Course Content
கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.
0/29
சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்
0/2
27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்
0/3
பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....
0/2
12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்
0/15
4ம் பாவம்
4ம் பாவத்தில் கிரகங்கள் தரும் பலன்
0/1
5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்
0/1
7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்
0/1
8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்
0/1
9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.
0/1
10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய
0/1
11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.
0/1
12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்
0/1
6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்
Protected: Astrology – Interrmediate
  • இராகுவும் கேதுவும் உண்மைக் கோள்கள் அல்ல. இவை புகை மண்டலமான, நிலப் பரப்பு அற்ற நிழற்கோள்கள். 
  • சூரியனுடைய சுற்றுப் பாதையும் சந்திரனுடைய சுற்றுப் பாதையும் இரண்டு இடங்களில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கின்றன. அந்த இரு வெட்டுப் புள்ளிகளே Nodes இராகு கேதுக்களாகும். 
  • இந்த இரு புள்ளிகளும் ஒரே இடத்தில் நில்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதால் கிரகங்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இந்தப் புள்ளிகள் சந்திரப் பாதையில் நகர்வதால் ராகுவை சந்திரனின் ஏறு கணு என்றும், கேதுவை சந்திரனின் இறங்கு கணு என்றும் சொல்லப்படுகிறது.
  • மற்ற கிரகங்களைப் போலவே, இந்த இரு புள்ளிகளும் பூமிக்கு மிக அருகாமையிலே எதிர் திசையில் சுற்றிவருகின்றன. 
  • பிற கிரக கதிர்கள் பூமியில் விழாதபடி தடுக்கும் தன்மை இந்த இரு புள்ளிகளான ராகு மற்றும் கேது புள்ளிகளுக்கு உள்ளது. எனவே இராகு, கேதுக்களை தடை கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.
  • இவற்றில் ராகு பாம்பின் தலை போன்ற தோற்றத்தை தருவாதாகவும், கேது பாம்பின் வால் போன்ற தோற்றத்தை தருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராகு, கேது இவ்விரு கிரகங்களை சர்ப்பக் கிரகங்கள் என்றும், இராகு கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் அழைக்கிறார்கள்.
  • சாயா கிரகம், நிழற்கிரகம், வெட்டும் புள்ளிகள் என்றழைக்கப்படும் இராகுவை Ascending Node / North Node  என்றும் கேதுவை Descending Node / South Node என்றுக் குறிப்பிடுகிறார்கள்.
  • இராகுவை போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பர். குப்பையில் கிடந்தவனை நல்ல உயர் நிலைக்கு கொண்டு சென்று பெருமைப்படுத்துபவரும் இவரே. நல்ல உயர் நிலையில் இருந்தவரை தாழ்ந்த நிலைக்கு ஆளாக்குவதும் இவரே.
  • தந்தை வழி வம்சத்தை இராகுவும், தாய்வழி வம்சத்தை கேதுவும் குறிப்பிடுவதாக சொல்வார்கள்.
  • இராகு உருவத்தில் பாம்பு உடலும், மனித தலையும் கொண்டவராவதால், மனசாட்சியற்றவர். பாம்பின் விஷமே இவரின் மன ஆளுமைக்கு உட்படுவதால், கொடிய நிலையை தரக்கூடியவராகிறார்.
  • கூட்டாக விபத்து, கோர மரணங்கள், நிகழ்வதற்கு இராகு செவ்வாயும் சேர்ந்து செய்யும் செயலாகும்.
  • ராகுவிலிருந்து தொடங்கி, மற்ற ஏழு கிரகங்களும் லக்னமும் உள்ளடங்கி கேதுவில் முடிந்தால் அதனை கால சர்ப்ப தோஷம் என்பர். இவ்விரு பாம்புக்கிடையே அனைத்து கிரகங்களும் அடங்கியே இருக்கும்.
  • கேதுவில் தொடங்கி ராகுவில் முடிந்தால் கால சர்ப்ப யோகம் என்பர்.
  • இராகு நல்ல அறிவு, கூர்மை, புத்தி சாதுர்யம் ஞானம் தருபவர். ஜாதகரின் தகுதிக்கேற்ற நிலையில் வாழும் யோகத்தையும் தருவார். காலந்தாழ்ந்தே யோக வாழ்வையும் தருவார்.
