அஸ்வினி 
நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமானது அசுவினி ஆகும்.
அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.
இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் குதிரையின் முகம் போல் தெரிவதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.
அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது.
அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சூரியன் ஆகும்.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி ஆகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சூரியன் எனப் பார்த்தோம்,
சூரியனின் அதிதேவதை சிவன் ஆகும்.
எனவே அஸ்வினி நட்சத்திரம் நடப்பில் உள்ள நாட்களில், சிவபெருமானை வணங்கி விட்டு, அரசு சம்பந்தமான காரியங்கள் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம சூரியனாகும்.
சூரியன் உச்சம் அடையும் போது அவன் மிகவும் பிரகாசமாக ஜொலிப்பான்.
எனவே அஸ்வினி நட்சத்திரம் நடப்பிலுள்ள நாளில் வைரம் தங்கம் வெள்ளியில் ஆன ஆபரணங்கள் வாங்க சிறப்பாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேதுவாகும்.
கேது ஞான காரகன், மோட்ச காரகன் என்று பெயர் .
எனவே ஆலய வழிபாடு செய்வதற்கும் சாஸ்திர பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏற்ற நட்சத்திரம் ஆகும்.
அசுவினி நட்சத்திரமானது, உடல் உறுப்பில் தலைப் பகுதியைக் குறிக்கும் ராசியான மேஷத்தில் அமைந்துள்ளது.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது- தலைமுடி யைக் குறிக்கும் கிரகமாகும் .
எனவே கோயிலில் சென்று மொட்டை அடித்துக் கொள்பவர்கள், அசுவினி நட்சத்திரத்தன்று மொட்டை அடித்துக்கொள்வது சிறப்பு.
குறிப்பாக குழந்தைகளுக்கு முதன் முறையாக மொட்டை அடிப்பவர்கள் அஸ்வினி நட்சத்திரம் என்று அடித்துக் கொள்ள வேண்டும்.
நூல்களைக் குறிக்கும் கிரகம் கேதுவாகும்.
கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி என்பதால் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்ட பூணூல் போட உகந்த நட்சத்திரம் ஆகும்.
திருமணத்தின் முக்கியமான மங்கலப் பொருள் தாலிக்கயிறு என்பதாலும் , தாலிக்கயிற்றை குறிக்கும் கிரகம் கேது என்பதாலும், கேதுவின் நட்சத்திரமான அசுவினி திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாகும்.
தலைமுடியில் பூ முடிவதற்கு ஏற்ற நட்சத்திரம் ஆகும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் உருவம் குதிரைமுகம் என்பதால் , குதிரை வண்டி மாட்டு வண்டி குதிரை, மாடு ஆகிய வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும். அந்த காலம் முதல் இந்த காலம் வரை குதிரை வாகனமாகத் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்காலத்தில் குதிரைக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றோம்.
வாகனங்களின் உந்து சக்தி குதிரை திறன்கத்தான் கணக்கிடப்படுகிறது.
எனவே வாகனங்கள் வாங்குவதற்கு உகந்த நட்சத்திரம் அஸ்வினி ஆகும்.
ஏர் கட்டி உழும் கலைப்பையை குறிக்கும் கிரகம் கேது ஆகும்.
எனவே வயல்களை உழுவதற்கு ஏற்ற நட்சத்திரம் ஆகும்.
மரங்களின் வேர்ப்பகுதியை குறிக்கும் கிரகம் கேதுவாகும்.
எனவே மரம் நடுவதற்கு ஏற்ற நட்சத்திரம் ஆகும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி என்பதால் வித்யாரம்பம் செய்ய உகந்த நட்சத்திரமாகும்.
அஸ்வினி ஒரு திரியக்முக் (சமநோக்கு நாள்) நட்சத்திரம் என்பதால்
ஆடு மாடு கால்நடைகள் வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும்.
அரசாங்கத்தில் உயர் பதவியை அடைய விரும்புவர்கள்,
அரசியல் செல்வாக்கு பெற விரும்புவர்கள் பெயர் புகழ் அடைய விரும்புவர்கள் தொடர்ந்து 6 மாத காலம், அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில்
திருவண்ணாமலைக்கு சென்று அங்குள்ள அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு வந்தால் நிச்சயமாக நினைத்த பதவியை அடையலாம்.
அருணன் என்றால் சூரியன் என்று பொருள்
சலம் என்றால் மலை என்று பொருள்.
திருவண்ணாமலை யின் மற்றொரு பெயர் சூரிய மலையாகும்.