பரணி 



27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணி ஆகும்.
பரணி நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு போன்றும், முக்கோணம் போன்றும் காட்சியளிக்கிறது.
பரணி நட்சத்திரம் மேஷ இராசியில் அமைந்துள்ளது.
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆகும் .
பரணி நட்சத்திரத்தில் நீசம் அடையும் கிரகம் சனியாகும் .
பரணி நட்சத்திரத்தின் அதி தேவதை யமனாகும்
பரணி நட்சத்திரத்தின் உருவம் அடுப்பு என்பதால், இந்த நட்சத்திரத்தில் புதிதாக கட்டிய வீட்டில் முதல் முதலாக அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு உகந்த நட்சத்திரமாகும்.
பரணி நட்சத்திரம் அமைந்துள்ள மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் , செவ்வாயை குறிக்கும் இடங்களான செங்கல் சூளை மண்பானைகளை சுடுவதற்கு ஏற்ற நட்சத்திரம் ஆகும்.
பரணி நட்சத்திரத்தின் உருவம், மாந்தீரிக சக்கரங்களில் காணப்படும் முக்கோணம் போல் தோற்றமளிப்பதால் மாந்திரீக சக்கரம் வரைவதற்கும், மாந்த்ரீகர்கள் தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ற நட்சத்திரமாகும்.
பரணி நட்சத்திரத்தின் உருவம் முக்கோணம் எனப்பார்த்தோம் முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் கத்தி முனை போல கூர்மையாக காணப்படும் எனவே ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும், போர் புரிவதற்கும் ஏற்ற நட்சத்திரமாகும். மன்னர்கள காலத்தில் பரணியில்தான் போர் தொடங்குவார்களாம்
பரணி நட்சத்திரம் சாந்தி முகூர்த்தத்திற்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
கணவனை வசியப்படுத்த நினைக்கும் பெண்கள் பரணி நட்சத்திரத்தில் வசிய மந்திரங்களை பயன்படுத்தினால் கணவன் எளிதில் வசியம் ஆவார்கள்.
பரணி நட்சத்திரத்தில் தொழில் காரகன் சனி நீசம் அடைவதால், தொழிலாளர்கள் பிரச்சினை வரும்போது தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உகந்த நட்சத்திரம் ஆகும்.
வேதகாலத்தில் முதல் நட்சத்திரமாக கிருத்திகை யும், கடைசி நட்சத்திரமாக பரணியும் கருதப்பட்டதால் கடை நட்சத்திரமான பரணியில் திருமணம் செய்யக் கூடாது என்ற கருத்து உள்ளது. திருமணத்திற்கு மட்டுமே ஆகாத நட்சத்திரம் பரணி ஆனால் திருமணத்தடைகள் நீங்க ,வழிபாடுகள் செய்ய உகந்த நட்சத்திரம் பரணி ஆகும்.
பரணி நட்சத்திரத்தன்று காஞ்சி சென்று காஞ்சி காமாட்சியை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் பரணி நட்சத்திரம் வரும் நாளில் , காஞ்சிக்குச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்.