  • இராகு/கேது  சூரியனை ஒரு முறை பின்னோக்கி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஒரு பாகையை கடக்க 18 நாட்களாகின்றன.ஒரு ராசி மண்டலத்தை சுற்றி வர 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.ஒரு பாதத்தை கடக்க 2 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.
  • இராகு கேதுக்கள் வருட கிரகங்கள். அதனால் இவர்களின் கோட்சாரப் பலன் நீண்ட காலத்திற்கு இருக்கும். 
  • இராகு விற்கு பகை கிரகங்கள் அதிகமாக இருப்பதால், கோட்சாரப் பலனில் தீய பலன்களே அதிகம் நடக்கின்றன. நல்ல பலனை குறைந்த நபர்களே பெறுகிறார்கள். 
  • இராகு குணமாற்றத்தை தரும். அதனால் பல நல்லவர்கள் கெட்டவர்களாவதும், திருடர்களாவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதும், மது அருந்தி போதை வாழ்க்கை விடமுடியாமல் வாழும் நிலையையும் பெறுகிறார்கள். 
  • மதமாற்றம், சிறை தண்டனை, நாடு கடத்துதல் போன்ற தண்டனைகளையும் பெற்றுத் தருகின்றன. 
  • எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அந்த கிரகத்தை ஆட்கொண்டு, அந்த கிரகம் தரவேண்டிய தீயபலனையும் சேர்த்து இவரே தந்து விடுகிறார். மேலும், இவர் செல்லும் பாவகத்தின் தீமையையும் சேர்த்து தந்துவிடுகிறார். 
  • இவர் செல்லும் பாவகத்தில் கிரகம் இல்லை எனில் பாவகத்தின் நன்மை தீமைகளை வழி நடத்துபவரும் இவரே.
  • இராகு தந்தை வழி தாய்வழி தாத்தாவைக் குறிப்பவர். பெண் ராசியில் நவாம்சத்தில் பெண் வீட்டில் இராகு இருக்கும் போது தாயார் வழி தாத்தாவையும் ஆண்வீட்டில் இருக்கும் ராகு தந்தை வழி தாத்தாவையும் குறிப்பார்.
  • இராகு தோல் நோய்கள், சொரி, சிரங்கு, தொழு நோய், வலிப்பு ஆகிய நோய்களையும் தருபவர். 
  • பொந்து உள்ள இடங்கள், குழிகள், படரும் கொடிகள் இருக்குமிடங்கள், மின்னக் கூடிய பொருட்கள், குறிப்பவர் இராகு.
  • இராகுவின் நட்சத்திரங்கள் – திருவாதிரை [ மிதுனத்திலும்], சுவாதி [ துலாம்], சதயம் [ கும்பம் ].
  • கோட்டான், கோழி, பறவைகளின் கூடு, பாம்பு வசிக்குமிடம், பாம்பாட்டி வசிக்குமிடம், மூட்டைப் பூச்சி, மதுபானம், விந்து உற்பத்தி ஸ்தானம், நீண்ட சரீரம் குறிப்பவர் ராகு.
  • துர்க்கை, நினைவுச் சின்னங்கள் வழிபாடு, மனித தலைஇல்லா தெய்வ வழிபாடு – குறிப்பவர் ராகு, 
  • விஷ நோய்கள், தொற்று நோய்க்கிருமிகளால் , வைரஸ்களால் வரக்கூடிய நோய்கள், மன அழுத்தத்தினால் வரக்கூடிய ஹிஸ்டீரியா, உடம்பு வலி, விபத்து, மன நோய், அம்மை, முறையற்ற பாலுறவு, ஓரினச் சேர்க்கை, வாயுத் தொல்லை , வாத நோய், திக்குவாய், தற்கொலை, மயக்கம், குடல் நோய்கள், கழுத்து [ கண்டமாலை ]ஆகிய நோய்களைத் தருபவர்.  
