
எட்டாம் இடத்து அதிபதி நிறைய விஷயங்களை சொல்வார்.
காலப்புருஷனுக்கு எட்டாம் இடம்: விருச்சிகம். காலப் புருஷனுக்கு நாலாம் இடத்து அதிபதியான சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம். 4-ம் இடம் – மனசு. சொத்து, சுகம். மனசு சொத்து, சுகத்தை தேடிக் கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும் வேண்டும் என தேடிக் கொண்டே இருப்பதே நீச்சத்தின் செயல்பாடு. வாழ்வில் வெற்றி பெற நீச்ச கிரகம் ஒன்றாவது இருக்க வேண்டும்.
4-ம் இடம்: மார்பு, இதயம். இதயத்திற்குரிய சக்தி விருச்சிகத்தில் குறைவு. இதயத் துடிப்பு, உயிர் நாடி – சந்திரன்.
எட்டாம் இடம்: ஆயுள் ஸ்தானம்.
மனதில் புதைத்து வைத்துள்ள ரகசியங்கள் எட்டாம் இடம்.
சந்திரன் நீச்சம் என்பதால் அந்த விஷயங்களை வெளியில் சொல்ல மாட்டார். மனதிலேயே வைத்துக் கொண்டு இருப்பார். விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தினர் ஒரு முறையாவது பிணவறை செல்வார்.
ஒரு விஷயத்தை தேடுவது எட்டாம் இடம். எட்டாம் அதிபதி நிற்கும் இடம் தடையை கொடுப்பார். தடையை தாண்டும் வழியை சொல்பவரும் அவரே.
ஒவ்வொரு பாவத்திற்கும் எட்டாம் பாவத்தை பார்த்தால், அந்த பாவகத்திற்கான தடையை அறியலாம்.
4-ம் இடம்: கடகம். அதற்கு எட்டாம் இடம்: கும்பம்.
மனதிற்குண்டான ஆசைகள் காலபுருஷனுக்கு பாதக வீடு கும்பம். (11- பேராசை). மனதின் பேராசையே பாதகத்தை தருகின்றது என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.
உ-ம். கன்னி லக்னம் – 5ம் இடம்: மகரம். ஜாதகரின் புத்திரப்பேறு கிடைக்கவில்லை எனில் அத்தடைக்கான காரணத்தை மகரத்திற்கு எட்டாம் இடமான சிம்மத்தை ஆய்வு செய்தால் தடைக்கான காரணம் அறிய முடியும். அவரே அத்தடைக்குரிய நிவர்த்தனைக்கும் வழிகாட்டுவார். சிம்மத்தையும், சூரியனையும் ஆய்வு செய்தால் குழந்தைப் பேறிற்கான காரணம் சொல்லும்.
5-ம் வீட்டுற்கு 8ம் வீடு சிம்மம். இது லக்னத்திற்கு 12ம் வீடாக வருவதால், ஜாதகருக்கு கர்மம் செய்ய குழந்தை இல்லை என அறியலாம்.
பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் வீடு தான் மாங்கல்ய ஸ்தானமே ஆணிற்கு ஆயுள் ஸ்தானம்.
குழந்தைகள் – 5ம் பாவம். சொத்து சுகம் சொல்வது 4ம் பாவம். குழந்தைகளின் சொத்து, சுகம் பற்றி சொல்வது லக்னத்திற்கு எட்டாம் பாவமாக வரும். குழந்தைகளின் கல்வியை சொல்லும்.[ 5க்கு 4ம் பாவம் = 8ம் இடம் ] எட்டாம் பாவத்தை ஆய்வு செய்தால் குழந்தையின் கல்வியை பற்றி சொல்லும். எட்டாம் இடத்தில் சந்திரன் நீச்சம். சந்திரன் நீர் சம்பந்தமான கிரகம். சந்திரன் மூத்த பெண். விருச்சிகம் சம்பந்தப்பட்ட ஆணுக்கு வயதுக்கு மூத்த பெண்களால் தொல்லை உண்டு. மனக் குறை இருக்கும். விருச்சிகத்திற்கு பாக்கிய ஸ்தானம் – கடகம். அதன் அதிபதி விருச்சிகத்தில் நீச்சம். பாக்கியங்கள் எவ்வளவு கிடைத்தாலும் அதை வெளியில் சொல்லக் கூடாது. இவர்களுக்கு திருப்தி இருக்காது. திருப்தி அடைய மாட்டார்கள். மறைமுக பழக்கங்கள் வந்தால் தான் அவமானம், சங்கடம் வரும். எட்டாம் அதிபதி கோட்சாரத்தில் எட்டாம் இடத்தை பார்க்கும் காலத்தில் அவமானம் ஏற்படும்.
