திசா சூட்சுமம்:
சூரிய திசை: சூரியனின் காரகர்: குரு. நமக்குள் அறிவை தருபவர். சூரியன் உச்சமாக இருந்தாலும், பலருக்கு நன்றாக இருப்பதில்லை. சுக்கிரன் உச்சமாக இருப்பவர் அழகான வீட்டில் இருப்பார். ஆனால், வாடகைக்கு இருப்பார். சுக்கிரன் நீச்சமாக இருப்பவர் சொத்துக்கள் வலுவாக இருக்கும். சுக்கிரன் உச்சமாக இருந்தால் சூரியனுக்கு வேதகன் சுக்கிரன். அதனால், சூரியதிசை நன்றாக இருப்பதில்லை.
சூரியன் அனுசரித்து செல்ல மாட்டார். சூரியனுக்கு பணிவு இருக்காது.
சுக்கிரன் = அனுசரனை. பணிவு இருக்கும்.
சந்திரன் – சந்திரனுக்கு வேதகன் சூரியன். சூரியன் வலுவாக இருந்தால் சந்திர திசை நன்றாக இருக்காது. சூரியன் 8-ல் இருந்தால் சந்திர திசை நன்றாக இருக்கும்.
சந்திரனுக்கு சிஷ்யன் என்றோரு பெயர் உண்டு. அந்த சந்திரன் சிஷ்ய தோரணை கொண்டவர். பயமுடன் கற்றுக் கொள்பவர்.
சனி பயத்தை அதிகமாக தருபவர். சந்திரனுக்கு காரகன் சனி. சனி நன்றாக இருந்தால் சந்திர திசை நன்றாக இருக்கும். சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை.
உழைப்பு பயத்தில் இருந்து தான் வருகின்றது. பொருளாதாரம், தொழில் மீதான பயம், உழைப்பை அதிகமாக செய்ய வைக்கின்றது.
செவ்வாய் – புதன் நன்றாக இருந்தால் செவ்வாய் வேலை செய்யாது. தேக பலம் இருக்காது. அறிவு பலம் இருக்கும். செவ்வாய் – வேலை செய்ய வேண்டுமெனில் பயம் வேண்டும். சனி – பொதுஜனம். எங்கு பயம் இருக்கின்றதோ அங்கு செவ்வாய் திசை நன்றாக வேலை செய்யும். செவ்வாய் க்கு காரகன் சனி. சனி நன்றாக இருந்தால் செவ்வாய் திசை நன்றாக இருக்கும். புத்திசாலிகள் மத்தியில் செவ்வாய் வேலை செய்யாது.
புதனுக்கு செவ்வாய் வேதகன். புதனுக்கு காரகன் சுக்கிரன். சுக்கிரன் முழு பெண். புதன் பெண் போல. சுக்கிரன் நன்றாக [ கேந்திர கோணங்களில் இருந்தால் ] அனுசரனை இருக்கும்.
குரு – ஒருவர் சிஷ்யனாக இல்லாமல் குரு உருவாக முடியாது. சந்திரன் வலுவாக இருந்தால் குரு திசை நன்றாக இருக்கும்.
குரு மகரத்தில் நீச்சமாக இருந்தாலும், சந்திரன் நன்றாக இருந்தால் குரு அள்ளி அள்ளி கொடுப்பார். அபிஜித் – திரு ஓணம் 1 – செவ்வாய் 6, சந்திரன் 6-ல் இருப்பவர்கள் மிகவும் அலர்ட்டாக இருப்பார்கள்.
சுற்றிலும் நிர்ப்பந்தம் இருந்தால் அறிவைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். குருவிற்கு வேதகன் சூரியன். சூரியன் வலுவாக இருந்தால் குரு வேலையே செய்யமாட்டார். சூரியன் வலு குறைந்திருந்தால், குரு நன்றாக செயல்படுவார்.
சூரியனின் காரகத்துவங்கள் அடக்கி வாசிக்கப்பட வேண்டும்.
சுக்கிரனுக்கு கம்பீரமாக இருந்தால் நன்றாக வேலை செய்யும். அப்படிஎனில், சூரியன் வலுவாக இருக்க வேண்டும். சூரியன் வலுவாக இருந்தால், சுக்கிரன் எங்கிருந்தாலும் நன்றாக செயல்படுவார். சனி கெட்டிருக்க வேண்டும்.
சனி செவ்வாய் வேதகன். செவ்வாய் ஆட்சி உச்சமாக இருந்தால் சனி நன்றாக வேலை செய்யமாட்டார். செவ்வாய் கெட்டிருந்தால் சனி திசா நல்ல பலன் தரும்.
சனிக்கு காரகன் குரு. அறிவு, அறிவார்ந்த ஆற்றல் நன்றாக இருக்கும். உழைப்பின் பலன் நன்றாக இருக்கும். குரு – சனியின் பூசத்தில் உச்சம்.