- மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜெனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் 1,5,9, ஆகிய கோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் அ·தாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க.
- ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக.
- கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி [ சுக்கிரன் ] மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது.
- சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக.
- கன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் [ சந்திரன் ] திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும்.
- இலக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான1,5,9-இல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவேயாகும்.
- தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும்.
- இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியை இலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான்
- மகர லக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு திரவிய நாசமும் மனை நாசமும் தேசத்தை ஆளும் மன்னரின் பகையுமுண்டாகும். ஆனால் சனி, சேய் [செவ்வாய்] ஆகிய கிரகங்கள் கோணத்தில் வீற்றிருந்தால் நிறைந்த பதி வாகனப் பிராப்தியும், பாதுகாவல் மிகுதியும் உண்டு.
- கும்ப லக்கினத்தில் உதித்த மகனுக்கு அசுரர் தம் குருவான சுக்கிராச்சாரியார் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் உப்பரிகையும் சிறந்த மேடையும், இணையற்ற திரவியமும் செந்நெல் விளையும் நறுவிய பூமியமைதலும் நிச்சியமாக நேரும். மிகு தனவானாக சிறந்து வாழ்வான். ஆயினும் கேந்திர [1,4,7,10] நட்பு ஸ்தானங்களில் சுக்கிரபகவான் இருந்தால் மேற்குறித்த பலனுக்கு நேர்மாறான பலன்கள் தரும்.
- மீன இலக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு புதனும், சுக்கிரனும் தீமை செய்யும் கிரகங்களேயாகும். அவர்களால் வீடு, திரவியம், நிலபுலன் வாய்த்தல். நேர்தலும் அங்கத்தில் மச்சமுண்டாதலும், இவர்கள் திரிகோணஸ்தானத்தில் நின்ற பேர்க்கு வாய்க்கும். இத்தகைய நற்பலன்களை கிரக நிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுக.
Understanding the Sun’s Influence in Astrology
Explore how the சூரியன் signifies power, wisdom, and leadership in your life. இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும்,…

0 Comments