எட்டாம் இடம். தேங்கிய நீர். சகதி, சாக்கடை. தேங்கிய நீரில் பூச்சி இருக்கும்.
கடகம் – பாயும் நீர்.
விருச்சிகத்தில் அனுஷம் – தேங்கிய குளத்து நீரில் தாமரை (அனுஷம்) அமானுஷ்ய சக்திக்கு விருச்சிகத்தில் மாந்தி இருந்தால் அமானுஷ்யத்தை உணரும் சக்தி உண்டு. கேட்டை -யில் கேது உச்சம் என்பதால் அதிகமான தேடுதல் ஞானம் – கல்வி – இருக்கும்.
மகரமும் கல்வி ஞானம் அதிகம் இருக்கும். மகரத்திற்கு 11-ம் இடம் விருச்சிகம். அது மகரத்திற்கு பாதகஸ்தானமாக வருவதால் கற்ற கல்வி ஞானத்தை வெளிப்படுத்த இயலாமல் தடை உண்டாகும். அவிட்டம், திருஓணமும் அவசரமாக செயல்படும். அது பாதகத்தை தான் தரும்.
கன்னி லக்னத்தினருக்கு மூன்றாம் இடம் விருச்சிகம் – இவர் அனுப்பும் செய்தியே பிரச்சினை உண்டாக்கும். இவர் எடுக்கும் போட்டோவே பிரச்சினை உண்டாக்கும். இவரின் பேச்சு, முயற்சிகளால் இவருக்கு பிரச்சினை தரும்.
சொத்து நிலையாக இருக்குமா என்பதை சொல்வது எட்டாமிடம். எட்டாமிடம் பலமாகவோ பலவீனமாக இருக்க கூடாது. சம நிலையில் இருக்க வேண்டும்.
பலவீனமாக இருந்தால் சொத்தை அனுபவிக்க இயலாது.
எட்டாம் இடத்து அதிபதி, எட்டாம் அதிபதி நின்ற சாரத்தின் காயத்ரி சொல்ல வேண்டும்.
சனி பகவானுக்கு பகை நட்சத்திரமே அனுஷம்.
அடக்கம் செய்யும் இடம் எட்டாம் இடம்.
நிலத்திற்கு கீழே உள்ள கனிமங்கள். நிலத்திற்கு கீழே உள்ள பெட்ரோல், கேஸ் சிலிண்டர், கரி தானம் செய்ய நன்மை உண்டாகும். செவ்வாய் – சேனாதிபதி. – காவல். செக்யூட்டரி, நாய்,இவற்றிற்கு தானம் தரவேண்டாம். பூட்டுக்கு எண்ணெய் விடவேண்டும். பூட்டு தானம் தர வேண்டும்.
அடிக்கடி பயம் வந்து கொண்டே இருந்தால் பூட்டிற்கு எண்ணெய் விட பயம் தீரும். கட்டிட வேலை செய்பவருக்கு பூட்டு எண்ணெய் தானம் அளிப்பது பயம் ஆயுள் பயம் போக்கும்.
