Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/35
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்
0/1
3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
Protected: Astrology – Interrmediate

லக்கினத்தில் சனி  : Saturn in Lagna | Saturn in 1st house

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்
வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்.

 கடின உழைப்பாளி. இரவு வேலை செய்ய பிடிக்கும். செக்யூரிட்டி, வாட்ச்மேன், எப்போதும் ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நேர்மையானவர்.

சிறிய வயதில் வறுமையை சந்தித்திருப்பார். இவர்களுக்கு கால் வலி, மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்.

பொறுமை சாலி, பயந்த சுபாவம், மந்தத்தன்மை இருக்கும். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும்.

( பூசம், அனுஷம், உத்திரட்டாதி – இவர்கள் ஒரு இடம் வாங்க சென்றால் பக்கத்து இடமும் தருவார்களா என கேட்பார்கள். இரண்டு இடமும் வாங்கும் எண்ணம் இருக்கும் ).

மகரம் , கும்பம், துலாம் மூன்று ராசிகளுக்கும் சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். வேலைக்கு சென்றாலும் திருப்தி இருக்காது. சொந்தக் காரர்கள் பக்கத்தில் இருக்க விரும்புவார்கள். மகரமும் கும்பமும் அருகருகில் இருப்பதால் இந்த இடம், சொந்தம் அருகில் இருக்க விரும்புவார். 

உடல் உபாதை, ஆரோக்கியக் குறைபாடு , முதிர்ந்த தோற்றம் அல்லது தனிமையை விரும்புவார்.

தவறு நேரிட்டால் அதனை தைரியத்துடன் சுட்டிக்காட்டுவார். அதீதமாக அதிகம் பேருக்கு விருப்பத் திருமணம் நடைபெறும்.

இரண்டாம் வீட்டில் சனி : Saturn in Second house | Saturn in 2nd house

Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்

மூன்றாம் வீட்டில் சனி  

துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்.

நான்காம் வீட்டில் சனி  இருந்தால்: Venus in Fourth house | Saturn  in 4th house
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்

ஐந்தாம் வீட்டில் சனி  : Saturn  in Fifth house | Saturn  in 5th house
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்.

ஆறாம் வீட்டில் சனி  : Saturn  in Sixth house | Saturn  in 6th house

Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
ஏழாம் வீட்டில் சனி  : Saturn  in Seventh house | Saturn  in 7th house

ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்

எட்டாம் வீட்டில் சனி  : Saturn  in Eighth house | Saturn  in 8th house

இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

ஒன்பதாம் வீட்டில் சனி  :  Saturn  in Ninth house | Saturn  in 9th house
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.

பத்தாம் வீட்டில் சனி  : Saturn  in Tenth house | Saturn  in 10th house

இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
பதினொன்றாம் வீட்டில் சனி  : Saturn  in Eleventh house | Saturn  in 11th house

இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
பன்னிரெண்டாம் வீட்டில் சனி : Saturn  in Twelfth house | Saturn  in 12th house
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
“போனால் போகட்டும் போடா” என்று பாடுவான் ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும் மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

0% Complete