Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate
தாரா பலனும் சூட்சமங்களும்
———————————-
ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க இரண்டே கால் (2.25) நாட்கள் எடுத்துக்கொள்கிறார். அதாவது 54 மணிநேரம்.
ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடக்க சரியாக (54 / 9 = 6) ஆறு மணிநேரம் எடுத்துக்கொள்கிறது.
இதன் மூலம் அறிவது என்னவென்றால் தினமும் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும்.
சந்திரன் அதற்கேற்ப தன் கோச்சார பலன்களை தாரை அல்லது தாரா பலன் என்ற முறையில் வழங்குகிறார்.
சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் எனப்பொருள்.
தாரைகள் முதலில் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி ஒன்பது நட்சத்திரம் வரை கணக்கிடப்பட்டு பின் மீண்டும் முதலில் இருந்து கணக்கிடப்படுகிறது.
தாரைகளின் பெயர்கள்:
 
1. ஜென்ம தாரை-உறுதியும் வெற்றி தரும்.
2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்
3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.
4. சேமத்தாரை-நலம் தரும்.
5. பிரத்தயக்கு தாரை-சிக்கல்கள் தரும்.
6. சாதக தாரை-நல்லகாரியம் செய்யலாம்.
7. வதைத்தாரை- துன்பம் தரும்.
8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.
9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
இதில் 3,5,7 இவை அனைத்தும் அசுபதாரைகள். மற்றவை சுபத்தாரைகள்.
 
ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் மகம் எனில் அது சிம்மராசியில் வருகிறது. சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார் எனக்கொள்க.
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார் எனில், அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இதில் உத்திராடம் 3 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 2 பாதங்களும் உள்ளன.
மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் கால அளவு பின்வருமாறு:
உத்திராடம் 3 பாதங்கள் X 6 = 18 மணிநேரம்.
திருவோணம் 4 பாதங்கள் X 6 = 24 மணிநேரம்
அவிட்டம் 2 பாதங்கள் X 6 = 12 மணிநேரம்
இதில் உத்திராடம் என்பது மகத்தில் இருந்து 12 வது நட்சத்திரம். இதன் தாரை வகை அறிய 12/9= 1.3. இங்கே 1 ஈவு மற்றும் 3 மீதி. இதில் மூன்று என்பதே தாரை வகை. மூன்று விபத்துத்தாரை எனவே உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் 18 மணிநேரம் அசுப பலன் இருக்கும்.
அடுத்து திருவோணம் இது 13 நட்சத்திரம் இதன் தாரைவகை 13/9 = 1.4. 1 ஈவு மீதி 4. 4 என்பது சேமத்துத்தாரை எனவே சந்திரன் திருவோணத்தில் சஞ்சரிக்கும் 24 மணிநேரம் நல்லபலன்கள் உண்டாகும்.
அடுத்து, அவிட்டம் இது 14 நட்சத்திரம், இதன் தாரைவகை 14/9=1.5. இங்கு 1 ஈவு, மீதி 5. இதில் ஐந்து என்பது பிரத்தயக்கு தாரை என அறிக. இதனால் சந்திரன் அவிட்டத்தில் சஞ்சரிக்கும் 12 மணிநேரம் அசுப பலன்.
இதன் மூலம் சந்திராஷ்டமம் என்பது 24 மணிநேரமும் ஜாதகரை பாதிப்பதில்லை எனவும், பாதிப்பு ஏற்படும் நட்சத்திர தாரை வரும் மணிநேரங்கள் அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக.
இதுபோலவே ஜென்ம லக்னத்திற்கு, லக்னம் பெறும் சாரம் கொண்டு, தாரைபலம் கணித்து, கிரகங்களின் சாரம் கண்டு பலன் கூறலாம் என தெளிக. ஆனால் இது ஆய்வுக்குரியது. 
இவ்வாறு சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திர பாதம் வைத்து தாராபலன் அறியலாம்.
இது ஜோதிடத்தின் மிக முக்கிய சூட்சமம்.
நன்றி,பகிர்வே
 
(B) ———-(A)
கேது————-1-9
சுக்கிரன் ——2- 8
சூரியன்——–3–7
சந்திரன்——-4–6
செவ்வாய்—-5–5
ராகு————-6–4
குரு————–7—3
சனி————–8–2
புதன்————9–1
இது விம்சோத்திரி தசா வரிசை அனைவரும் அறிந்ததே
இதை தலைகீழாக எண்ணி வர1-9 ,2-8,3-7 …….. என அமையும் இதை கவனத்தில் கொள்க .
 