எட்டாம் பாவத்தில் சூரியன் : நீண்ட ஆயுள் உண்டு. புராதன நூல்களைப் படிப்பார். [கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் – மகரம் ராசியினர். மகரத்திற்கு பாதக வீடு எதையும் முன்னாடி கொடுத்தால் பின்னாடி கிடைக்காது. பாதக வீடு எதையும் தாமதமாக கொடுக்கும். விருச்சிகம் ஜோதிடத்திற்கான வீடு. ரகசியத்தை தேடி எடுக்கும். ]
8-ல் சூரியன் – மற்றவர்களுக்கு கீழ்படிய மாட்டார்கள். அரசியல், அரசாங்க விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். ட்ரஸ்ட், கோயில் – வருவாய் உண்டு. ஜாதகருக்கு இரண்டு வருமானம் உண்டு. வீண் செலவு அதிகம். விபத்திலிருந்து தப்பிப்பார். மேலதிகாரிகளின் அனுசரனை இல்லை. பிறர் சொல்லுக்கு அடங்கமாட்டார். ஷேர் மார்க்கெட், சீட்டு, எம்.எல்.எம். – தோல்வி. வயதில் மூத்த மனைவி (ஆ) முதிர்ந்த தோற்றம் (அ) பொருந்தாத தோற்றமுள்ள மனைவி. காதல் திருமணம். மனம் விரும்பிய திருமணம். சமுதாயம் மாறிய திருமணம். மனைவி வழியில் ஒரு குறை உண்டு. யாராவது இவர்களை அவதூறு பேசினால், எட்டில் சூரியனால் ஏற்பட்ட தோஷம் நீங்கிவிடும்.
ஆணவன் அதிகாரத்தால் மற்றவர்களுக்கு கீழ்படிய மாட்டார். தாய் அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். தாயார் மணவாழ்க்கை சரியில்லை. குழந்தைகளால் மனக்கவலை. உயில் சொத்து கிட்டும். அனுபவிக்க விடாது.
எட்டில் சூரியன் – முதுகுத்தண்டில் அடிபடுதல், தழும்பு ஏற்படுதல், நோய் உண்டாகுதல். முதுகுவலியல் படாதபாடு படுவார்கள். [ துலாமில் சூரியன் இருந்தாலும் இப்படி தான் இருக்கும் ]
நகை அடமானம் வைக்க கூடாது. மீட்க முடியாமல் ஏலத்திற்கு சென்றுவிடும்.
எட்டில் சந்திரன்:
இளமையில் வறுமை. உடனிருப்பவர்களால் சதிகள் அதிகம். மனைவி வழியில் சொத்து கிட்டும். அனுபவிக்க விடாது. ஜாதகருக்கு அறிவுக் கூர்மை உண்டு. தந்தைக்கு ஆயுள் குறைவு, நோய் ஏற்படும். படித்த படிப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. வருமானம் குறைவு. இரவு வேலை, பயனம் சார்ந்த வேலை. கண் உபாதை உண்டு. விரோதிகள், கடன், சொத்து விரயம் உண்டு. வாகன விபத்து கண்டவர். நீர் விபத்து கண்டவர். புத்திரர்களால் கவலை. பிற்காலத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த கவலை இருக்கும்.
4ம் வீட்டு அதிபதி சந்திரன் எட்டிலிருந்து 2ம் இடத்தை பார்க்கும். இந்த ஜாதகர் குடும்பத்தை விட்டு வெளியூரில் வருமானத்திற்காக இருந்தால் வேறொருவர் தொடர்பு ஏற்பட்ட்டு அதனால் அவமானம் சந்திப்பார்.
எட்டில் செவ்வாய்:
ஶார்ப் – அறிவுக்கூர்மை அதிகம். அதிகாரமிக்கவர். கடினமான வார்த்தைகளை பேசுவார். வாக்குவாதம், உரத்த குரல், ஆளுமையான தன்மை, அரைகுறை ஞானம் போன்றவற்றால் பாதிப்பு. பேசியே காரியம் சாதிப்பார். சுறுசுறுப்பு. கடன் தொல்லை. பெண் ஜாதகமானால் ஆணிற்கும், ஆணானால் பெண்ணிற்கும் அதிக கஷ்டம். ஒருமுறையேனும் அவமானம். அவச்சொல் வந்தே தீரும். குடும்பத்தில் அதீத கவலைகள் உண்டு. பல் தொந்தரவு இருக்கும். ஆரம்பக் கல்வியில் தடை உண்டு. களத்திரத்திற்கு சிறப்பு. வருமானம் வரும் ஆனாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. [ காலப்புருஷனுக்கு 7 – துலாம். களத்திரம். 8-ல் செவ்வாய் = களத்திரத்திற்கு வருமானம் உண்டு. ] ஜாதகருக்கு 8 அதனால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.
