Explore how the சூரியன் signifies power, wisdom, and leadership in your life.
இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும்
பரிதி என்றும் கூறப்படும் சூரியன் நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான்.
சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும்

0 Comments