இப்போது நாம் தாரா பலன் காண கேட்டை க்கு (A)
அவிட்டம்(B) தாரா பலன் காண்போம்
கேட்டை –புதன் நட்சத்திரம்–1
அவிட்டம் -செவ்வாய் நட்சத்திரம் -IN (B )—5 [ கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம். திருஓணம், அவிட்டம் ]
1 + 5 = 6 எனவே 6 வது தாரை சாதகம்
கேட்டைக்கு அவிட்டம் சாதக தாரையில் அமையும்
1. ஜென்ம தாரை-உறுதியும் வெற்றி தரும்.
2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்
3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.
4. சேமத்தாரை-நலம் தரும்.
5. பிரத்தயக்கு தாரை-சிக்கல்கள் தரும்.
6. சாதக தாரை-நல்லகாரியம் செய்யலாம்.
7. வதைத்தாரை- துன்பம் தரும்.
8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.
9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.மேலும் இதுவே திருமணப்பொருத்தத்தில் தினப்பொருத்தமாக கணக்கிடப்படுகிறது.
முதலாவதாக வருவது ஜென்ம தாரை என்பதாகும். ஜென்ம தாரை என்பது ஒருவர் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தார் என வைத்துக் கொள்வோம். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஆவார்.
27 நட்சத்திரங்களில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு 10 வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரமாகும்.
அதேபோன்று அஸ்வினி நட்சத்திரத்திற்கு 19 வது நட்சத்திரமாக வருவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி கேது பகவான் ஆவார். இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஜென்ம தாரை நட்சத்திர தினங்களாகும்.
இதேபோன்று மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 10, 19 ஆவது நட்சத்திரங்கள் எது என கணக்கிட்டால், தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஜென்மதாரை நட்சத்திர தினங்கள் வரும்.
உங்கள் நட்சத்திரத்திற்கான ஜென்மத்தாரை நடக்கின்ற தினங்களில் ஆண்களாக இருப்பின் முடி திருத்தம், சவரம் போன்றவற்றை செய்யக்கூடாது. கணவன் – மனைவி தாம்பத்ய உறவு மேற்கொள்ளக்கூடாது. திருமணம் புதுமனை புகுவிழா நடத்துதல் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. புலால் உண்ணக்கூடாது. போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. புதிய மனை, வாகனம் வாங்குதல் கூடாது.
இப்போது தாரா பலன் அறியலாம்,
2. சம்பத்து தாரை இரண்டாவதாக வருவது “சம்பத்து தாரை” என்பதாகும் உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வதாக வருகின்ற நட்சத்திரங்கள் “சம்பத்து தாரை” நட்சத்திரங்கள் எனப்படும். 
உதாரணமாக நீங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். கார்த்திகைக்கு இரண்டாவதாக வருகின்ற நட்சத்திரம் “ரோகிணி” நட்சத்திரம், பதினொன்றாவதாக வருகின்ற நட்சத்திரம் “அஸ்தம்” நட்சத்திரம். 20 வது ஆக வருகின்ற நட்சத்திரம் “திருவோணம்” நட்சத்திரம். ஆக இந்த மூன்று நட்சத்திரங்களும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த சம்பத்து தாரை நட்சத்திர தினத்தன்று புதிய நிலம் வாங்குதல், தங்க ஆபரணங்கள் வாங்குதல், புதிய நகை செய்தல், சுப காரியங்கள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை செய்யலாம்.
 
3. விபத்து தாரை மூன்றாவதாக வருவது “விபத்து தாரை” என்பதாகும். உதாரணமாக நீங்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். அவிட்டம் நட்சத்திரத்திற்கு 3 வது நட்சத்திரமாக பூரட்டாதி நட்சத்திரமும், 12 வது நட்சத்திரமாக புனர்பூசம் நட்சத்திரமும், 21 வது நட்சத்திரமாக விசாக நட்சத்திரமும் வருகின்றன. இந்த மூன்று நட்சத்திரங்களும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விபத்து தாரை நட்சத்திரங்களாகும்.
 
எனவே இந்த விபத்து தாரை நட்சத்திர தினத்தன்று புதிய வாகனங்கள் வாங்குவது, இரவு நேர வாகன பயணம், அதிவேகமாக வாகனங்கள் இயக்குதல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்கள் போன்றவற்றை செய்யக்கூடாது.
 
4. ஷேம தாரை நான்காவதாக வருவது “ஷேம தாரை” எனப்படும். இந்த ஷேம தாரை என்பது உங்கள் நட்சத்திரத்திற்கு 4,13, 22 ஆவது நட்சத்திரமாக வரக்கூடிய நட்சத்திரங்களாகும்.
 