8ம் அதிபதி 8-ல் இருந்தால் நல்லதும் கொடுக்கும். கெட்டதும் கொடுக்கும். இந்த யோகத்திற்கு சரள யோகம். இந்த யோகம் வருமானம் கொடுக்கும் ஆனால் குடும்பத்தை பிரித்து விடும். மார்க்கெட்டிங் தொழில் செய்வது நன்மை தரும்.
சரல யோகம் கொண்டவர்களும் பத்திரை கரணம் கொண்டவர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். [ கோழி ஒரே இடத்தில் உண்ணாது. ஒழுங்காகவும் சாப்பிடாது. அலைந்து கொண்டே இருக்கும் ]
8-ல் புதன்.
நீண்ட ஆயுள். பெரும் பதவி. தாமதமாக பேசுதல். சமயோசித புத்தி. தற்கொலைக்கு முயற்சி செய்தவர். செக்கு, ஆவணங்களால் பிரச்சினை. சகோதர உறவு சிறக்காது. தந்தை வழியில் இருதார யோகம் உண்டு. தந்தையின் அப்பா அம்மாவின் கர்மத்தின் போது ஜாதகரோ அல்லது ஜாதகரின் தந்தையோ கலந்து கொள்ள இயலாமல் போகும். ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் அமையும். ஆனால் திருப்தி பெறாது. ஜாதகர் நிச்சயம் ஒரு ஏமாற்றத்தை சந்திப்பார். சீட்டு, எம்.எல்.எம். பாதிப்பு இவருக்கும் தந்தைக்கும் இருக்கும்.
8-ல் குரு
விருச்சிகத்தில் குரு மற்றும் எட்டில் குரு இருந்தாலும் இந்த பலன் நடக்கும்.
சிறந்த அறிவாளி. கல்வியில் ஒரு தடை உண்டு. அல்லது வெளியூர், ஹாஸ்டல் தங்கி படிப்பு, திருமணத்திற்கு பின் படிப்பு. பெரிய குடும்பம். பாரம்பரியமான குடும்பம். உயிலால் நற்பலன் உண்டு. தீய பழக்கத்தால் பாதிப்பு உண்டு. எப்போதும் செல்வம் சார்ந்த சிந்தனை உண்டு. தோல் நோய் ஏற்படும். குழந்தப் பற்றிய கவலை உண்டு. மாமனார் வழியில் ஆயுள் குறைபாடு உண்டோர் உண்டு. ஆசார அனுஷ்டானத்தில் ஆர்வம் குறைவு. அசைவ உணவு விரும்பி சாப்பிடுவார். திக்கி பேசுபவர் குடும்பத்தில் உண்டு. விருச்சிகத்தை குரு பார்த்தாலும் திக்கி பேசுபவர் ஒருவர் இருப்பார். யோசித்து பேசுபவர் உண்டு. பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமுடன் சரி செய்ய வேண்டும்.
8-ல் சுக்கிரன்
அழகிய கவர்ச்சிகர முகம். தனவந்தர். மனைவி உடன் கருத்து வேறுபாடு. ஆரம்பக் கல்வி, பட்டபடிப்பு கல்வியில் ஒரு தடை. சிக்கனவாதி. கேளிக்கையில் நாட்டம். பெண்களால் அவச்சொல், பண இழப்பு. மர்ம வியாதிகளால் பாதிப்பு. மர்ம உறுப்புகளால் பாதிப்பு உண்டு. தாயாரின் அன்பு குறைவு. அனுபவிக்க விடாது. வெளியுரில் ஒரு விபத்து ஒன்று உண்டு.
8- ல் சனிபகவான்.
