இராகு [ ஆசை ], கேது [ கடமை ] குறிப்பது.
கேதுவின் நட்சத்திரங்கள் 1 – 5 – 9 = மேஷம், சிம்மம், தனுசு – ஜாதகர், பித்ரு, தந்தை.
ராகுவின் நட்சத்திரங்கள் 3-7-11 ல் மிதுனம், துலாம், கும்பத்தில் உள்ளது [ தைரியம், வீர்யம், போகம், ஆசை – குறிப்பன.வீட்டின் தன்மைகளை குறிப்பன. இரு கிரகங்களும் நேர் எதிராக உள்ளன.
கேது – ஆன்மீகம், – ராகு – இல்லற சுகம், ஆசை, (கலியுக வாழ்க்கை) என இரு துருவங்களாக இருக்கும். கேதுவின் நட்சத்திரம் உள்ள வீட்டில் ராகு இருந்தால் – எதிர்மறை தன்மைகள் அந்த ஆதிபத்தியத்திற்கு கொடுக்கும். ஜாதகறிடம் குழப்பங்கள் இருக்கும், புத்திர பாக்கியம் தடை. சமுதாயம் சார்ந்த விஷயங்களில் தடை. ஆன்மீகம் மற்றும் ஜாதகருக்கு ஒரு நாள் அதிகமாக மறு நாள் குறைவாக, ஆன்மீக ஈடுபாடு குறைபாடு, பக்தியின்மை, மன சஞ்ச்சலம், பூர்வீகத்தில் இருக்க விடாது, மதமாற்றம் என எதிர் மறையாக ராகு கொடுக்கும். இவ்வாறே ராகு நட்சத்திர வீட்டில் கேது இருக்கும் போது ஆசையின்மை, இல்லற சுகபோகத்தில் ஈடுபாடின்மை, மதமாற்றம், தெய்வ நம்பிக்கை இன்மை, என பலனை மாற்றி கேது கொடுக்கும்.
செவ்வாய் போல ராகுவும், சனி போல கேதுவும் செயல்படும் என்பதனை மனதில் கொண்டு, பலனை சொல்ல வேண்டும்.
செவ்வாய் – அவசரம், படபடப்பு. ராகு – லக்னத்தில் எனில் பேசும் போது பிரம்மாண்டமாக இருக்கும். அடுத்த நாளே அந்த காரியத்தை தள்ளிபோட்டு விடுவார். அதீத கற்பனை மட்டுமே.
5-ல் ராகு – ஆழ்மனசு – இவர்கள் மெடிடேஷன் செய்தால் நன்மை. 5ம் இடத்து அதிபதியின் கிழமை, [ உ-ம்: ரிஷப லக்னம் – 5ம் அதிபதி புதன் தனுசுவில் எனில் புதன் கிழமை – ராகு நேரத்தில் (ஆல்லது ) வியாழக்கிழமை ராகு நேரத்தில் செய்யும் போது மெடிடேஷன் உயர் நிலைக்கு செல்ல வைக்கும். ]
ஒரு மாற்றத்திற்கு – ராகு காலம்.
கேது சம்பந்தமான விஷயங்களுக்கு – எம கண்ட வேளை. ஒரு விஷயம் முடிவுக்கு வர வேண்டும் எனில் கடன அடைக்க, நோய் தீர, படிப்பு வரவில்லை என்பவர்கள் – எம கண்ட நேரத்தில் பரிகாரம் செய்ய உதவும்.
கேது தன் நட்சத்திர வீட்டிலே இருந்தால் -நன்மை. மூல நட்சத்திரம் சமாதானம் பேச. பெரிய பிரச்சினை தீர்க்க செல்ல. பாக்யாதிபதி, யோகாதிபதி ஓரையில் செல்வது நல்லது.