உதாரணத்திற்கு நீங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தால் உங்கள் நச்சத்திரத்திற்கு நான்காவதாக வருகின்ற சித்திரை நட்சத்திரம், 13 வது ஆக வருகின்ற அவிட்ட நட்சத்திரம், 22 ஆவது ஆக வருகின்ற கார்த்திகை நட்சத்திரம் ஆகியவை உங்கள் நட்சத்திரத்திற்கு ஷேம நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த ஷேம நட்சத்திர தினத்தன்று நீங்கள் வாங்கிய கடன் பாக்கிகளை திரும்ப செலுத்தலாம். நீண்ட நாள் நோய் நொடியில் அவதியுறுபவர்கள் இந்த நட்சத்திரங்களில் மருந்து உண்ணலாம். எனினும் இந்த ஷேம நட்சத்திர தினங்களில் 4 ஆவது மற்றும் 13 வதாக வருகின்ற நட்சத்திரங்களை தவிர்த்து 22 ஆவதாக வருகின்ற ஷேம நட்சத்திர தினத்தில் மேற்சொன்ன காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். 
ஏனெனில் இந்த 22 ஆவது ஆக வருகின்ற ஷேம தாரை நட்சத்திரம் என்பது “அவிநாசிக நட்சத்திரம்” என்கிற அடிப்படையில் இந்த 22 ஆவது வருகின்ற ஷேம தாரை நட்சத்திரத்தில் செய்கின்ற காரியங்கள் பாதகமான பலன்களையே தரும் என கூறுகின்றனர்.
 
5. பிரத்தியோகத் தாரை ஐந்தாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “பிரத்தியோகத் தாரை” எனப்படும்.
 
நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 5, 14, 23 ஆகிய எண்ணிக்கையில் வருகின்ற நட்சத்திரங்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பிரத்தியோகதாரை நட்சத்திர தினங்களாகும்.
 
இந்த பிரத்தியோகத்தாரை நட்சத்திர தினத்தன்று முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகக் கூடாது.
தெரியாத இடங்களுக்கு செல்லக்கூடாது. அதை மீறி சென்றால் செய்யாத குற்றங்களுக்கு நீங்கள் பழியற்கும் நிலை ஏற்படும். இந்த பிரத்தியோகத்தாரை தினங்களில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால் தேவையற்ற சண்டைகளை தவிர்க்கலாம்.
 
6. சாதகத் தாரை ஆறாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “சாதகத்தாரை” எனப்படும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 6 ஆவது, 15 ஆவது மற்றும் 24 ஆவதாக வருகின்ற நட்சத்திரங்கள், சாதகத்தாரை நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த சாதகத்தாரை தினத்தன்று நீங்கள் மனதில் விரும்பிய எந்த ஒரு நற்காரியங்களையும் துணிந்து செய்யலாம். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். ஜோதிட ரீதியான பரிகாரங்களை செய்யலாம். அரசாங்க ரீதியான காரியங்களில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேற்சொன்ன செயல்கள் அனைத்தும் இந்த சாதகத்தாரை தினத்தன்று செய்வதால் உறுதியான பலன்களை கொடுக்கும்.
 
7. வதைத் தாரை ஏழாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை வதைத்தாரை எனப்படும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 7, 16, 25 ஆவது வருகின்ற நட்சத்திரங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு வதை தாரை நட்சத்திரங்களாகும்.
 
இந்த வதைத்தாரை தினத்தன்று பிறருடன் வீண் வம்புகளில் ஈடுபடக்கூடாது. திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. கருவுற்றிருக்கும் பெண்களாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கம் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும்.
 
8. மைத்ர தாரை எட்டாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “மைத்ர தாரை” எனப்படும். இந்த மைத்திர தாரை என்பது நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 8, 17, 26 ஆவது வருகின்ற நட்சத்திரங்களே மைத்ர தாரை நட்சத்திரங்களாகும்.
 
பொதுவாக எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் இந்த மைத்திர தாரை நட்சத்திர தினம் தான் “சந்திராஷ்டமம்” தினமாகவும் அமைகிறது.
 
பொதுவாக இந்த மைத்ரத் தாரை நட்சத்திரம் தினம் என்பது சுப தினமாக கருதப்பட்டாலும் பலரும் இந்த தினத்தில் சுப காரியங்கள் மேற்கொள்வதில்லை. எனினும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள், இரண்டாவதாக திருமணம் செய்வதாக இருப்பின், இந்த மைத்ர தாரை நட்சத்திர தினங்களில் செய்வது, அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். 
 
9. அதிமைத்ர தாரை ஒன்பதாவதாக வருகின்ற தாரை “அதிமைத்ர தாரை” என்பதாகும்.
 
இந்த அதிமைத்ர தாரை என்பது நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 9,18,27 ஏழாவதாக வருகின்ற நட்சத்திரங்களே அதிமைத்ர தாரை நட்சத்திரங்கள் ஆகும்.
 
அதிமைத்ர தாரை நட்சத்திர தினங்களில் வெளியூர், வெளிநாடு பயணம் செய்யலாம். திருமணத்திற்கான நகை, புடவைகள் வாங்கலாம். தொழில், வியாபார ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்மீகத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இந்த தாரை தினத்தன்று மேற்சொன்ன செயல்களை செய்வதால் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
0% Complete