கடின உழைப்பாளி. புத்திரபாக்கியம் குறைவு. நீண்ட ஆயுள். ராஜா வீட்டு கன்றுக்குட்டி. வசதிகளை அனுபவிக்க விடாது. சிறுவயதில் கசப்பான அனுபவங்கள் அதிகமிருக்கும். விபத்து தப்பியவர். பெற்றோருக்கு திருமண வாழ்வில் சுகமில்லை. காதால் பாதிப்பு உண்டு. குடும்பத்தில் தத்து போனவர் / தத்து எடுத்தவர் உண்டு. முதலீட்டுத் தொழில் ஆகாது. பின்வாழ்க்கை சிறப்பு. தீய பழக்கங்கள் உண்டு. தீராத வழக்கு அல்லது வியாதி வந்து சேரும்.
8-ல் ராகு
சொத்து தாமதமாக அமையும். நாட்டம் அதிகம். திருமணம் ஆனாலும் பிரம்மச்சாரி போல வாழ்வார்கள். பண விரயம் அதிகமாகும். தந்தைக்கு அறுவை சிகிச்சை உண்டு. குல தெய்வ வழிபாட்டில் தடை இருக்கும். இளமையில் வறுமை. இடமாற்றம் உண்டு.
8-ல் கேது.
தலை சார்ந்த பிரச்சினை அல்லது பல் நோய் உண்டு. கல்வியில் தடை தடையை மீறி படிப்பார். விரும்பியதை அடைந்தே தீரவேண்டுமென்ற எண்ணம் உண்டு. பலருக்கு புரியாத புதிராக இருப்பார். மை வித்தை கண்கட்டு வித்தை மாந்தரீகம் ஜோதிடம் அமானுஷ்ய வித்தைகளில் நாட்டம் ரகசியமான வாழ்க்கை ஒன்று உண்டு. அரியர் உண்டு. வாரிசு வேலை உள்ள குடும்பம். திருமணத்திற்கு பின் 7 ஆண்டுகள் கழித்து சொத்து அமையும். எம்.எல்.எம். சீட்டு போன்றவை பாதிப்பு.
விருச்சிகம், மகரம், கும்பத்தில் 4 கிரகம் இருந்தால் அவர் சன்னியாசி. எதிலும் நாட்டம் இருக்காது.
கோச்சாரத்தில் – 8ம் பாவம்
8ம் இடத்தில் சூரியன் செல்லும் காலங்களில் வீண் பயம். களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.
கோச்சாரத்தில் 8-ல் சந்திரன் செல்லும் காலம் – சந்திராஷ்டமம். மன பதட்டம். படபடப்பு, பயம் அதனால் உடல் பாதிப்பு. ஆனால் உணவு விரும்பியது போல கிடைக்கும்.
எட்டில் செவ்வாய் அவமானம், அவச்சொல். வீண் பயம், விபத்து, அறுவை சிகிச்சை, இரத்த சேதம் ஏற்படும்.
எட்டில் புதன் – காரிய வெற்றி, தனலாபம், புத்திரலாபம், புத்தாடை பாக்கியம், உதவும் மனப்பான்மை மேலோங்கும்.
எட்டில் குரு – காரியங்களில் தடை – ஆயுள் பயம், கவலை, நோய் பயணம் சார்ந்த பயங்கள்
எட்டில் சுக்கிரன் – சுகபோகமுண்டு. வேலை ஆட்களால் ஆதாயம். வாகன யோகம் சொத்து யோகம் ஏற்படும் காலம்.
எட்டில் சனி – பசி பட்டினி யாரும் நம்ப மாட்டார்கள் யாசகம் கேட்கும் சூழ் நிலை உண்டாகும். சத்துரு பயம். ஆரோக்கிய குறைபாடு கவலை நோய்கள் கண்கலங்க வைக்கும். கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும்.
எட்டில் ராகு = செவ்வாய்க்கான பலனையும், எட்டில் கேதுவிற்கு சனியின் பலனையும் கோச்சார பலனாக எடுத்துக் கொள்ளவும்.