ராகு 1 – 5- 9 ல் இருப்பவர்கள் ஆலயத்திற்கு தனியாகத் தான் செல்ல வேண்டும். அப்படி செல்வது நன்மை பயக்கும். இவர்கள் விசேஷ காலத்தில் வழிபாடு செய்யக் கூடாது. நல்ல நேரத்தில் எந்த காரியமும் செய்ய விடாது. சூரியன் (5) நேரம் தவறாமை விரும்புபவர். குரு (9) பர்பெக்ட் எதிர்பார்ப்பார். செவ்வாய் (1) நேரம் தவறாமை விரும்புபவர். இங்கு ராகு இருக்கும் போது எதிர்மறையாக இருக்கும்.
மனசு நிம்மதி இருக்காது (5-ல் ராகு), தந்தையிடம் கருத்து வேற்றுமை (9) ராகு கொடுக்கும்.
ராகு – பைபாஸ் ரோடு. முட்டுச் சந்து கேது.
தொலை நோக்கு பார்வை கொண்டவர் ராகு. எண்ணங்கள் பிர்ம்மாண்டமாக இருக்கும். பல வழி அட்வைஸ் கொடுப்பவர்.
சனி பகவான் கர்மத்தை நிவர்த்திப்பவர். ஒரு வீட்டிற்கு 7 வது வீடு நிவர்த்தி. 4-ம் பாவத்திற்கு நிவர்த்தி 10ம் பாவம். கடமை எனும் கர்மத்தை செய்ய சுகபோகம் கிட்டும். கர்மத்தை நிவர்த்தி செய்தால் தான் பாக்கியம் கிட்டும். 9-ம் பாவத்திற்கு தனாதிபதி 10ம் பாவம் ஆகும்.
கழிவை நீக்குபவர் சனி பகவான். லக்னாதிபதி நிற்கும் வீட்டிற்கு 6-ம் வீடு பாதிக்கும். அந்த வீடு திதி சூன்ய வீடு போல செயல்படும்.
ராகு 2-ல் ரிஷபத்தில் உச்சம். வருமானம் நன்றாக இருக்கும். எதாவது ஒரு தீய பழக்கம் ஏற்பட்டால் விடமுடியாது. பெண்கள் அதிகம் கூல் டிரிங்க்ஸ், டீ அதிகம் குடிப்பார்கள். பேசியே பிரச்சினையை சமாளித்து விடுவார்.
8-ல் கேது – ரகசியத்தை உடைப்பவர். ரிசர்ச், டிடெக்டிவ் – கை நுணூக்க வேலை அருமையாக செய்பவர்கள். ரகசியத்தை சொல்ல மாட்டார். எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், வெளியில் சொல்ல மாட்டார்கள். தன் விஷயத்தில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் திருப்தி ஆக மாட்டார். ஒரு தப்பை கண்டுபிடித்துவிடுவார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வார்கள்.
கேது – 2ல் இருப்பவர்கள் கவனமுடன், அவசியம் ஏற்பட்டால் தான் பேச வேண்டும். இல்லை எனில் பிரச்சினை அதிகமாகிவிடும். அளவோடு தான் பேச வேண்டும்.
ராகு – 8ல் ரகசியத்தை சொல்லி விடுவார்.
சதய நட்சத்திரம் பாதகத்தில் 11-ல் இருந்து லக்னத்தை ராகு பார்க்கின்றார். எதோ ஒரு விஷயத்தை தேடிக் கொண்டு இருப்பார். அடுத்தவரிடம் எதாவது சொல்லி பிரச்சினையை பெரிதாக்கி விடுவார். கும்ப ராசி யினரிடம் ஹெல்த் மெயிண்டெனன்ஸ், உணவு பற்றி கேட்டால் விலாவரியாக – விரிவாக விமர்சனம் செய்வார். சொன்னதை திருப்பி திருப்பி பேசுவார்கள். சதயன் நட்சத்திரத்தினரிடம் எதிரிடையாக பேசிவிட்டால் ஒதுங்கி விடுவார்கள். உடலை நன்றாக பார்த்துக் கொண்டு இருக்கும் உயிரினம் பாம்பு மட்டுமே. தனக்கு ஒத்துக் கொள்ளாத உணவாக இருந்தால், அதை வெளியேற்றி விடும்.
