மிருகசீரிடம் 






மிருகம் என்றால் விலங்கு. சீரிடம் என்றால் சிரசு அல்லது தலை என்று பொருள். இந்த நட் சத்திரத்தின் உருவம் மானின் தலையை போல் தோற்றம் அளிப்பதால், காரணப் பெயராக மிருகசீரிடம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சில நூல்களில் இதன் உருவம் தேங்காய் கண் என்றும் மனிதத்தலை என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆகும் .
இது ஒரு உடைந்த நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரமானது ரிஷபத்திலும் மிதுனத்திலும் வியாபித்துள்ளது . இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் கட்டிலின் கீழ் ஆகும்.
இந்த நட்சத்திர த்தின் உருவம் மான் தலைப்போல் காணப்படுவதால் ஆடு மாடுகள் குதிரைகள் வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும். முற்காலத்தில் மிருகங்களே வாகனமாக பயன்படுத்தி உள்ளனர் தற்காலத்தில் இயந்திர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். எனவே வாகனமேற உகந்த நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் என்பதால் செவ்வாய் காரகத் தொழில் களான ஆயுதப் பயிற்சி மற்றும் விவசாய வேலைகள் செய்வதற்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
இந்த நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு மூன்றாம் இடமான மிதுனத்தில் அமைந்துள்ளது.
மூன்றாமிடம் வலது காதைக் குறிக்கும். செவ்வாய் கூர்மையான ஆயுதத்தை குறிக்கும். எனவே காதுகுத்தல் போன்ற காரியங்களுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
காது கேளாதவர்கள் காது நோய் சிகிச்சை பெற விரும்புவர்கள் இந்த நட்சத்திரத்தில் சிகிச்சை தொடங்கினால் சிறப்பு.
3-ஆம் இடம் என்பது கையையும் குறிக்கும். எனவே பிறரிடம் கை நீட்டி உதவி கேட்க நினைப்பவர்கள் இந்த நட்சத்திரத்தின் உதவி கேட்கலாம்.
சுக்கிரனுடைய வீட்டையும், புதனின் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரம் மிருகசீரிடம் என்பதால் காதல் முயற்சிகளில் ஈடுபட உகந்த நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தன்று வண்டி வாகனங்கள் வாங்க மென்மேலும் விருத்தி அடையும்.
பெண்கள் காதில் புதிய கம்மல் அணியும் போது மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று அணிந்தால் மேலும் புதிய நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
வண்டி வாகன பிராப்தி, கால்நடை அபிவிருத்தி அடைய விரும்புவர்கள் தொடர்ந்து மூன்று மாதகாலம் மிருகசீரிடம் நட்சத்திர நாளில் சுவாமிமலை, அல்லது விராலிமலை அல்லது அவரவர் ஊரில் உள்ள முருகர் ஆலயம் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும்.