தே தீரும். ராகு – உடலை பலஹீனப்படுத்தி விடும். 

ராகு விற்கும் கேதுவிற்கும் 7 வீடுகள் நேராக உள்ளன. அந்த காலத்தில் அந்த பாவகத்திற்கான காரக உறவுகளுக்கும் பாதிப்பு கொடுக்கின்றன. 

ராகு, கேது புதன் சாரம் வாங்கக் கூடாது. பரிவர்த்தனையும் பெறக் கூடாது. அப்படி ஆனால், திரும்பவும் சம்பவத்தை நடத்தும். 

3ம் இடம் –  தன் சுயமுயற்சியில் இயற்கைக்கு மாறான மரணம். [ எட்டு ஆயுள் ஸ்தானம். எட்டுக்கு எட்டு மூன்றாம் இடம் ]

 

புதன் கிழமை + சித்த / அமிர்த யோகம் கூடி வரும் வேளையில் சித்தர் சாமாதியில் 40 நிமிடங்கள் உலர் திராட்சை + பாதாம் + முந்திரி வைத்திருந்து எடுத்து வந்து கொஞ்ச்சம் அங்கு நைவேத்தியத்திற்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டு வர ஜோதிடத்தின் ஞாபக சக்தி கிட்டும். 

 

சிம்ம ராகு கொண்டவர்கள் வீட்டில், 2-ல் ராகு ( நல்ல இடத்தில் இருந்தால் ) அவர்கள் வீட்டில் டெய்லர், ஆசிரியர் இருப்பார்கள்.

0% Complete