சதயம் ஆன்மீக வாழ்க்கை. இவர்கள் வீட்டில் லக்னத்தில் ராகு கொண்டவர்கள் இருப்பார்கள். இரண்டு திருமணம் செய்தவர்கள் இருப்பார்கள். சாமி இருந்து குறி சொல்பவர்கள் இருக்க வாய்ப்புள்ளது.
திருவாதிரை யாரையும் தொந்தரவு செய்யாது. தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள்.
சுவாதி வெளியில் தைரியமாக காண்பித்துக் கொள்வார். ஆனால், உள்ளுக்குள் பயப்படுவார்.
சந்திரன் இல்லாமல் உயிர் இல்லை. நாடித் துடிப்பே சந்திரன் இல்லை.
புதன் இல்லாமல் ஆயுசு இல்லை.
ஆயுள் – எத்தனை காலம் வாழ்வோம் என்பது. அதற்கு சக்தி கொடுப்பது புதன். சுக்கிரன், புதன், செவ்வாய் மூவருமே சனியுடன் தொடர்பு கொண்டு இருப்பார்கள்.
மகர, கும்ப லக்னத்திற்கு புதனே பாக்யாதிபதி. யோகாதிபதி புதனே.
ஸ்திர லக்னமாக பெண் ஜாதகத்தினருக்கு [ ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ] வந்தால் கர்ப்பப் பை கோளாறு வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் உணவு, உடல் ஆரோக்யத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஸ்திர வீட்டிற்கு பாதகம் – 9ம் வீடு. கர்ப்பப் பையை 9மிடம் குறிக்கும்.
7-ம் வீட்டில் ஒளி கிரகங்கள் இருந்தால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நிவர்த்தி உண்டு. எதையும் சமாளிக்கவும் வழியும் கிட்டும். ரிஷப லக்னத்தினருக்கு 9-ம் வீடு மகரம். இவர்களுக்கு அதிக உதிரப்போக்கு இருக்கும். சனி பகவான் எந்த வீட்டில் எப்படி இருக்கின்றார். கேது பகவானின் இருப்பிடம் இவற்றை ஆராய்ந்து புத்திரப்பேறு பற்றி சொல்லலாம். ஆணாக இருந்தால், தந்தைக்கு சரிவு / தடையைக் கொடுக்கும். புரமோஷனுக்காக போராடுவார்கள்.
ராகு – கேது உச்சம் – நீச்சம்:
7ம் இடத்தில் இருக்கும் அசுப கிரகத்தின் தோஷ நிவர்த்தி எப்படி?
கேது 7-ல் இருந்தால் அவங்க வீடு முட்டுச்சந்தா இருந்தா கேது தோஷ நிவர்த்தி. திருமணமாகாமல் ஒருவர் இருப்பார். அப்படி இருந்தால் தோஷ நிவர்த்தி. 7-ல் சனி – திருமணத்தின் போது முதிர்ந்த தோற்றம் தெரியும். அது நிவர்த்தி. புதன் இரட்டிப்புத் தன்மை. 7-ல் புதன் இரட்டிப்புத் தன்மை. இவர் பேசுவதை அடுத்தவர் இரண்டு அர்த்தமாக எடுத்துக் கொள்வார். அதனால் பிரச்சினை வரும். 7-ல் தனித்த கிரகம் இருக்க கூடாது. 7ம் இடம் கூடுமிடம். படுக்கையறை. 12 – போகஸ்தானம். 4 – சுகஸ்தானம்.
சுக்கிலம் – சுக்கிரன். சுரோனிதம் – செவ்வாய்.
