வர்க்க சக்கரத்தின் குழுக்கள் 16 வகை வர்க்க சக்கரங்கள் கீழ் கண்ட சிறு (sub -heading) தலைப்பின் கீழ் வகைபடுத்தப்பட்டுள்ளது.
1.ஷட் வர்க்கம் அ.) ராசி ஆ) ஹோரா இ) திரேக்காணம் ஈ) நவாம்சம் உ) சப்தாம்சம் ஊ) திரிம்சாம்சம்
2.சப்தவர்க்கம் மேற்கண்ட ஆறு வர்க்க சக்கரம் + துவதசாம்சம் சேர்த்து சப்தவர்க்கம் எனப் படுகிறது
3.தசவர்க்கம் மேற்கண்ட ஏழு வர்க்க சக்கரத்துடன்
தசாம்சம் சப்தாம்சம் சஷ்டி யாம்சம் சேர்த்து தசவர்க்கம் எனப் படுகிறது.
4.சோடச வர்க்கம் அனைத்து 16வகையான சக்கரங்களும்
வர்க்க சக்கரங்கள்
.. அனைத்துபலன்கள்
D1.ராசி | D2.ஹோரா.. செல்வம்-பணம் | D3.திரேக்காணம்.. சகோதரம் | D4.சதுர்தாம்சம்..வீடு -சொத்து-அதிர்ஷ்டம் |
D7.சப்தாம்சம்… புத்திர பாக்கியம் | D9.நவாம்சம்… திருமணம் | D10.தசாம்சம்… தொழில் | D12.துவதசாம்சம்.. பெற்றோர்கள் |
D16.சோடசாம்சம்.. மகிழ்ச்சி- | D20.விம்சாம்சம்.. ஆன்மீக விசயங்கள் | D24.சித்தாம்சம்.. (சதுர் விம்சாம்சம்) கல்வி-அறிவு | D27.நட்சத்திராம்சம்.. (பாம்சம்-) பலம்-பலவீனம் |
D30.திரிம்சாம்சம்.. தண்டனை-ஆழமும் | D40.கவேதாம்சம.. சுப-அசுப நிகழ்வு- தாய் வழி சொத்து | D45.அக்க்ஷவேதாம்சம்.. அனைத்து விஷயங்கள்- தந்தை வழி சொத்து | D60.ஷஷ்டி யாம்சம்.. அனைத்து விஷயங்களும்
|
“D” என்பது Division அதாவது பிரிப்பது என்பதை காட்டுகிறது.
வர்க்க சக்கரத்தின் அடிப்படை
கிரகத்தின் ஆட்சி பெற்ற வீடு… கிரகத்தின் சொந்த(ஆட்சி பெற்ற) ராசி என்பது வசிப்பிடம் போன்றது சுதந்திரமாக இயல்பாக இருக்கும் இடம்.
உச்ச ராசி என்பது மகிழ்வாக இன்பமாகப் பொழுதைக் கழிக்கும் இடம் ஆகும். நீச ராசி என்பது பலமில்லாது என்பதும் வெறுக்கத்தக்க விருப்பம் இல்லாத இடம் போன்றது.
மூலத்திரிகோணம் என்பது கடமைகளை செய்யும் இடமாகும்.
வர்க்க சக்கரத்தில் மூலத்திரிகோணம் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.