  • சாக்கு, சேமிப்புக் கிடங்கும், விளையாடும் இடங்கள், பெரிய பாத்திரங்கள், போர்வை, குடை, விளக்குமாறு, மொட்டை மாடி, திரைச்சீலைகள், வாயகன்ற பாத்திரங்கள், மரக் கிளைகள், மின்னணுப் பொருட்கள் குறிப்பவர் ராகு.
  • ஊர்க்குருவி,கழுதை, குள்ள நரி, முட்டைப்பூச்சி, நாய், ஆடு, பூச்சியினம், ஊர்வன, ஆந்தை, பாம்பு இவற்றைக் குறிப்பவர் ராகு.
  • கடுகுச் செடி, சர்ப்பகந்தா, அருகம்புல், இரப்பர் போன்றவற்றையும் குறிப்பவர் ராகு.
  • இவரின் திசையாக தென் மேற்கு திசை குறிப்பிடப்படுகிறது. 
  • இராகு முழங்கால், தொடை, பாதம், கணுக்கால், மலக்குடல், காது, குடல், வாய், உதடு, மர்ம உறுப்புக்கள், கைகள், முடி குறிப்பவர் ராகு.
  • இராகுவின் உப கிரகம் வியதிபாதன்.
  • இராகுவின் நட்புக் கோள்கள்: சுக்கிரன், சனி.
  •  நட்பு விடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு மகரம், கும்பம், மீனம் 
  • பித்த நாடி.
  • இராகு விருச்சிகத்தில் நீச்சமும் ரிஷபத்தில் உச்சமும் பெறுவதாக சொல்லப் படுகிறது. 
  • இராகு – அன்னிய தேசத்தில் முஸ்லீம் நாடுகளைக் குறிக்கும். அன்னிய மொழியில் முஸ்லீம் களின் மொழிகளான அரபி, உருதுவைக் குறிக்கும்.: 
  • அரசிற்கு விரோதமான செயல்களை செய்வ்பவர்களும் இராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களே.
  • இரத்தினங்களில் கோமேதகம்.
  • தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் இடங்கள் இராகுவின் இடங்களாகும்.
  • அவமானம், அலட்சியம், ஆயுள் குறைபாடு, கீழ் மட்ட மக்கள் தொடர்பு, கீழ்த்தரமான செய்கை, மற்றும் கீழ்த்தரமானவர்களுடன் தொடர்பிலிருத்தல், குலத்திற்கு விரோதமாக பேசுதல், செயல்படுதல், குலத்தைக் கெடுக்கும் தொழில்களைச் செய்தல், நாத்திகண், நாட்பட்ட நோய் கொண்டவன், 
  • பிளவை, பிளவை நோய், 
  • பிளாஸ்டிக் பொருட்கள், கேழ்வரகு, சக்கரம், காப்பிக்கொட்டை, கிழிந்த துணி, குடை, சுவாசம், சூதாட்டம், செப்பிடு வித்தை, சோம்பாறி, துர்க்குணம் கொண்டவள், திறந்த வெளி, திருடர்கள் – இவற்றை குறிப்பவரும் ராகுவே.
  • இராகு நின்ற ராசிக்கு ஏழாவது ராசியில் கேது இருப்பார். 
  • கேது வடதுருவ நிழல். ராகு தென் துருவ நிழல்.
  • சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்பட இராகு கேதுக்களே காரணம்.
  • சூரியன் – ராகு, கேதுக்களின் பிடியில் அகப்பட – சூரியகிரகணமும், சந்திரன் – ராகு, கேதுக்களின் பிடியில் அகப்பட – சந்திர கிரகணமும் நிகழ்கின்றன.
  • கேதுவிற்கு மோட்ச காரகன் என்ற பெயருண்டு.
  • ஞானத்திற்கு காரணமான இவர் ஆன்மீக வழியில் செல்லுதல், மகான்களின் வழியில் செல்லுதல், அவர்களின் இடங்களை தரிசித்தல், வழிபாடு செய்தல், நீதி நூல்கள், உபனிஷத்துக்களின் வழியில் செல்ல விரும்புதல், ஆகியாற்றை கேது தருகிறார்.
  • தாய்வழி பாட்டனார் மற்ரும் அவரது வம்சாவழியைப் பற்றி அறியக்கூடிய கிரகம் கேது.