3ம் அதிபதி பாதிக்கப்பட்டால் அவருக்கு வீரியக்குறைவு இருக்கும். அவரால் அவரின் மனைவிக்கு இல்லற சுகம் குறைவு.
முதல் – ஆறு = ஆண்.
துலாமும் கன்னியும் இணையும் இடம் கூடுமிடம் – இடுப்பு – பிறப்புறுப்பு.
அடுத்த ஆறு = பெண்.
எட்டாம் இடம் – ஆசன வாய்.
2-ம் இடம் = முகம். முகத்தில் கண், வாய் – ராகு மனித உருவம் மேல் பகுதி. ஆசனவாய் – கேது. ராகு – உணவு உண்ணும் வாய் – பிரம்மாண்டம். போகத்திற்குரியவர். அவர் சுக்கிரன் வீட்டில் சுகபோக வீட்டில் ராகு உச்சம். அங்கு சந்திரன் உச்சம். சுகஸ்தான அதிபதி. உதடு , வாய் = ராகு. ராகு பெண் கிரகமாக எடுத்தால் உதடு. உதடால் சுகம் அனுபவிப்பது. லிப்லாக்.அவரின் 3ம் பார்வை மீனத்தில் உள்ள சுக்ரன். 11ம் பார்வை கடக சந்திரனும் ரிஷபத்தில் உச்சம். எனவே தான் ராகு போகத்திற்குரியவர். ராகு ரிஷபத்தில் உச்சம். போகத்தின் போது பேச மாட்டார். அதனால் தான் புதன் மீனத்தில் நீச்சம்.
கன்னி = வேலை ( 6-ம் இடம்) வேலை செய்யும் இடத்தில் பேச்சு வேண்டும். புதன் உச்சம். அங்கு சுக்கிரன் நீச்சம்.
விருச்சிகத்தில் கேது – கேட்டையில் உச்சம். 3ம் பார்வை கன்னி. 11ம் பார்வை மகரம். கேது சனிக்கும் புதனுக்கும் தொடர்புடையவர். கர்மத்தை தீர்க்கும், மோட்சத்தைக் கொடுக்கவும் – சன்னியாசி – ஜோதிடர்.
8-ம் இடம் = கழிவறை, ஆசனவாய்.
8 – மாங்கல்யத்துடன் இரண்டு புறமும் பவழம் சேர்க்க வேண்டும். 4-ம் இடத்து அதிபதி 2-ல் உச்சம். ஆனால் அந்த 4-ம் வீட்டில் செவ்வாய் – நீச்சம். செவ்வாய் மங்கலகாரகன். 4-ம் இடம் மார்பு. அங்கு 4-ல் குரு உச்சம். அதனால் தான் மஞ்சள் கயிறு / மாங்கல்யத்துடன் இருபுறமும் பவழம் சேர்க்க செவ்வாய் (கணவர்) பலம் பெறுகின்றார். தங்கத்தில் கொடி போட்டாலும் – மஞ்சள் கயிற்றில் இரு புறமும் பவழமும், நடுவில் மாங்கல்யமும் இருக்க வேண்டும்.
தங்கக் கொடியில் (மாங்கல்ய சரடில்) வெள்ளிசரடில் மாங்கல்யம் சேர்க்க கூடாது. கணவ்ருக்கு பொருளாதாரம் பாதிக்கப்படும். நோய்வாய்ப்படுவார். சர்க்கரை நோய் வரும். 4-ம் அதிபதி சந்திரன் உச்சம் பெறும் இடம் ரிஷபம். அதற்கு சம்பத்து தாரை அதற்கு 2ம் இடமான மிதுனம். – மிதுனம் கழுத்தைக் குறிக்கும். எனவே தான் மாங்கல்யக் கயிறு கட்டுமிடம் கழுத்து. அனைத்துமே காரணகாரியத்துடன் தொடர்பு கொண்டது.