  • ஞானம், தவம், தியானம், மௌனம், வைராக்கியம், மன வெறுப்பு, சன்னியாசம், ஆன்மீக உணர்வு, விரக்தி, எதிலும் பிடிப்பில்லாமை, மனிதமுகம் இல்லாத தெய்வங்கள், [ அனுமன், வராஹி, வினாயகர்] வாலுள்ள தெய்வங்கள், சித்தர் வழிபாடு குறிப்பவர் கேது.
  • ஆலமரம், மூலிகைச் செடி கொடிகள், அசோக மரம், தர்ப்பப்பை புல், யானை, நாய், கழுகு, அணில், பாம்பு, புழு, முடி, நரம்பு, கைகள், நகம், ஆண்குறி, குதம், தாடி, தசை வளர்ச்சி குறிப்பவர் கேது.
  • ஊஞ்சல், மாடிப்படி, பூஜை அறை, மெழுகுவர்த்தி, செயின், தொட்டி, தையல் இயந்திரம், மண் பாண்டங்கள், புகைக் கூண்டு, கயிறு, சாக்கடை, இசைக் கருவியின் நாண்கள், பின் வாசல், டெலிபோன், நூல், விக், வயர் குறிப்பவர் கேது.
  • மண்பானை, மண்வெட்டி, எலி. சிவப்பு ஆடு, கொசு, புற்றுகள், மூட்டைப்பூச்சி, தோல் நோய்கள், புற்று நோய், குடல் நோய், வெட்டுக்காயம், அடி வயிறு, பாதம், குடல் நோய்கள். சொரி. சிரங்கு, நகச்சுற்று, பருவ கால நோய்கள், கோமா நிலை.
  • வைடூரியம்.
  • கேதுவின் உபகிரகம் தூம கேது. 
  • உடம்பின் உள் நரம்பு மண்டலத்தையும் கேது சுட்டிக்காட்டுவார்.
  • கொள்ளு, கோதுமை இவரின் தானியங்கள்.
  • வட மேற்கு திசை
  • செம்மரம், 
  • குள்ள தோற்றத்தைக் குறிப்பவர் கேது.
  • நட்பு கிரகங்கள்: சுக்கிரன், சனி.
  •  நட்பு வீடுகள்: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
  • கேது ரிஷபத்தில் நீச்சமும், விருச்சிகத்தில் உச்சமும் , கடகம், சிம்மத்தில் பகைமையும் பெறுகின்றன.
  • கேதுவின் நட்சத்திரங்கள்: அஸ்வினி [ மேஷம் ], மகம் [ சிம்மம் ], மூலம் [ தனுசு ] – கேதுவின் நட்சத்திரங்கள் – பிதுர் தோஷங்கள், மற்றும் செய்வினைக் குற்றத்திற்கு ஆட்படுபவர்களாக சுட்டிக் காட்டுகின்றன.
  • கேது – நியாய வழியில் சட்டத்திற்குட்பட்ட செயல்களை விரும்புபவர்.
  • கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களையும் உபயோகிப்பவர்.
  • இவரின் சுவை புளிப்பு.
  • தாமச குணம். முழு அசுபர். 
  • லக்னத்திற்கு 8, 12- ல் இருப்பதை மறைவு ஸ்தானமாக சொல்லப்படுகிறது.
  • கேது திசா ஏழு ஆண்டுகள். 
  • இவரின் அதிதேவதை – வினாயகர், சண்டிகேசுவரர்.
  • கேது கிறிஸ்தவர்களையும், அவர்கள் வாழும் இடங்களையும் குறிப்பவர்.
  • வெட்டுபவர் – ராகு. தைப்பவர் – கேது.
  • முள் செடிகள், சுருள் கம்பிகள், மின் கம்பிகள். பீன்ஸ், புடலங்காய் , தயல் இயந்திரம், தொலை பேசி, நூல், நெருப்பு, பிறப்புருப்பு, பில்லி சூன்யம், பாலைவனம், புனிதமான இடம், பைத்தியம், மடாதிபதி ஆகியவற்றையும் குறிப்பவர் கேது பற்று பாசங்களைத் துறத்தல்.
  • முக்கியமான நரம்பு மண்டலங்களை குறிப்பவர் கேது.
0% Complete